• Breaking News

    December 14, 2011

    வேர்விட்ட மரம்




    தொட்டியிலிருந்தாலும் தோப்பிலிருந்தாலும்
    ஆசை தணியாது
    நீளும் மண்புணர ஆணிவேர்...!

    தன் சருகிலிருந்து சாறெடுத்து
    மீண்டும்
    சருகின் மூலத்தை இயற்றும்
    களைப்பின்றி காம்புகளில்
    இலையுதிர் காலப்பொழுதுகளில்...!

    காற்றின் ஊடலால்
    ஓயாமல் சப்தமிடும்
    மழையோசையை நகலெடுத்து
    முற்றிய இலை அதரங்கள்...!



    மலரின் பரிணாமத்திற்க்காய்
    விழிமூடி விழித்திருக்கும்
    தியானத்தில் மொட்டு...!

    எச்சமிட்ட பட்சியின் கூடுதாங்கி
    மரங்கொத்தி செதுக்கிய
    ரணம் ரசித்து
    துழாவித் துழாவி
    சுயம் தேடி
    சலிக்காது கிளைவிடும்
    புறச்சிராப்புடன் சல்லிவேர்கள்...!

    மரணங்கண்டஞ்சாது
    விதைக்குள் தனை சுருக்கி
    வீழ்ந்து தேடித் தேடும்...!



    கைகள் கிளையாக
    உடல் தண்டாக
    கால்கள் வேராக
    ரோமங்கள் இலையாக
    உச்சந்தலையில் சிறுபட்சி கூடுகட்ட
    தலைமுடி விழுதாகி காற்றிலாட
    வாயை பொந்தென நினைத்து...

    உற்சாகமாய் ஓடிவந்த மரங்கொத்திப்பறவை
    சேகரித்த வார்த்தை புழுக்களைக்
    கொத்தித் தின்ன தின்ன மௌனியாகி
    தேட வைத்தது எதுவெனத் தேடுகையில்
    என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது
    தலைகீழாய்
    பழந்தின்னி வௌவாலொன்று..!


    வணக்கம் நண்பர்களே வேர்விட்ட மரம் கவிதை பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச்செல்லுங்கள்


    14 comments:

    1. ஒரு கவிதையில் எத்தனை படிமங்கள். ரசித்து ரசித்து , மறுபடியும் மறுபடியும் வாசித்தேன் , தேன்.. தேன் ...தேன்...

      ReplyDelete
    2. உற்சாகமாய் ஓடிவந்த மரங்கொத்திப்பறவை
      சேகரித்த வார்த்தை புழுக்களைக்
      கொத்தித் தின்ன தின்ன மௌனியாகி
      தேட வைத்தது எதுவெனத் தேடுகையில்
      என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது
      தலைகீழாய்
      பழந்தின்னி வௌவாலொன்று..!// அருமையான சொல்லாடல்.. அசத்தல் கவிதை. பகிர்வுக்கு நன்றி மாப்ள..

      ReplyDelete
    3. ''...மலரின் பரிணாமத்திற்க்காய்
      விழிமூடி விழித்திருக்கும்
      தியானத்தில் மொட்டு...!..''

      மிக நல்ல கருத்துடை சொற்கட்டு....அருமை! வாழ்த்துகள் சகோதரா.
      வேதா. இலங்காதிலகம்.
      http://www.kovaikkavi.wordpress.com

      ReplyDelete
    4. மாப்ள கவித நல்லா இருக்குய்யா!

      ReplyDelete
    5. வார்த்தைகளால் வாழ்த்திவிட முடியாத அழகிய கவிதை...

      ReplyDelete
    6. கவிதை அருமை... நண்பரே...

      ReplyDelete
    7. மேற்கோளிட முடியவில்லை.. அனைத்து வரிகளும் அருமை..

      ReplyDelete
    8. எனக்கு கொஞ்சம் நேரம் பிடித்தது

      அடுத்தடுத்த வரிகளுக்குச்செல்ல

      வார்த்தைகளால் வசப்படுத்தி விட்டீர்கள்!

      ReplyDelete
    9. இது உங்கள் கவிதைகளிலேயே உயர் ரகம் போல் இருக்கிறது... அசை போட்டுக் கொண்டு இருக்கிறேன்

      ReplyDelete
    10. ..//.மலரின் பரிணாமத்திற்க்காய்
      விழிமூடி விழித்திருக்கும்
      தியானத்தில் மொட்டு...!..''//

      அருமை..

      சிறப்பான கவிதைக்கு வாழ்த்துக்கள்,சம்பத்.

      ReplyDelete
    11. அழகு கவிதை.
      படங்களும் அருமை.
      வாழ்த்துகள்.

      ReplyDelete

    பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.