• Breaking News

  December 1, 2011

  கூட்டுச் சதியாலோசனை

  தோப்பென விரிந்த இடத்தில்
  வீடுகளின் தொகுப்பு... இப்போது
  எஞ்சிய மரமொன்றின் கிளையொன்றில்
  தொங்கிக் கொண்டிருந்தது தேன்கூடு...!

  நாடோடியின் முதுகில் தொங்கும்
  சாக்கு மூட்டையின் தோற்றம்...!
  ஒரு வால் சிறுவனின் துடுக்குப் 
  பார்வையில் எப்படியோ பட்டுவிட்டது அது...!

  அடுத்த நொடியே செய்தி பரவ
  அணி திரண்டெழுந்தது ஆட்கள்கூட்டம்...!

  உப்பிய அதன் தோற்றத்தைக் கண்டு
  அறுந்து நிலத்தில் விழுவது போன்ற
  அதன் கோலத்தைக்கண்டு
  கூட்டம் சற்றே பின் வாங்கியது...!  மனிதனின் காவல் மீறி
  இயற்கை செய்த சதி என்றார்கள்..!
  பிள்ளைகளை ஓரமாய் இழுத்து
  எச்சரிக்கை செய்தாள் ஓர் கிழவி
  தேனீக்கள் கொட்டினால்
  என்னென்ன ஆகுமென்று விவரித்தார் இன்னொருவர்..!

  அதைக் கலைப்பதற்காகவே ஜென்மம் 
  எடுத்தது போல் ஆவேசத்தில் துடித்தனர் என் நண்பர்கள்...!

  அதுபாட்டுக்கு அது
  நாம் பாட்டுக்கு நாம்
  அப்படியே இருப்போம் என்றேன் நான்...!

  அனுபவித்தவனுக்குத்தான் வலிதெரியும் என
  ஆர்பரித்தது ஓர் தொண்டை
  நம் இடத்தில் அதற்கென்ன வேலை என
  நாக்கு வறளக் கத்தியது...!  அதற்குறிய இடத்தில்தானே நாம் இருக்கிறோம்
  என்று முணுமுணுத்தேன் நான்...!

  கொஞ்ச நேரம் சும்மா இருடா என்று
  உடனடியாக என் வாய் மூடப்பட்டது..!

  குறவன் மூலம் கூட்டை அழிக்கலாம்
  தேனும் கிடைக்கும் என்றாள் நடுவயசுக்காரி...!

  அந்த யோசனை அப்படியே ஏற்கப்பட்டது
  அடுத்த அமாவாசைக்கு அழிப்பது நல்லதென்றார்கள்
  இப்போதே குறவனிடம் சொல்லி வைக்கலாம் என்றனர்...!

  மனிதர்கள் தீட்டும் சதியை
  தேனீக்களுக்கு தெரிவிக்கும் வழி தெரியாமல்
  விக்கித்து நின்றேன் நான்...!  நண்பர்களே கூட்டுசதியாலோசனை கவிதைபிடித்திருந்தால் தங்களது கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்


  31 comments:

  1. >>>மனிதர்கள் தீட்டும் சதியை
   தேனீக்களுக்கு தெரிவிக்கும் வழி தெரியாமல்
   விக்கித்து நின்றேன் நான்...!<<<

   தேனீக்களுக்கு மட்டுமா? சம்பத்.. இயற்கை பேரழிவுக்கு காரணமே இந்த மனித இனம்தானே..!!!

   இந்த மனித இனத்தின் சுயநலத்தால் தானே அத்தனை இயற்கைச் செல்வங்களும் அழிந்துகொண்டிருக்கிறது..!!

   பகிர்வுக்கு நன்றி சம்பத் அவர்களே..!!!

   ReplyDelete
  2. மனிதர்கள் தீட்டும் சதியை
   தேனீக்களுக்கு தெரிவிக்கும் வழி தெரியாமல்
   விக்கித்து நின்றேன் நான்...!/

   மனிதமனம்!

   ReplyDelete
  3. அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படுவது சின்ன வயதிலேயே ஆரம்பித்து விடுகிறது
   good kavithai

   ReplyDelete
  4. //மனிதர்கள் தீட்டும் சதியை
   தேனீக்களுக்கு தெரிவிக்கும் வழி தெரியாமல்
   விக்கித்து நின்றேன் நான்...!//

   ஒன்னு பண்ணுங்க அந்த கூட்டுக்குள்ள தலைய விட்டு சொல்லி பாருங்க கேக்குதான்னு பார்ப்போம்... ஹா ஹா கவிதை அருமை...

