• Breaking News

  December 20, 2011

  விவசாயி விடும் எச்சரிக்கை
  கலப்பையால் காணிநிலம் தட்டி
  கதிரவனை துயில் எழுப்பும் கட்டியங்காரன்...!

  உதவாக்கரைகளை உதறியெழுப்ப
  சேவலுக்கு சேதி சொல்லும் சேவகன்...!

  எதனை விதைக்கிறாயோ அதயே அறுப்பாய்
  போதிக்கும் புத்தன்...!

  சகதியில் சங்கடமின்றி தாம்திமித்தோம்
  சங்கீதமிசைக்கும் தாள வித்துவான்...!

  கம்பக்கூழும் வரகுக்களியும் அவ்வப்போது
  இவன் சேற்றுக்கைகள் சோற்றைப்பார்க்கும் எப்போதாவது...  செஞ்சூரியக் கொடுமையால் மேனி எழில் கறுமையானவன்...!

  உழைப்பு வாசனை உடுத்தியிருப்பதால்
  இவன் வியர்வை நாறுவதில்லை...!

  நிலம் பார்த்து விதைப்பதால் இவன்
  மனம் பார்த்து வாழலாம் நாம்...!

  இயற்கை பொய்த்து செயற்கை மிகுவதால்
  இடம்பெயர்கிறான் இன்று...!

  சோற்று வடம் பிடிக்க இவர்களின்றி போவதால்
  சேற்றுப்புழுக்களாய் நெளியப்போகிறோம் நாளை
  எச்சரிக்கை...!

  மனிதம் காக்கும் இந்த மகாத்மாக்களை
  மகிமைசெய்து மானம் காப்போம் உறவுகளே..!


  முல்லைபெரியாற்று பாசனத்தால் பயன்பெறும் விவசாய நிலங்கள் இனிவரும் காலங்களில் இப்படியும் மாறிவிடுமோ...? 


  இணையத்தில் ஆதரவளிக்க வாருங்கள் நண்பர்களே..


  பிரச்சினை நடந்து இவ்வளவு நாட்களாகியும் கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய அரசை தட்டியெழுப்ப உங்கள் மேலான ஆதரவை தாருங்கள் உறவுகளே..!


  மத்திய அரசே..! மத்திய அரசே..! முல்லைப்பெரியாறு பிரச்சினையை உடனே தடுத்து நிறுத்து..  22 comments:

  1. ///இயற்கை பொய்த்து செயற்கை மிகுவதால்
   இடம்பெயர்கிறான் இன்று...!///

   அருமை நண்பரே..யதார்த்தமான உண்மை அனைவருக்கும் உறைக்கும் விதத்தில் எடுத்தியம்பியது பாராட்டுக்குரியது..

   ReplyDelete
  2. அவன் சேற்றில் கால் வைப்பதால்தான் நாம் சோற்றில் கை வைக்கிறோம் என்பதை மீண்டுமொரு நினைவூட்டியமைக்கு நன்றி.. கவிதையின் ஒவ்வொரு வரியும் மனதை தொடும் விதமாக இருந்தது..

   கவிதையில் உள்ளது வெறும் வார்த்தைகள் அல்ல..ஒவ்வொரு உணரப்பட வேண்டிய உண்மைகள் அவை.

   ReplyDelete
  3. விவசாயியைப் பற்றி வித்தியாசமான பார்வையில் வரைந்த தங்களது கவிதை என்றும் மனதில் நீங்காது நிற்கும்.. பகிர்ந்தமைக்கு நன்றி சம்பத் அவர்களே..!! தங்கள் கவிதைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இது இருக்கிறது.. !!!

   மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது உணவல்லவா? அந்த உணவுக்குரிய தானியங்களையும், ்காய்கறிகளையும் உற்பத்தி செய்பவன் உழவன்..உயிர்வாழ உணவைக் கொடுப்பவனும் கடவுள்தான்.. நான் வணங்குகிறேன்.. அவனை.. !!!

   விவசாயியின் இன்றைய சூழ்நிலையை எளிதாக இரண்டே வரிகளில் எடுத்து கூறியவிதம் இன்னும் அருமை.. நன்றி.. சம்பத் அவர்களே..!!!

   ReplyDelete
  4. மனிதம் காக்கும் இந்த மகாத்மாக்களை
   மகிமைசெய்து மானம் காப்போம் உறவுகளே..!// அருமையான வரிகள் மாப்ள.. மிகவும் ரசித்தேன் இந்த வரிகளை...

