• Breaking News

  December 19, 2011

  சர்க்கஸ் கூடாரம்
  புதிதாக ஒன்றுமில்லை
  கிழட்டுச் சிங்கங்கள்
  நெருப்பு வளையங்களுக்குள்
  நுழைந்து திரும்புகின்றன..!

  புதிய பச்சைக்கிளிகளும்
  பலூன்களைத்தான் சுடுகின்றன
  துப்பாக்கிகளால்...!

  பாதாளக் கிணற்றுக்குள்
  மோட்டார் சைக்கிளை
  வேகமாக ஓட்டுபவனின் முகம்வேறு.  இந்தப் பாரிலிருந்து
  அந்த பாருக்கு மாறும்
  ஆண்களும் பெண்களும் கூட
  புதியவர்கள்...!

  கைகளயே வளையமாக்கி,அதில்
  நுழைந்து வெளியேருகிற
  ஆறுவயது சிறுமிக்குத் தெரியும்
  இப்போது பார் விளையாடும்
  அவள் அக்காவும்
  இதைத்தான்
  முன்பு செய்து கொண்டிருந்தது...!

  மேலே மேலே இருபத்தைந்து
  காபி கோப்பைகளை அடுக்கி
  நெற்றியில் சுமந்து,நடந்து
  கைத்தட்டல் பெறுகிறவன்
  பழைய சாயம் போன
  சட்டை அணிந்திருக்கிறான்...!  காட்சிகளும் பார்வையாளர்களும்
  கோமாளிகளும் ஆட்டக்காரிகளும்
  மாறினாலும்,சர்க்கஸ்
  அதே பழைய சர்க்கஸ்தான்...!

  பழைய பெயரை வைத்தே
  கூட்டம் சேர்த்துக்
  கொண்டிருக்கிறார்கள்
  முதலாளிகளின் வாரிசுகளும்..


  உறவுகளே ! கவிதையைப்பற்றிய தங்களது கருத்துக்களை மறக்காமல் பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்

  நன்றி மடல் :

  நண்பர்களே..! 18.12.11 அன்று ஈரோட்டில் பதிவர் சந்திப்பினை அழகுற ஏற்பாடு செய்திருந்த ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமத்திற்க்கு தமிழ்பேரன்ட்ஸ் தளத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.விழா நடைபெற்ற அன்று விருது பெற்ற 15 நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.


  இதில் கலந்து கொண்டு தங்கள் உதவியால் நல்ல நல்ல நண்பர்கள் கிடைக்கப் பெற்றேன்.கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  இனி சங்கமத்தினைப் பற்றிய சுவாரஸ்யங்கள் நண்பர்களின் பதிவுகளில் கீழே..
  இணைய நண்பர்களின் சங்கமம் - வீடு சுரேஷ் குமார்


  சங்கமம் வெளிவராத செய்திகள் - கோகுலத்தில் சூரியன் வெங்கட்  சங்கமம் - ஓர் டைரிக்குறிப்பு - வீடு திரும்பல் மோகன்குமார்

  ஈரோடு பதிவர் சங்கமம் - 2011 - கந்தசாமி ஐயா 

  ஈரோடு சந்திப்பு அன்பு வேண்டுகோள் - மெட்ராஸ் பவன் சிவக்குமார்

  ஈரோடு சந்திப்பு - குறையொன்று - ரசிகன் ஷர்புதீன்  ஈரோடு பதிவர்களின் இந்தப்பணி மென்மேலும் பல ஆண்டுகள் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்

  நன்றியுடன்
  சம்பத்குமார்.

  டிஸ்கி : 

  நண்பர்களின் பதிவுகள் 19.12.11 அன்று மாலை 8 மணி அளவு வரை திரட்டப்பட்டது.ஏதெனும் தவறியிருந்தால் நண்பர்கள் பின்னூட்டத்தில் லின்க் தருமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.

  14 comments:

  1. //பழைய பெயரை வைத்தே
   கூட்டம் சேர்த்துக்
   கொண்டிருக்கிறார்கள்
   முதலாளிகளின் வாரிசுகளும்.//நிதர்சன உண்மை

   ReplyDelete
  2. சர்க்கஸ் காரர்களின் வறுமையை உங்கள் கவிதை வலிகளுடன் விவரிக்கிறது, பாவங்கள்...!!!

