• Breaking News

    February 10, 2018

    காதல் மாறவில்லை

    கடல் கடந்து 
    வந்த பின்னும்
    உன் மீது நான் 
    கொண்ட 
    காதல் மாறவில்லை

    என்னை பிரிந்து 
    நீசென்ற பின்னும் 
    என்இரு விழியின் ஈரம் 
    அது தீரவில்லை

    வழிந்தோடும் என் 
    கண்ணீர்க்கு
    வாசல்படிகள் இல்லை

    தெளிந்தோடும் 
    நீர்கள்என்றும் 
    தீர்த்தமாகுவமில்லை

    கலைந்தோடும் மேகமே
    என் காதல்கதை தான்
    சோகமே
    வளைந்து போகும் வானமே
    என் வாழ்க்கையின்
    வலி தான் நீளமே...




    ===================================


    எங்கிருநது 
    வந்தாய்
    துரத்தி 
    துரத்திக்
    காதலித்தாய்
    புன்னகையில்
    வீழ்த்தினாய்.....

    பாலைவனமாய 
    இருந்த
    என்னை 
    மலர் தோட்டம்
    ஆக்கினாய் 
    மொட்டாக 
    நானிருக்க......

    கதிரவனாய் 
    ஒளிப்பாய்ச்சி
    உன்
    விழியால்
    மலரச் செய்தாய் 
    காத்திருக்கும்
    என்னவனே !

    இமைமுடி
    நாணம் மேலிட
    வாடாமல் 
    சுகந்தமாய்
    மலர்ந்திருக்கும்
    இநத அழகிய 
    ரோஜா இதழ்களாய்
    உன் 
    எண்ணங்களின்
    வண்ணத்தின்
    கலவையாய்....

    No comments:

    Post a Comment

    பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.