   ReplyDelete
  5. @ தங்கம்பழனி said...
   ///>>>மனிதர்கள் தீட்டும் சதியை
   தேனீக்களுக்கு தெரிவிக்கும் வழி தெரியாமல்
   விக்கித்து நின்றேன் நான்...!<<<

   தேனீக்களுக்கு மட்டுமா? சம்பத்.. இயற்கை பேரழிவுக்கு காரணமே இந்த மனித இனம்தானே..!!!

   இந்த மனித இனத்தின் சுயநலத்தால் தானே அத்தனை இயற்கைச் செல்வங்களும் அழிந்துகொண்டிருக்கிறது..!!

   பகிர்வுக்கு நன்றி சம்பத் அவர்களே..!!! //

   உண்மைதான் நண்பரே..

   முத்ல் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி

   ReplyDelete
  6. @ இராஜராஜேஸ்வரி said...
   //மனிதர்கள் தீட்டும் சதியை
   தேனீக்களுக்கு தெரிவிக்கும் வழி தெரியாமல்
   விக்கித்து நின்றேன் நான்...!/

   மனிதமனம்! //

   வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி சகோ..

   ReplyDelete
  7. @ rufina rajkumar said...

   //அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படுவது சின்ன வயதிலேயே ஆரம்பித்து விடுகிறது
   good kavithai//

   மிக்க நன்றி சகோ..

   ReplyDelete
  8. கவிதை அருமை சகோ

   பிறருக்கு இரங்கும் மனது சொர்க்கம்..

   ReplyDelete
  9. ஜடியா கொடுக்கறாரு பாருங்க..சசி...
   சசி அந்தபக்கமா வரும் போது ஒரு சின்ன கல்லு கூடு மேல எரிஞ்சிருங்க..
   வேடிக்கை நல்லாயிருக்கும்....
   நீங்கள் இதற்கென்றே ஆள் இருக்கின்றார்கள் அழுங்காம குழுங்காம கையை தேன் கூட்டினில் விட்டு ராணித்தேனியை பிடித்து...வேறு இடத்தில் இறகை வெட்டிவி்ட்டு ஒட்டிவைத்து விடுவார்கள் எல்லா தேனியும் பறந்து அங்க ஒட்டிக்கும்
   விசாரித்து பாருங்க....

   ReplyDelete
  10. மனிதன்- உலகில் எதனைத்தான் விட்டு வைத்தான்.
   மனிதன்- மனிதஉருவில் மிகவும் கொடிய மிருகம்.

   ReplyDelete
  11. கஷ்டப்பட்டு தேனீக்கள் சேகரித்த தேன் அங்கே கூட்டில், அதை எளிமையாய் சேகரிக்க இங்கே நிலத்தில் ஆரவாரம்? உலகமே இதான்.   லஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா? வீடியோ இணைப்பு

   ReplyDelete
  12. அருமையாக கவிதை பாஸ் சூப்பரா இருக்கு

   ReplyDelete
  13. ரசித்தேன், உங்கள் பார்வை வித்தியாசமாய் இருக்கிறது...

   ReplyDelete
  14. தங்கள் உணவு இப்படி ஒருவரால் பரிபோனால் என்ன துன்பம் அடைவார்கள்,
   ஆனால் தேனீயின் உணவை அபகரிக்க திட்டம் தீட்டி செயல் படுகிறார்கள்...

   ReplyDelete
  15. என்னமா யோசிக்கிறீங்கய்யா..நல்லா இருக்கு மாப்ள!

   ReplyDelete
  16. நம் இடத்தில் அதற்கென்ன வேலை என
   நாக்கு வறளக் கத்தியது...!

   அதற்குறிய இடத்தில்தானே நாம் இருக்கிறோம்
   என்று முணுமுணுத்தேன் நான்...!

   //

   அதானே !அதது அதனதன் இடத்தில இருந்து விட்டால் எல்லாம் சௌக்கியமே-கண்ணதாசன் வரிகள் நினைவுக்கு வருது

   ReplyDelete
  17. இனிமேலதேன் பார்க்கும்போதெல்லாம் இந்த கவிதைதான் நினைவில் வரும்

   ReplyDelete
  18. @ சசிகுமார் said...
   ////மனிதர்கள் தீட்டும் சதியை
   தேனீக்களுக்கு தெரிவிக்கும் வழி தெரியாமல்
   விக்கித்து நின்றேன் நான்...!//

   ஒன்னு பண்ணுங்க அந்த கூட்டுக்குள்ள தலைய விட்டு சொல்லி பாருங்க கேக்குதான்னு பார்ப்போம்... ஹா ஹா கவிதை அருமை...////

   வணக்கம் நண்பரே..

