• Breaking News

  December 9, 2011

  குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை - பாகம் 1
  வணக்கம் நண்பர்களே நேற்றைய அலுவலகப் பணி கவிதையை வாசித்து வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.இன்றைய பதிவில் உங்கள் குழந்தையின் செயல்பாடுகள் மீதான உங்களின் அணுகுமுறை தொடர்பாக ஆராயவேண்டிய விஷயங்களையும் அதற்க்கு தேனையான அம்சங்களைப் பற்றியும் அலசுவோம்.பொதுவாகவே அனைத்துப் பெற்றோர்களும்விரும்புவது தங்கள் குழந்தைகள் தலைசிறந்த மேதைகளாக தரணியில் வலம்வர வேண்டுமெனவே ஆசைப்படுகிறார்கள்.ஆனால் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்கான வழைமுறைகள் சரிவரத் தெரிவதில்லை.இதற்க்கான ஒரு பத்து கேள்விகள் கீழே முன் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை படித்து எத்தனை விஷயங்களில் சரி தவறு என்று கணக்கிட்டு உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.பதிவின் இறுதியில் தேவையான அம்சங்கள் பற்றி காண்போம்.

  • பிஸ்கட்டுகள் நிறைந்த ஒரு டப்பாவை உங்களின் இரண்டு வயது குழந்தை திறக்க முயற்சிக்கும்போது, நீங்கள் அந்த செயலை கண்டித்து, குழந்தையிடமிருந்து டப்பாவை பிடுங்கி விடுவீர்களா?
  • உங்கள் குழந்தை சகதியில் விளையாடிக் கொண்டிருந்தால், சத்தம்போட்டு, குழந்தையை சுத்தப்படுத்தி, வீட்டிற்குள், சுத்தமான பொம்மைகள் நிறைந்துள்ள இடத்தில் விடுவீர்களா?
  • நீங்கள் சமையல் வேலையில் மும்முரமாக இருக்கையில், உங்கள் குழந்தை சில காலி அட்டைப் பெட்டிகளை வெளியில் எடுக்கும் சத்தம் கேட்டு நீங்கள் அங்கு சென்று பார்க்கையில், மேலும் ஒரு அட்டைப் பெட்டிக்காக உயரமான அலமாரியில் உங்கள் குழந்தை ஏறிக்கொண்டுள்ளது. இதனால் கோபம் கொண்டு குழந்தையை கடிந்துகொண்டு, அந்த இடத்திலிருந்து குழந்தையை அப்புறப்படுத்தி, தொலைக்காட்சியை இயக்கி அதன் முன்பாக குழந்தையை அமர வைப்பீர்களா?
  • உங்களின் குழந்தை தொலைக்காட்சியின் முன்பாக அமர்ந்து, கார்டூன் சேனல்களையோ அல்லது வர்த்தக விளம்பரங்களையோ ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தால், உங்கள் குழந்தையைப் பார்த்து, சமர்த்து என்று சொல்வீர்களா?
  • ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கையிலேயே, வேறொரு நாற்காலியை இழுக்கும்போதோ, தொலைக்காட்சி சேனலை மாற்றும்போதோ அல்லது இடத்தை விட்டு இறங்கி வேறு எதையாவது தேடி அலைந்து திரியும்போதோ, நீங்கள் பொறுமையை இழந்து, குழந்தையை அதட்டி அதன் பழைய இடத்திலேயே அமர வைப்பவரா?

