• Breaking News

    April 27, 2012

    அம்மாவிடம் சில கேள்விகள்

    கைகளை மடக்கி - சிறு
    கண்களைச் சுறுக்கி - உன்
    கருவறையில் இருந்தது
    ஒன்பது மாதங்கள் தான்...!

    நீ விரும்பாமலயே
    வெளியில் வந்த என்னை
    முதலில் தொட்டு
    வெளியில் எடுத்தது
    வேறு யாரோ ?? - என்
    உடலில் ஒட்டியிருந்த
    உனது இரத்தத்தைக்
    கழுவி எடுத்து - என்னை
    உன் அருகில் வைத்ததும்
    வேறு யாரோ ??
    ஒட்டாத உறவு என்று
    தொட்டிலில் போடும் முன்
    சொல்லாமல் சொன்னார்களோ ? ?

    உன் மார்பில் பால் நிறைந்து
    வலிக்கும் போது மட்டும்
    எனக்கு நீ பால் கொடுத்த
    அந்த ஒரு மாதம்
    நினைவிலும் இல்லை..!


    நான் பிறந்து முதல் நாள்
    கண் விழித்தது - அந்த
    ஆயாவின் மடியில் தான்...!
    உன்னிடம் சேவை செய்ய
    வந்தவள் –
    எனக்கு எப்படி
    அன்னையானாள் ? ?
    பெற்றவளை விட
    வளர்த்தவளுக்குப்
    பெருமை அதிகம்தானோ ??

    பத்து வருடங்கள் –
    என்னைப் பெற்றதைத் தவிர
    நீ எனக்கு வேறு என்ன 
    செய்தாய் அம்மா ??
    இப்போது எங்கு யாரோடுதான்
    இருக்கின்றாய் ??
    நீ திரும்பி வந்தால்
    உன்னிடம் ஒன்று கேட்கட்டுமா ??
    என் ஆயாவைனியாவது 
    அம்மா என்று
    அழைக்கட்டுமா ??

    நண்பர்களே கவிதையைப் பற்றிய உங்களது எண்ணங்களை மறக்காமல் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.

    12 comments:

    1. அருமை....
      :)))))))))))))

      ReplyDelete
    2. நெகிழ வைத்த கவிதை. நல்லா இருக்கு.

      ReplyDelete
    3. ஒரு குழந்தையின் ஏக்கம் நிறைந்த கவிதை!

      ReplyDelete
    4. அந்த குழந்தையின் அத்தனை வலிகளையும், வெளிப்படுத்திவிட்டது உங்கள் கவிதை ..!

      ReplyDelete
    5. குழந்தையின் ஆசை,ஏக்கம் நிறைந்த வரிகள்.

      ReplyDelete
    6. அந்த அன்னையின் மன நிலையில் இன்னொரு கவிதை இருக்கிறதா நண்பரே?

      ReplyDelete
    7. its very different worship of mother...great thinking

      ReplyDelete
    8. அருமை.
      வாழ்த்துகள்.

      ReplyDelete
    9. நல்ல கவிதை ! பாராட்டுக்கள் !

      ReplyDelete
    10. கவிதை அருமை!

      வளர்த்த ஆயாவை அம்மா என அழைக்க அம்மாவிடம் அனுமதி கேட்கும் வரிகள் ஆழமாய் மனதை தொட்டு நிற்கிறது. மனதைவிட்டு அகலாத கவிதையைக் கொடுத்த சம்பத் குமாருக்கு வாழ்த்துகள்..பராட்டுகள்..!!

      நன்றி சம்பத் அவர்களே..!!

      ReplyDelete
    11. அழகான கவிதை அண்ணா

      ReplyDelete

    பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.