• Breaking News

  December 10, 2011

  வேலைக்காரி மைனா..
  அலாரம் அடிச்சி அரமணி ஆவுது
  இன்னுமா தூக்கம் எழுந்துருடி பொண்ணே...!

  அடுப்பு மேட அசிங்கமா கிடக்குது
  ராத்திரியே கழுவுடின்னா ஒடம்பு நோவுது...!

  வாசலக் கழுவு... கோலம் போடு
  தண்ணி வருதுடி இப்பவே புடிச்சுவை
  கோழிகள எல்லாம் தெறந்து உடுடி
  சாணிய அள்ளு... கொட்டாயக் கழுவு
  கறக்கறவன் வந்தா சத்தம் போடுவான்...!

  பெரியண்ணன் புள்ள ஸ்கூலுக்கு போவணும்
  சீக்கிரம் பலகாரம் செஞ்சி அனுப்புடி
  சின்னக்க புள்ள அழுவுது பாருடி..!  ஆர்லிக்ஸ் இருக்குது கரச்சி குடுப்பாட்டு
  அக்காவ எழுப்பாத பாவம் தூங்கட்டும்
  ஆத்தா ஊட்லயாவது அக்கடான்னு தூங்கட்டும்
  தம்பிங்க செருப்புங்கள தொடச்சி எடுத்துவை
  புதுத்தண்ணி ஊத்தி பாட்டில்ல குடுத்தனுப்பு...!

  எட்டு மணிக்குள்ள எதுக்குடி நாஷ்தா
  துன்னு துன்னே ஊட்ட அழிங்கடி
  மாடு மாதிரி எதுக்கு நிக்கிற...

  ஆலைக்கு சாப்பாடு பத்தரைக்குப் போவணும்
  அரிசிய எடுத்துக் கழுவுடி கடன்காரி
  மீன் வாங்கப்போன சின்னவனக் காணோம்
  வந்தா நறுவிசா ஆய்ஞ்சி கொழம்புவை...!

  கீரத் தோட்டத்துல ஆடுங்க மேயுதே
  கண்ணுங்க அவிஞ்சா போச்சு தொறத்துடி
  அழுக்குத் துணிங்கள தொவச்சி ஒலத்து
  நேத்து ஒலந்ததுக்கு இஸ்திரி போட்டுவை
  ராத்திரி விரதம்டி தோசைக்கு மாவரை...!  பருத்தி புண்ணாக்கு மாட்டுக்கு கலக்கிவை
  பத்மா வீட்டிலிருந்து கழனிப்பான தூக்கிவா...!

  சும்மாத்தான இருக்கிற சாணிய கொழப்பு
  உண்டையா புடிக்கறன் செவுத்துல தட்டுடி...!

  வெட்டி முறிச்சாப்ல என்னடி அலுப்பு
  பொணம் மாதிரி வந்து விழுவுற...!

  மார்ச் மாதம் பரீச்ச வருதுல்ல
  இந்த வருஷமாது பாஸாகுர வழியப்பாரு..
  டிகிரி இருந்தாத்தா எவனாச்சிம் கட்டுவான்
  ஒனத்தியா ஒக்காந்து படிடி தடிச்சி..
  எனக்கு நேரந்தவறாம டீயக் கொண்டாந்து குடுடி..!


  பதிலேதும் பேச முடியாமல் 
  புத்தகத்தை கையிலெடுத்தாள் மைனா...  நண்பர்களே வேலைக்காரியின் வாழ்க்கை கவிதை பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்


  36 comments:

  1. வேலைக்காரியின் நிலையை நன்றாக சொன்னீர்கள்..மாடிப் படி மாதுவை ஞாபகப்படுத்தியது..வாழ்த்துக்கள்.