   சமூக பிரச்னையை தாங்கி நிற்கிறது கவிதை..

   ReplyDelete
  5. அருமை.
   பகிர்வுக்கு நன்றி .
   வாழ்த்துக்கள்.

   ReplyDelete
  6. சோற்று வடம் பிடிக்க இவர்களின்றி போவதால்
   சேற்றுப்புழுக்களாய் நெளியப்போகிறோம் நாளை
   எச்சரிக்கை...!

   மனிதம் காக்கும் இந்த மகாத்மாக்களை
   மகிமைசெய்து மானம் காப்போம் உறவுகளே..!


   கலங்கவைக்கும் வரிகள்!

   ReplyDelete
  7. விவசாயம் அழிந்துவிடக்கூடிய சூல்நிலையை ஏற்படுத்தி விட்டோம்....விழிப்புணர்வு பெறுவதுக்குள் நிலமெல்லாம் கட்டிடமாக மாறிவிடும்...அப்ப என்ன செய்வது?கவிதை விவசாயின் கண்ணீரால் எழுதப்பட்டது...சூடு உரைக்கின்றது....

   ReplyDelete
  8. ஒவ்வொரு வரிகளும் ஆணியாய் மனதில் இறங்குகிறது...

   ~*~சோற்று வடம் பிடிக்க இவர்களின்றி போவதால்~*~
   வித்யாசமான சிந்தனை...

   ReplyDelete
  9. வணக்கம் சகோ,
   நல்லா இருக்கீங்களா?
   விவசாயிகளின் சிறப்புக்களையும், அந்த விவசாயிகள் தமிழக - கேரள எல்லையில் அல்லறும் நிலையினையும் கவிதையில் வடித்திருக்கிறீங்க.

   வெகு வைரில் எமக்காய் தமை வருத்தி உழைக்கும் இந்தச் செம்மல்களின் வாழ்விற்கு நல்ல விடிவு கிடைக்கும் என நம்புகிறேன்,

   ReplyDelete
  10. உரைக்கும்(!) கவிதை...உறைக்கனுமே மாப்ள!

   ReplyDelete
  11. இந்த எச்சரிக்கையை யாரும் சொவிகொடுக்க வில்லையென்நால்

   நளைய உலகம் கேள்விகுறிதான்...

   அர்த்தமுள்ள கவிதை நண்பரே...

   ReplyDelete
  12. சிறு மாற்றங்களுடன் மீண்டும் பாருங்கள்.

   கண்டுபிடியுங்கள் பிரபல பதிவர்களை

   http://www.thothavanda.blogspot.com/2011/12/blog-post_21.html

   ReplyDelete
  13. யதார்த்தங்களை உள்ளது உள்ளபடியே சொல்லியிருக்கிறிங்க

   ReplyDelete
  14. விவசாயிகள் மறைந்து வருகிறார்களே,,, உங்க கவிதை வரிகள் அவர்களை உருவாக்குமா?   வாசிக்க:
   ஈரோடு பதிவர் சங்கமம்: பதிவர்களின் அட்டகாச அலப்பரை...

   ReplyDelete
  15. முல்லைப்பெரியாரை மீட்ப்போம் வாருங்கள்...!!!

   ReplyDelete
  16. தண்ணி கிடைக்கலைன்னா நான்கு மாவட்டத்திலும் பட்டினி சாவுதான் நிச்சயம்...!!!

   ReplyDelete
  17. மனிதம் காக்கும் இந்த மகாத்மாக்களை
   மகிமைசெய்து மானம் காப்போம் உறவுகளே..!

   ReplyDelete
  18. விவசாயிகளை காப்போம் , விவசாயத்தை வளர்ப்போம் , விவசாய நிலங்களை அழித்து செய்யும் ரியல் எஸ்டேட் தொழிலை எதிர்ப்போம் .

   ReplyDelete
  19. அருமையான கவி படைப்பு சகோ

   ReplyDelete
  20. விவசாயியைப் பற்றிய உங்கள் பார்வைகளும் பரிதவிப்பும்
   அருமை. மண்ணின் மைந்தர்கள்களின் செஞ்சோற்றுக் கடன் நாம் தீர்க்கும் நாள் எந்நாளோ ?

   ReplyDelete

  பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.