  • உங்களின் உதட்டு சாய பாட்டிலைப்பார்த்து, அதை எடுத்து தனது உடலில் சாயம் பூசிக்கொண்டு இருப்பதைப் பார்த்தால் நீங்கள் பொறுமையை இழக்கிறீர்களா?
  • உங்களின் பத்து வயது பிள்ளையானது, பல வண்ணங்களில் ஒரு கோணல்மானலான படத்தை வரைந்து வந்து உங்களிடம் காட்டினால், நீங்கள் அதை சில நொடிகள் கடமைக்காக பார்த்துவிட்டு, சூப்பர் என்று சொல்லிவிட்டு, மீண்டும் உங்கள் வேலையில் ஆழ்ந்து விடுவீர்களா?
  • உங்கள் குழந்தை வரைந்ததை என்ன என்று கேட்டு, அதற்கு ஏதேனும் ஒரு மிருகத்தையோ, பறவையையோ அல்லது பொருளையோ உங்கள் குழந்தை சொன்னால், அதைக்கேட்டு ஏளனமாக சிரித்து, குழந்தை சொன்னதை மறுப்பீர்களா?
  • உங்கள் 6 வயது பெண் குழந்தை, தனது அண்ணனின் துப்பாக்கி பொம்மை அல்லது கட்டுமான அமைப்பை எடுத்து விளையாடினால், நீங்கள் அவளிடம் இது பெண்களுக்கானதல்ல, எனவே உனக்கான பொம்மையை எடுத்து விளையாடு என்று சொல்பவரா?
  • உங்கள் பனிரெண்டு வயது குழந்தை உங்களிடம் வந்து, தான் ஒரு விஞ்ஞானியாக போகிறேன் அல்லது தத்துவ ஞானி ஆகப் போகிறேன் என்று சொன்னால், அது மிகவும் கஷ்டம் அல்லது முடியாத காரியம் என்று சொல்பவரா நீங்கள்?

  மேற்கண்ட பத்து கேள்விகளுக்கு உங்களின் பதில் இல்லை என்று இருந்தால், நீங்கள் ஒரு சிறந்த பெற்றோர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. உங்கள் குழந்தைகளை மேதைகளாக வளர்க்கும் செயல்பாட்டில், நீங்கள் முழுமையாக ஒத்துழைக்கிறீர்கள் என்று அர்த்தம்.

  அதேசமயம், ஏழு முதல் ஒன்பது வரை உங்களின் பதில்கள் இல்லை என்று இருந்தால், குழந்தைகளை மேதைகளாக வளர்க்கும் செயல்பாட்டின் வாய்ப்பு இன்னும் இருக்கிறது என்று அர்த்தம். எனவே, உங்களின் இதர பலவீன பகுதிகளை சரிசெய்து கொள்ளுங்கள்.

  மேற்கண்ட கேள்விகளுக்கு ஆறு மற்றும் அதற்கும் குறைவாக உங்களின் பதில் இல்லை என்று இருந்தால், உங்கள் குழந்தையின் மேதமை வளர்ச்சியை நீங்கள் தடுக்கிறீர்கள் என்று அர்த்தம். எனவே, உங்களின் மனநிலை மற்றும் குழந்தைவளர்ப்புத்தன்மையை நீங்கள் நிச்சயம் மாற்றிக்கொள்ள வேண்டும்.  ஏனெனில் உங்களின் குழந்தை தற்போது வெற்றிகரமான வாழ்க்கை என்னும் மாபெரும் கடலின் கரையில் நின்று கொண்டுள்ளது. அந்தக் கடலை கடப்பதற்கு உங்களின் குழந்தைக்கு அடியிற்கண்ட மூன்று விதமான விஷயங்கள் கட்டாயம் தேவை. 

  1.  படைப்புத் திறன்Creative Skills

  2.  கற்பனைத்திறன்Imagination Skills

  3.  அவர்களுக்கான சுதந்திரம் - Independence

  ஒரு குழந்தை வெற்றிகரமான மனிதனாக உருவாதலில், இந்த மூன்று அம்சங்களும் மிக முக்கியப் பங்கை வகிக்கின்றன.அவற்றைப் பற்றி விரிவாக அடுத்த பதிவில் அலசுவோம்.

  நண்பர்களே ! பதிவினைப் பற்றிய தங்கள் கருத்துக்களை மறக்காமல் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.நீங்கள் பெற்ற மதிப்பெண்களை உங்கள் மனதிற்க்குள் வைத்துக்கொள்ளுங்கள் அடுத்த பதிவு வரும் வரை...

  நன்றி..!

  31 comments:

  1. மாப்ள எனக்கு ரொம்ப தேவையான பதிவு..

   பகிர்வுக்கு நன்றி மாப்ள..

   ReplyDelete
  2. மார்க்க சொல்ல வேணாம்னு சொன்னதால சொல்லல...பல விஷயங்கள் புரிந்தது நன்றி மாப்ளே!