   ReplyDelete
  2. ஒரு முறை நண்பனின் வீட்டில் வாடகைக்கு இருந்த குடும்பத்தில் ஒரு சிறுமி இப்படி தான் வேலை செய்து கொண்டிருந்தாள்... வீட்டுக்குள் படுக்க வைக்க மாட்டார்கள்.. வராண்டாவில் தான் அவள் குடித்தனம்... நல்ல மழைக்காலத்தில் நனைந்து உடல் சரியில்லாமல் வீட்டுக்கு போனவள் தான்.. பிறகு என்ன ஆனால் என்று தெரியவில்லை.. அந்த சிறுமியின் நினைவு தற்பொழுது உங்கள் கவிதையில் மீண்டும் நிழலாடுகிறது

   ReplyDelete
  3. சிறுமியின் வலிகள் வரிகளாக... அருமை நண்பரே!

   ReplyDelete
  4. நண்பா... சிறுமி வேலைக்காரியாக படும் கொடுமைகளையும், அவள் படிக்க நேரம் இல்லாமல் தவிப்பும் தங்கள் கவி வரிகளில் அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.

   ReplyDelete
  5. அத்தனை வேலைக்கார பிள்ளைகளின் நிலையும் இதுதான். மனதைக்கனக்கவைக்கும் விடயத்தை அழகாக சொல்லியிருக்கிறியள்.

   ReplyDelete
  6. யப்பா நமக்கே மலைப்பா இருக்கே!குழந்தை என்ன செய்யும்.....

   ReplyDelete
  7. குழந்தை தொழிலாளர்களின் அவல நிலமை சரியா சொன்னீங்க.ஐயோ பாவம்.

   ReplyDelete
  8. கிராமிய மணம் வீசும் வார்த்தைகள்.
   நெஞ்சைசுடும் நிஜங்கள் வரிகளாய்

   ReplyDelete
  9. மைனா மாதிரியான பெண்களை நினைத்தால் மனம் கலங்குகிறது.

   ReplyDelete
  10. இவவளவு பிரச்சனைகளுக்கு மத்தியில் அவள் படிக்கும் ஒவ்வொறு எழுத்தும் உயர்ந்ததே...

   இதுபோன்ற மைனாக்கள் நிறைய இருக்கிறது...


   நல்லதொரு கவிதை...

   ReplyDelete
  11. வலி நிறைந்த அவள் வாழ்கையை வார்த்தையில் தொடுத்திருக்கீங்க மாப்ளே!

   ReplyDelete
  12. அருமையான கவிதை.
   வேதனையாக இருக்கிறது.

   ReplyDelete
  13. இத்தனை வேலையையையும் இப்பட் வேலையாள் மெலே சுமததி கொண்டே தான் இருக்கின்றனர்
   அத்ையும் கவிதையாவே எழுடதிட்டீஙக்
   ரொம்ப வேதனை தான்

   ReplyDelete
  14. சில கவிதைகள் சுளீரென வேதனை தரும் இந்த கவிதையும் அவற்றுள் ஒன்று

   ReplyDelete
  15. @ மதுமதி said...

   //வேலைக்காரியின் நிலையை நன்றாக சொன்னீர்கள்..மாடிப் படி மாதுவை ஞாபகப்படுத்தியது..வாழ்த்துக்கள்.//

   முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே

   ReplyDelete
  16. @ கவி அழகன் said...

   //வாழ்த்துக்கள்//

   வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி நண்பரே

   ReplyDelete
  17. @ suryajeeva said...

   //ஒரு முறை நண்பனின் வீட்டில் வாடகைக்கு இருந்த குடும்பத்தில் ஒரு சிறுமி இப்படி தான் வேலை செய்து கொண்டிருந்தாள்... வீட்டுக்குள் படுக்க வைக்க மாட்டார்கள்.. வராண்டாவில் தான் அவள் குடித்தனம்... நல்ல மழைக்காலத்தில் நனைந்து உடல் சரியில்லாமல் வீட்டுக்கு போனவள் தான்.. பிறகு என்ன ஆனால் என்று தெரியவில்லை.. அந்த சிறுமியின் நினைவு தற்பொழுது உங்கள் கவிதையில் மீண்டும் நிழலாடுகிறது //

   தங்களின் வருகைக்கும் ஆழமான கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே

   ReplyDelete
  18. @ Abdul Basith said...

