• Breaking News

    March 2, 2012

    ஆப்பிள் வேண்டாமே...


    நீ வைத்துச் சென்ற
    ஆப்பிளை,என்னால்
    ருசிக்க முடியாது.தனித்து,
    மருந்து மாத்திரைகளோடு
    கிடக்கும் என்னைப்
    போலவே அதுவும்..!

    நாளை விடைபெறும்
    பக்கத்துப் படுக்கைக்காரன் வேறு
    ஏளனமாய்ப் பார்க்கிறான்...!

    மாற்றாமல் இருக்கிறார்கள் இன்னும்
    மூத்திரச் சொட்டுகள் நிறைந்த
    இந்தப் படுக்கை விரிப்பையும்
    இடது கையைப்
    பழக்கிக் கொண்டிருக்கின்றேன்
    கையெழுத்துப் போடவும்...!



    வேலைக்குப் போ
    சம்பாதி,பசியாறு
    குடும்பத்தைக் காப்பாற்று
    நாணப்படாமல் பக்கவாதம் வராத
    யாரையாவது மணந்துகொள்
    எனக்கு ஒன்றும் 
    ஆட்சேபனையில்லை...!

    மேலும்,அடுத்த முறை
    ஆப்பிள் கொண்டுவர 
    வேண்டாம்.

    மாறாக,மை நிரம்பிய
    ஒரு பேனாவுடன்
    கெட்ட கனவுகள் அல்லாத
    இரவுகளைக் கொண்டுவா – அந்த
    சணல் காது கொண்ட
    பிளாஸ்டிக் கூடையில்...!

    நன்றி நண்பர்களே!  கவிதை பற்றிய உங்களது எண்ணங்களை மறக்காமல் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


    Cute Parents ல் இன்றைய பதிவு 


    Top Ten Birthday Party Tips

    28 comments:

    1. kavithai romba touching aa irukku...

      padichavun idayam kanathup pogach seiythu..


      unmai sambavamaa

      ReplyDelete
    2. கவிதை அழகாக இருக்கு. மனதை என்னவோ செய்கிறது. நான் ஆப்பிள் கொண்டுவரவில்லை, பின்னூட்டம் மட்டும்தான் கொண்டு வந்திருக்கிறேன்:).

      ReplyDelete
    3. இந்தாங்க, நிறைய நல்ல இரவுகள், வச்சுக்கங்க. கவலைப்படாதிங்க..

      ReplyDelete
    4. @கலை said... 1

      ///Mar 2, 2012 12:56:00 AM
      kavithai romba touching aa irukku...

      padichavun idayam kanathup pogach seiythu..

      unmai sambavamaa///

      வணக்கம் சகோ..உண்மையுடன் கலந்த கற்பனையும் சேர்ந்த கலவையே..

      வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி

      ReplyDelete
    5. @ athira said...

      //கவிதை அழகாக இருக்கு. மனதை என்னவோ செய்கிறது. நான் ஆப்பிள் கொண்டுவரவில்லை, பின்னூட்டம் மட்டும்தான் கொண்டு வந்திருக்கிறேன்:).//

      மிக்க நன்றி சகோ

      ReplyDelete
    6. @தமிழ்வாசி பிரகாஷ் said...

      //இந்தாங்க, நிறைய நல்ல இரவுகள், வச்சுக்கங்க. கவலைப்படாதிங்க..//

      நன்றி பிரகாஷ் அண்ணா

      ReplyDelete
    7. உணர்வுக் கவிதை...
      ஆப்பிள் பார்க்கும் போது கட்டாயமா இந்த கவிதை தான் நினைவு வரும்...

      ReplyDelete
    8. மாறாக,மை நிரம்பிய
      ஒரு பேனாவுடன்
      கெட்ட கனவுகள் அல்லாத
      இரவுகளைக் கொண்டுவா – அந்த
      சணல் காது கொண்ட
      பிளாஸ்டிக் கூடையில்...


      என்ன டச்சிங்கான வரிகள்

      ReplyDelete
    9. இது வித்தியாசமான வரிகளாக உணர்வுடன் உள்ளது. கவிதை சோகம். நன்று.
      வேதா. இலங்காதிலகம்.

      ReplyDelete
    10. //மாறாக,மை நிரம்பிய
      ஒரு பேனாவுடன்
      கெட்ட கனவுகள் அல்லாத
      இரவுகளைக் கொண்டுவா – அந்த
      சணல் காது கொண்ட
      பிளாஸ்டிக் கூடையில்...!//

      நெகிழ்ச்சியான வரிகள்.அருமை.

      ReplyDelete
    11. அருமைப்பதிவு வாழ்த்துகள்

      ReplyDelete
    12. கவிதை நன்றாகவுள்ளது நண்பா.

      ReplyDelete
    13. ஆஸ்பத்திரிக்கு யாரையோ பார்க்க போயிருக்கிங்க......!

      ReplyDelete
    14. //நீ வைத்துச் சென்ற
      ஆப்பிளை,என்னால்
      ருசிக்க முடியாது.//

      ஏன்? அவங்க கடைக்காரனுக்கு தெரியாம சுட்ட ஆப்பிளா?

      ReplyDelete
    15. //மாறாக,மை நிரம்பிய
      ஒரு பேனாவுடன்
      கெட்ட கனவுகள் அல்லாத
      இரவுகளைக் கொண்டுவா – //

      கரண்ட் கட்ல பகலே இருட்டாதான் இருக்கு. தனியா ஒரு இரவை கொண்டு வரனுமாக்கும்.

      ReplyDelete
    16. ஒரு பேனாவுடன்
      கெட்ட கனவுகள் அல்லாத
      இரவுகளைக் கொண்டுவா – அந்த
      சணல் காது கொண்ட
      பிளாஸ்டிக் கூடையில்...!
      வலி மிகும் வரிகள் .

      ReplyDelete
    17. மருத்துவமனைகளின் நிலைமையையும் சிகிச்சை பெறுபவரின் எண்ணங்களையும் அவரது பார்வையில் தந்திருக்கிறீங்க,

      ReplyDelete
    18. நெகிழ்ச்சியான கவிதை நண்பா...

      ReplyDelete
    19. வலியின் தாக்கம் வரிகளில்!

      ReplyDelete
    20. மனதைத் தொட்ட கவிதை.அருமை சம்பத்குமார் !

      ReplyDelete
    21. அழகு கவிதை.
      வாழ்த்துகள்.

      ReplyDelete
    22. தங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.
      பார்க்க:
      http://www.tamilvaasi.com/2012/03/blog-post.html

      ReplyDelete
    23. kavithai manasa romba touch panniduchu..

      ReplyDelete
    24. காலம் போன கடைசியில்
      கனவுகளை வெறுக்கும் ...........
      கால கொடுமை ........

      அருமையாக உணர்வுகளை பதிசெய்திருகீங்க வாழ்த்துக்கள்

      ReplyDelete
    25. மிக அருமையாக சொன்னிர்கள்..நான் படித்ததத்தில் பிடித்தது ..
      சளி... காரணங்களும் விடுபட வழிகளும்!
      நோயில்லாத சுகமான வாழ்வை விரும்புபவர்களுக்கு manam.online/news/2016-MAY-06/Solutions-for-cold

      ReplyDelete

    பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.