   ReplyDelete
  3. ஒரு குழந்தை வெற்றிகரமான மனிதனாக உருவாதலில், இந்த மூன்று அம்சங்களும் மிக முக்கியப் பங்கை வகிக்கின்றன.

   அருமையான பயனுள்ள பகிர்வு.. வாழ்த்துகள்...

   ReplyDelete
  4. ஒவ்வொரு பெற்றோர்க்கும் தேவையான பதிவு.... ஆனால் நான் பார்த்தவரை நிறைய பெற்றோர்கள் தடை போடுபவர்களாகவே இருகிறார்கள்..

   ReplyDelete
  5. பெற்றோர்கள் குழந்தைகள் செயலை ரசிச்சு பார்த்தால் அவர்களை அடக்க மனம் வராது... ஆக பாசம், பொறுமை இருந்தால் எல்லா கேள்விக்கும் பாஸ் மார்க் வாங்கிரலாம்....


   வாசிக்க:
   இப்படியா துப்பட்டா போடறது? சின்ன பீப்பா, பெரிய பீப்பா அரட்டை

   ReplyDelete
  6. பரவாயில்லையே நானும் கொஞ்சம் மார்க் வாங்குறன் நம்ம பையன் கிட்ட எதாவது கார்டூன் வரையுங்க...என்றால்
   தம்ஸ்அப் மொம்மைய வரைஞ்சு நீ..தாப்பா என்கிறான் நான் சூப்பர்ன்னு அழுதிட்டே சொன்னேன் என்ன பன்னறதுங்க சம்பத்...குழந்தைக நம்மள விட சில விசயத்தில ஜுனியஸ்..

   ReplyDelete
  7. பெற்றோர்கள் அவசியம் படித்துத்தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு.

   ReplyDelete
  8. மிக அவசியமான அனைவரும் படித்து தெளிவு பெற உதவு பதிவு...

   பல தெளிவான பல விஷயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி... நண்பரே...

   ReplyDelete
  9. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய, அழகான பதிவு. நன்றி நண்பரே!
   என் தளத்தில்:
   "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

   ReplyDelete
  10. அருமை நண்பரே. குழந்தை வளர்ப்பில் பல நுணுக்கங்கள். நாம்தான் குழந்தைகளை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

   ReplyDelete
  11. நிச்சயம் இது பெற்றோர்களுக்கு வேண்டிய பதிவுதான். பகிர்வுக்கு நன்றி சம்பத் அவர்களே.!!

   ReplyDelete
  12. நான் எட்டு மார்க், என் அம்மாவும் என் மனைவியும் மூன்று மார்க்... என்ன பண்ணலாம்????? கஷ்டம் தான் தோழர்

   ReplyDelete
  13. @ !* வேடந்தாங்கல் - கருன் *! said...
   //மாப்ள எனக்கு ரொம்ப தேவையான பதிவு..

   பகிர்வுக்கு நன்றி மாப்ள..//

   முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் நன்றி மாம்ஸ்

   ReplyDelete
  14. @ விக்கியுலகம் said...

   //மார்க்க சொல்ல வேணாம்னு சொன்னதால சொல்லல...பல விஷயங்கள் புரிந்தது நன்றி மாப்ளே!//

   மாம்ஸ் நீங்க செண்டம்ன்னு எனக்கு தெரியும் மாம்ஸ்

   ReplyDelete
  15. @ இராஜராஜேஸ்வரி said...

   //ஒரு குழந்தை வெற்றிகரமான மனிதனாக உருவாதலில், இந்த மூன்று அம்சங்களும் மிக முக்கியப் பங்கை வகிக்கின்றன.

   அருமையான பயனுள்ள பகிர்வு.. வாழ்த்துகள்...//

   வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி சகோ..

   ReplyDelete
  16. @ எனக்கு பிடித்தவை said...

   //ஒவ்வொரு பெற்றோர்க்கும் தேவையான பதிவு.... ஆனால் நான் பார்த்தவரை நிறைய பெற்றோர்கள் தடை போடுபவர்களாகவே இருகிறார்கள்..

   வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே

   ReplyDelete
  17. @ தமிழ்வாசி பிரகாஷ் said...