   //சிறுமியின் வலிகள் வரிகளாக... அருமை நண்பரே!//

   மிக்க நன்றி நண்பரே

   ReplyDelete
  19. @ தமிழ்வாசி பிரகாஷ் said...

   //நண்பா... சிறுமி வேலைக்காரியாக படும் கொடுமைகளையும், அவள் படிக்க நேரம் இல்லாமல் தவிப்பும் தங்கள் கவி வரிகளில் அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.//

   வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி நண்பரே

   ReplyDelete
  20. மனம் கனக்க வைக்கும்
   மைனாவின் வாழ்வு!

   ReplyDelete
  21. @ அம்பலத்தார் said...

   //அத்தனை வேலைக்கார பிள்ளைகளின் நிலையும் இதுதான். மனதைக்கனக்கவைக்கும் விடயத்தை அகாக சொல்லியிருக்கிறியள்.//

   மிக்க நன்றி நண்பரே

   ReplyDelete
  22. @ veedu said...

   //யப்பா நமக்கே மலைப்பா இருக்கே!குழந்தை என்ன செய்யும்.....//

   ஊருக்கு 30 % வீடுகளில் இதே நிலைமைதான் நண்பரே

   ReplyDelete
  23. @ Lakshmi said...

   //குழந்தை தொழிலாளர்களின் அவல நிலமை சரியா சொன்னீங்க.ஐயோ பாவம்.//

   வாழ்வியல் நிதர்சனம் அம்மா..

   வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி அம்மா

   ReplyDelete
  24. @ கோகுல் said...

   //கிராமிய மணம் வீசும் வார்த்தைகள்.
   நெஞ்சைசுடும் நிஜங்கள் வரிகளாய்//

   வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி நண்பா..

   ReplyDelete
  25. @ RAMVI said...

   //மைனா மாதிரியான பெண்களை நினைத்தால் மனம் கலங்குகிறது.//

   நிதர்சனம் சகோ வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி

   ReplyDelete
  26. @ கவிதை வீதி... // சௌந்தர் // said...

   //இவவளவு பிரச்சனைகளுக்கு மத்தியில் அவள் படிக்கும் ஒவ்வொறு எழுத்தும் உயர்ந்ததே...

   இதுபோன்ற மைனாக்கள் நிறைய இருக்கிறது...


   நல்லதொரு கவிதை...//


   மிக்க நன்றி நண்பரே

   ReplyDelete
  27. @ ராஜா MVS said...

   //அருமை....//

   மிக்க நன்றி நண்பரே

   ReplyDelete
  28. @ விக்கியுலகம் said...

   //வலி நிறைந்த அவள் வாழ்கையை வார்த்தையில் தொடுத்திருக்கீங்க மாப்ளே!//

   வணக்கம் மாம்ஸ்

   வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி மாம்ஸ்

   ReplyDelete
  29. @ Jaleela Kamal said...

   //இத்தனை வேலையையையும் இப்பட் வேலையாள் மெலே சுமததி கொண்டே தான் இருக்கின்றனர்
   அத்ையும் கவிதையாவே எழுடதிட்டீஙக்
   ரொம்ப வேதனை தான்//

   வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி சகோ..

   ReplyDelete
  30. @ Rathnavel said...

   //அருமையான கவிதை.
   வேதனையாக இருக்கிறது.//

   மிக்க நன்றி ஐயா..

   ReplyDelete
  31. @ rufina rajkumar said...

   //சில கவிதைகள் சுளீரென வேதனை தரும் இந்த கவிதையும் அவற்றுள் ஒன்று//

   வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி சகோ..

   ReplyDelete
  32. @ இராஜராஜேஸ்வரி said...

   //மனம் கனக்க வைக்கும்
   மைனாவின் வாழ்வு!//

   நிதர்சன உண்மை சகோ..

   ReplyDelete
  33. தங்கள் தளத்தின் பேனர் அருமை...

   ReplyDelete
  34. தங்கம் உருக்கப்படுகிறது.. இரும்பு வளைக்கப்படுகிறது.. மைனா வதைக்கப்படுகிறாள்..!

   ReplyDelete

  பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.