   ReplyDelete
  3. பதிவர்கள் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்...!!!

   ReplyDelete
  4. காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதை தெளிவாக சொல்கிறது தங்களின் வரிகள்..!!! 'ஈரோடு சங்கம்ம்' பற்றிய பதிவர்களின் பதிவுகளை ஒரே இடத்தில் தொகுத்தமைக்கு பாராட்டுக்குரியது.. நன்றி சம்பத் அவர்களே..!!

   ReplyDelete
  5. கவிதையிலேயே சர்க்கசின் பரிமாணம் சொல்லிட்டீங்க.

   ReplyDelete
  6. பகிர்வுக்கு நன்றி. கோவையில் உள்ள குழந்தை மருத்துவர்களின் லிஸ்டை ஒரு பதிவாக போடவும் தாய்மார்களின் வேண்டுகோள்...

   ReplyDelete
  7. முதலாளிகள் மட்டும் தான் மாறுகிறார்கள்,தொழிலும் தொழிலாளர்களின் வாழ்க்கை முறையிலும்
   மாற்றமில்லாத நிலையினை
   உணர்த்தியிருக்கிறீர்கள்.
   சில கலைஞர்களின் நிழல் உலக வாழ்க்கையின் இருட்டையும் நினைத்து பார்க்க வைக்கிறது.

   ReplyDelete
  8. காலங்கள் மாறிக்கொண்டிருக்கும் இவ்வேளையில்
   இன்னும் நுட்பங்கள் மாறாது, அதே விளையாட்டுக்களை
   செய்துகாட்டும் சர்க்கஸ் பணியாளர்களின் வறுமையை
   அற்புதமாய் சொல்லிவிட்டீர்கள் நண்பரே..
   காலத்திற்கேற்ப அவர்கள் தங்கள் தொழில்நுட்பத்தை
   மாற்ற வேண்டும். புதிய தந்திரங்கள் கையாள வேண்டும்.

   ReplyDelete
  9. ஒரு கவிதையில் சர்க்கசின் அத்தனை முகங்களையும் வெளிக்கொணர்ந்துவிட்டீர்கள். முதலாளிகள் மாறுகிறார்கள்,தொழிலும் தொழிலாளர்களின் வாழ்விலும்
   மாற்றமில்லை என்ற கருத்தையும் குறிச்செல்வது அருமை.

   ReplyDelete
  10. சிறப்பான கவிதைவரிகள் பாஸ் அருமை

   ReplyDelete
  11. மாப்ள உழைப்பாளிகளின் மேல் சிம்மாசனம்...அருமை!

   ReplyDelete
  12. மனப்பூர்வ வாழ்த்துகள்.

   ReplyDelete
  13. நான் தங்கள் நலன் கருதி குறைகளை முதலில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ”வெளியேறுகிற” என்ற வார்த்தை ரு என்ற தவறான சொல்லை கொண்டிருக்கிறது. வேகமான தட்டச்சில் பிழை நேர்ந்திருக்கலாம். மேலும் பார் என்ற சொல்லுக்கு தமிழ் சொல்லை கண்டுபிடித்து பயன்படுத்தியிருந்தால் சிறப்பு. பார் என்பதை ஒரு தமிழ் வாசகனாக பூமி என்று பொருள் கொள்ள வேண்டி இருப்பதால் குழப்பமாக இருக்கிறது என்பதால் சொல்லுகின்றேன். சர்க்கஸ் என்கிற சொல்லுக்கும் தமிழ் பதத்தை கண்டுபிடித்து சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது என் ஆதங்கம்.மேலே மேலே இருபத்தைந்து
   காபி கோப்பைகளை அடுக்கி
   நெற்றியில் சுமந்து,நடந்து
   கைத்தட்டல் பெறுகிறவன்
   பழைய சாயம் போன
   சட்டை அணிந்திருக்கிறான்...!
   என்கிற வரிகள் வலிக்கிற யதார்த்தம். நறுக்கென்று வெளிப்படுகிறது அந்த வலி தங்கள் கவிதையில். பாராட்டுக்கள்.

   தீபிகா.
   http://theepikatamil.blogspot.com/

   ReplyDelete

  பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.