   //பெற்றோர்கள் குழந்தைகள் செயலை ரசிச்சு பார்த்தால் அவர்களை அடக்க மனம் வராது... ஆக பாசம், பொறுமை இருந்தால் எல்லா கேள்விக்கும் பாஸ் மார்க் வாங்கிரலாம்....//

   உணமைதான் நண்பரே..

   ReplyDelete
  18. @ veedu said...

   //பரவாயில்லையே நானும் கொஞ்சம் மார்க் வாங்குறன் நம்ம பையன் கிட்ட எதாவது கார்டூன் வரையுங்க...என்றால்
   தம்ஸ்அப் மொம்மைய வரைஞ்சு நீ..தாப்பா என்கிறான் நான் சூப்பர்ன்னு அழுதிட்டே சொன்னேன் என்ன பன்னறதுங்க சம்பத்...குழந்தைக நம்மள விட சில விசயத்தில ஜுனியஸ்..//

   உண்மைதான் நண்பரே..நாம் அவர்களுக்கு வழிகாட்டி மட்டுமே.ஒவ்வோர் பெற்றோரும் இதை உணர்ந்தால் பிரச்சினையே இல்லை

   ReplyDelete
  19. @ Lakshmi said...

   //பெற்றோர்கள் அவசியம் படித்துத்தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு.//

   மிக்க நன்றி அம்மா அவர்களே

   ReplyDelete
  20. @ ராஜா MVS said...

   //மிக அவசியமான அனைவரும் படித்து தெளிவு பெற உதவு பதிவு...

   பல தெளிவான பல விஷயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி... நண்பரே...//

   வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி நண்பரே

   ReplyDelete
  21. @ திண்டுக்கல் தனபாலன் said...

   //அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய, அழகான பதிவு. நன்றி நண்பரே!//

   வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி நண்பரே

   ReplyDelete
  22. @ விச்சு said...

   //அருமை நண்பரே. குழந்தை வளர்ப்பில் பல நுணுக்கங்கள். நாம்தான் குழந்தைகளை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.//

   வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே

   ReplyDelete
  23. @ தங்கம் பழனி said...

   //நிச்சயம் இது பெற்றோர்களுக்கு வேண்டிய பதிவுதான். பகிர்வுக்கு நன்றி சம்பத் அவர்களே.!!//

   வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே

   ReplyDelete
  24. @ suryajeeva said...

   //நான் எட்டு மார்க், என் அம்மாவும் என் மனைவியும் மூன்று மார்க்... என்ன பண்ணலாம்????? கஷ்டம் தான் தோழர்//

   நண்பரே இதில் மார்க் முக்கியம் ஏதுமில்லை.பெற்றோர்களின் அணுகுமுறையில் மாற்றம் வேண்டும் என்பதே இடுகையின் நோக்கம்.

   ReplyDelete
  25. உங்க பதிவெல்லாம் மனசில நல்லா ஏத்திக்கணும்.எதிர் காலத்தில நிச்சயம் உதவும் !ஹி ஹி!

   ReplyDelete
  26. @ கோகுல் said...

   //உங்க பதிவெல்லாம் மனசில நல்லா ஏத்திக்கணும்.எதிர் காலத்தில நிச்சயம் உதவும் !ஹி ஹி!//

   தங்களின் ஆதரவிற்க்கு மிக்க நன்றி நன்பரே

   ReplyDelete
  27. ethirkalathil uthavum pathivu - nigalkalathil uthava vendiyathu ethir
   kalamaga matriyathu kaalam seitha kolam

   ReplyDelete
  28. Child Care Tips in Tamil, Spoken Tamil, Tamil Sports, Tamil Short Stories. Find more Tamil Kids Category Section Visit : http://www.valaitamil.com/kids

   ReplyDelete
  29. வணக்கம்


   இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்


   அறிமுகப்படுத்தியவர்-காவியகவி


   பார்வையிட முகவரி-வலைச்சரம்   -நன்றி-


   -அன்புடன்-


   -ரூபன்-

   ReplyDelete
  30. அருமையான அறிவுரைத் தொகுப்பு நன்றி
   சகோதரி இனியாவின் வலைச்சர அறிமுகத்தின் மூலம் வந்தேன்

   ReplyDelete

  பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.