• Breaking News

  November 21, 2011

  கேள்விக்கு பதில் என்ன ?
  நெல்லும் கரும்பும் விளைந்த 
  வயலில்அடுக்கு மாளிகயின் 
  அஸ்திவாரப் பள்ளத்தை
  தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்...!

  எந்திரமாய் இயங்கும்
  பெண்களின் கைகளில்
  மண்சட்டிகள் மாறி மாறி 
  கரையேருகின்றன...!

  ஆண்கள் உயர்த்தும் 
  கடப்பாரைகள்பூமித்தாயின் 
  மார்பை குத்திக் கிழிக்கின்றன...!
  வேகத்தைக் கண்டு 
  வியப்பில் கண்மலர
  வேடிக்கை பார்க்கிறான் 
  ஓர் சிறுவன்...!

  பச்சை வயல்களை ஏன் அழிக்கிறீர்கள்
  என்றவன் கேட்கவில்லை...!

  நெல்லும் கரும்பும் இனி எப்படி விளையும்
  என்று அவன் கேட்கவில்லை...!

  நெல் இல்லாமல் இருப்பது எப்படி
  என்று அவன் கேட்கவில்லை...!

  இப்படியே சென்றால் இந்த உலகம் இருக்குமோ
  என்றும் அவன் கேட்கவில்லை...!
  இனி தும்பிகளை எங்கே போய்த்தேடுவது
  என்றும் அவன் கேட்கவில்லை...!

  இன்று அவன் ஒரு அப்பாவிச் சிறுவன்

  மோசடிக் கும்பலின் நாசகாரியம்
  முடிவுற்றப் பின்னாலாவது...!

  இக்கேள்விகளை முன்வைக்கக் கூடும் அவன்


  அப்போது இப்பூலகம் தரும் பதில் என்ன ?
  உறவுகளே..நேரமிருந்தால் இங்கேயும் சென்று பெற்றோர்களை அச்சுறுத்தக்கூடிய நோயின் அறிகுறிகளை அறிந்துகொள்ளுங்கள்

  நண்பர்களே பதிவினை சுவாசித்துவிட்டு தங்கள் எண்ணங்களை கருத்துக்களாய் பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்..

  27 comments:

  1. ஆம். பதிலென்னவாக இருக்கும்??!!!

   ReplyDelete
  2. சார் நீங்க கேட்ட கேள்விக்கு பதிலை கூகிள்ல தேடுனா கிடைக்கும். அப்படித்தான் அவங்க தெரிஞ்சுக்குவாங்க

   ReplyDelete
  3. இயற்கை தானியங்களையும், உணவுப்பொருட்களையும்,அரிய உயிரினங்களும் அருகித்தான் போய்விடும். அங்கே - அப்பொழுது கண்காட்சியாலவாவது இதை காட்ட முடியுமா? என்பது சந்தேகமே..!!

   பூமித்தாயின் மடியெங்கும், கான்கிரீட் வீடுகளும். கட்டங்களும் முளைத்துவிடுவதால், பூமிதாயின் கண்ணீர்கூட(நீர்) இனி கான்கீரீட் தளத்திற்கு அடியில் வறண்டுதான் போய்விடும்.

   ReplyDelete
  4. சீர்மிகு, சிந்தை மிகு கவிதையை படைத்த தோழர் சம்பத்குமாருக்கு எனது வாழ்த்துகள்..!!

   சமுதாய நோக்குடைய ஓர் எச்சரிக்கை கவிதை..!!


   இல்லை.. இல்லை.. விதை.!

   விருட்சமாகட்டும்..!! வாழ்த்துக்கள்..! சம்பத் அவர்களே..!

   உங்கள் பணி தொடரட்டும்..!!

   ReplyDelete
  5. பதில்கள் கிடைக்கும்...
   சமூகம் என்பது நானும், நீங்களும் சேர்ந்ததுதான்...
   முடிந்தவரை மாற்ற முயலுவோம்...

   ReplyDelete
  6. பலரை எச்சரிக்கும் விதமாக வரிகளை அமைத்தவிதம் அருமை... நண்பரே...

   வாழ்த்துகள்...

   ReplyDelete
  7. இக்கேள்விகளை முன்வைக்கக் கூடும் அவன்

   அப்போது இப்பூலகம் தரும் பதில் என்ன ?