   ஐயோ ஏன் கேக்குறீங்க சின்ன வயசில கொட்டும்னு தெரியாம மரத்துல ஏறி கூட்ட கலச்சி கொட்டு வாங்குன வலி இன்னும் விட்டுப்போகல

   ReplyDelete
  19. ஜ.ரா.ரமேஷ் பாபு said...

   //கவிதை அருமை சகோ

   பிறருக்கு இரங்கும் மனது சொர்க்கம்..//

   மிக்க நன்றி சகோ

   ReplyDelete
  20. @ veedu said...

   //ஜடியா கொடுக்கறாரு பாருங்க..சசி...
   சசி அந்தபக்கமா வரும் போது ஒரு சின்ன கல்லு கூடு மேல எரிஞ்சிருங்க..
   வேடிக்கை நல்லாயிருக்கும்....
   நீங்கள் இதற்கென்றே ஆள் இருக்கின்றார்கள் அழுங்காம குழுங்காம கையை தேன் கூட்டினில் விட்டு ராணித்தேனியை பிடித்து...வேறு இடத்தில் இறகை வெட்டிவி்ட்டு ஒட்டிவைத்து விடுவார்கள் எல்லா தேனியும் பறந்து அங்க ஒட்டிக்கும்
   விசாரித்து பாருங்க....//

   ஆமா நண்பா இருக்காங்க..ஆனா இப்பல்லாம் அவங்க கொடுக்குறுதலயும் கலப்படம் இருக்கு

   ReplyDelete
  21. @ அம்பலத்தார் said...

   //மனிதன்- உலகில் எதனைத்தான் விட்டு வைத்தான்.
   மனிதன்- மனிதஉருவில் மிகவும் கொடிய மிருகம்.//

   நிதர்சன உண்மை நண்பரே

   ReplyDelete
  22. @ தமிழ்வாசி பிரகாஷ் said...
   //கஷ்டப்பட்டு தேனீக்கள் சேகரித்த தேன் அங்கே கூட்டில், அதை எளிமையாய் சேகரிக்க இங்கே நிலத்தில் ஆரவாரம்? உலகமே இதான்.//

   உண்மைதான் நண்பரே

   ReplyDelete
  23. @ K.s.s.Rajh said...
   //அருமையாக கவிதை பாஸ் சூப்பரா இருக்கு//

   மிக்க நன்றி நண்பா

   ReplyDelete
  24. @ suryajeeva said...

   //ரசித்தேன், உங்கள் பார்வை வித்தியாசமாய் இருக்கிறது...//

   வாழ்த்திற்க்கு நன்றி தோழரே

   ReplyDelete
  25. @ ராஜா MVS said...

   //தங்கள் உணவு இப்படி ஒருவரால் பரிபோனால் என்ன துன்பம் அடைவார்கள்,
   ஆனால் தேனீயின் உணவை அபகரிக்க திட்டம் தீட்டி செயல் படுகிறார்கள்...//

   ஆமாம் உண்மைதான் நண்பரே வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி

   ReplyDelete
  26. @ விக்கியுலகம் said...

   //என்னமா யோசிக்கிறீங்கய்யா..நல்லா இருக்கு மாப்ள!//

   மிக்க நன்றி மாம்ஸ்..

   ReplyDelete
  27. @ கோகுல் said...
   ////நம் இடத்தில் அதற்கென்ன வேலை என
   நாக்கு வறளக் கத்தியது...!

   அதற்குறிய இடத்தில்தானே நாம் இருக்கிறோம்
   என்று முணுமுணுத்தேன் நான்...!

   //

   அதானே !அதது அதனதன் இடத்தில இருந்து விட்டால் எல்லாம் சௌக்கியமே-கண்ணதாசன் வரிகள் நினைவுக்கு வருது////

   வாங்க கோகுல் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி

   ReplyDelete
  28. @ Lakshmi said...

   //இனிமேலதேன் பார்க்கும்போதெல்லாம் இந்த கவிதைதான் நினைவில் வரும்//

   மிக்க நன்றி அம்மா..

   ReplyDelete
  29. hii.. Nice Post

   For latest stills videos visit ..

   www.chicha.in

   www.chicha.in

   ReplyDelete
  30. நல்ல கவிதை.
   வாழ்த்துகள்.

   ReplyDelete
  31. @ Rathnavel said...

   //நல்ல கவிதை.
   வாழ்த்துகள்.//

   வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி ஐயா..

   ReplyDelete

  பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.