   பதில் தர யாரால் முடியும்???

   ReplyDelete
  8. அப்போது இப்பூலகம் தரும் பதில் என்ன ?//

   ஆழ்ந்த சிந்தனை...ஆக்கப்பூர்வ பகிர்வு ...வாழ்த்துகள் நண்பரே...

   ReplyDelete
  9. ஏரியும், குளங்களும், ஆறும் இருந்த இடங்களில் எல்லாம் கட்டடங்களை விடாமல் எழுப்புவதும், ஆற்று மணலைக் கொள்ளையிடுவதுமாக வருங்கால சந்ததிக்கு பூமியின் இயற்கை வளங்களை விட்டு வைக்காமல்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் சிறுவன் கேள்வி கேட்டால் பூவுலகம் என்ன பதில்தர முடியும்? பரிதாபமாக விழிப்பதைத் தவிர... எம்.வி.எஸ்.ராஜா சொன்னதுபோல நம்மால் இயன்றதைச் செய்வோம் என்று முடிவு கட்டுவோம். அழகான கவிதை மூலம் விழிப்புணர்வு ஊட்டிய உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

   ReplyDelete
  10. பூமி ஒரு அற்புதமான இயந்திரம்... எங்கே அதன் சமன்பாட்டில் குறை விழுகிறதோ.. உடனே அது எரிமலையாக பொங்கி, பூகம்பமாய் பிளந்து தன்னை தானே சரி செய்து கொள்ளும்... என்ன வயல் வேறு இடங்களில் இடம் பெயர்ந்து இருக்கும்... ஜப்பான் வயல்கள் ஒரு எடுத்துக் காட்டு

   ReplyDelete
  11. விடையில்லா பதில்..
   வினாவுக்கு தடுமாறும் சமுதாயம்
   விடுக்கும் விடை கானல்நீர் தேசம் தான்...

   அருமையான படைப்பு நண்பரே..
   திரும்ப திரும்ப படித்தேன் ...
   விளக்கம் புரியாமல் இல்லை..
   மனம் விட்டு விலக முடியாமல்......

   ReplyDelete
  12. சமூகம் சார்ந்த சிறப்பான ஒரு கவிதை வாழ்த்துக்கள் பாஸ்

   ReplyDelete
  13. அழகான கவிதை, சிறுவன் கேட்காத கேள்விகளின் வழியே நீங்கள் அவர்களை பார்த்து கெஎட்கும் கேள்விகள் அருமை!

   ReplyDelete
  14. வணக்கம் நண்பரே! நல்ல பதிவு. விரும்பிப் படித்தேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

   ReplyDelete
  15. நிஜம் தான்.
   வயல்களெல்லாம் மனைகளாகின்றன.
   நல்ல பதிவு.

   ReplyDelete
  16. @ தங்கம்பழனி said... 3

   ///இயற்கை தானியங்களையும், உணவுப்பொருட்களையும்,அரிய உயிரினங்களும் அருகித்தான் போய்விடும். அங்கே - அப்பொழுது கண்காட்சியாலவாவது இதை காட்ட முடியுமா? என்பது சந்தேகமே..!!

   பூமித்தாயின் மடியெங்கும், கான்கிரீட் வீடுகளும். கட்டங்களும் முளைத்துவிடுவதால், பூமிதாயின் கண்ணீர்கூட(நீர்) இனி கான்கீரீட் தளத்திற்கு அடியில் வறண்டுதான் போய்விடும். ///

   முதல் வருகைக்கும் ஆழ்ந்த சிந்தனை கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே

   ReplyDelete
  17. @ தமிழ்வாசி பிரகாஷ் said... 2

   //சார் நீங்க கேட்ட கேள்விக்கு பதிலை கூகிள்ல தேடுனா கிடைக்கும். அப்படித்தான் அவங்க தெரிஞ்சுக்குவாங்க//

   வருங்காலத்தில் இது உண்மையாகிடுமோ என்ற கவலை உள்ளது நன்பரே

   ReplyDelete
  18. @ ராஜா MVS said... 5

   //பதில்கள் கிடைக்கும்...
   சமூகம் என்பது நானும், நீங்களும் சேர்ந்ததுதான்...
   முடிந்தவரை மாற்ற முயலுவோம்...//

   உண்மைதான் நண்பரே..முடிந்தவரை முயலுவோம்.

   வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி நண்பரே

   ReplyDelete
  19. @ இராஜராஜேஸ்வரி said... 7

   ///இக்கேள்விகளை முன்வைக்கக் கூடும் அவன்
   அப்போது இப்பூலகம் தரும் பதில் என்ன ?
   பதில் தர யாரால் முடியும்???///

   பதிலை உங்களோடு நானும் தேடிக்கொண்டிருக்கிறேன் சகோ..

   ReplyDelete
  20. @ ரெவெரி said... 8

   //அப்போது இப்பூலகம் தரும் பதில் என்ன ?//
   ஆழ்ந்த சிந்தனை...ஆக்கப்பூர்வ பகிர்வு ...வாழ்த்துகள் நண்பரே...//

   வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி நண்பரே

   ReplyDelete
  21. @ கணேஷ் said... 9

   //ஏரியும், குளங்களும், ஆறும் இருந்த இடங்களில் எல்லாம் கட்டடங்களை விடாமல் எழுப்புவதும், ஆற்று மணலைக் கொள்ளையிடுவதுமாக வருங்கால சந்ததிக்கு பூமியின் இயற்கை வளங்களை விட்டு வைக்காமல்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் சிறுவன் கேள்வி கேட்டால் பூவுலகம் என்ன பதில்தர முடியும்? பரிதாபமாக விழிப்பதைத் தவிர... எம்.வி.எஸ்.ராஜா சொன்னதுபோல நம்மால் இயன்றதைச் செய்வோம் என்று முடிவு கட்டுவோம். அழகான கவிதை மூலம் விழிப்புணர்வு ஊட்டிய உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். //

   ஆழ்ந்த சிந்தனைக் கருத்திற்க்கு மிக்க நன்றி நண்பரே

   ReplyDelete
  22. @ suryajeeva said... 10

   //பூமி ஒரு அற்புதமான இயந்திரம்... எங்கே அதன் சமன்பாட்டில் குறை விழுகிறதோ.. உடனே அது எரிமலையாக பொங்கி, பூகம்பமாய் பிளந்து தன்னை தானே சரி செய்து கொள்ளும்... என்ன வயல் வேறு இடங்களில் இடம் பெயர்ந்து இருக்கும்... ஜப்பான் வயல்கள் ஒரு எடுத்துக் காட்டு//

   வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே

   ReplyDelete
  23. @ மகேந்திரன் said... 11

   //விடையில்லா பதில்..
   வினாவுக்கு தடுமாறும் சமுதாயம்
   விடுக்கும் விடை கானல்நீர் தேசம் தான்...

   அருமையான படைப்பு நண்பரே..
   திரும்ப திரும்ப படித்தேன் ...
   விளக்கம் புரியாமல் இல்லை..
   மனம் விட்டு விலக முடியாமல்......//

   வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே

   ReplyDelete
  24. @ K.s.s.Rajh said... 12

   //சமூகம் சார்ந்த சிறப்பான ஒரு கவிதை வாழ்த்துக்கள் பாஸ்//

   மிக்க நன்றி நண்பரே

   ReplyDelete
  25. @ நம்பிக்கைபாண்டியன் said... 13

   //அழகான கவிதை, சிறுவன் கேட்காத கேள்விகளின் வழியே நீங்கள் அவர்களை பார்த்து கெஎட்கும் கேள்விகள் அருமை!//

   உண்மைதான் நண்பரே

   நம்மைப் பார்த்து அடுத்த சந்ததி கேட்கப் போகும் கேள்விகள்

   கருத்திற்க்கு மிக்க நன்றி நண்பரே

   ReplyDelete
  26. @ திண்டுக்கல் தனபாலன் said... 14

   //வணக்கம் நண்பரே! நல்ல பதிவு. விரும்பிப் படித்தேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.//

   தங்களின் தொடர் ஆதரவிற்க்கு மிக்க நன்றி நண்பரே

   ReplyDelete
  27. @ Rathnavel said... 15

   //நிஜம் தான்.
   வயல்களெல்லாம் மனைகளாகின்றன.
   நல்ல பதிவு.//

   வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி ஐயா

   ReplyDelete

  பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.