• Breaking News

  November 29, 2011

  பதறவைக்கும் செல்போன் பயன்பாடுகள்


  வணக்கம் நண்பர்களே மீண்டுமொரு குழந்தைகளுக்கான பதிவின் வழியாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இன்றைய பதிவில் குழந்தைகளின் செல்போன் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளும் அதனால் ஏற்படும் இழப்புகளைப் பற்றியும் ஓர் விரிவான அலசல்.மற்றவர்களிடம் பேசுவதற்காக கண்டறியப் பட்ட செல்போனில் ஏராளமான வசதிகள் நாளுக்கு நாள் இணைக்கப்பட்டு கொண்டே வருகிறது. பாட்டு கேட்கலாம். போட்டோ, வீடியோ எடுக்கலாம். குரலை பதிவு செய்து வைக்கலாம். இணையம் பார்க்கலாம். வசதிகள் சேர சேர தொல்லைகள் தான் அதிகமாகிறது.செல்போன் என்பது மற்றவர்களை எளிதாக தொடர்பு கொள்வதற்கான சாதனம். ஆனால் அதனால்தான் இன்று மனிதர்களுக்கு இடையே தொடர்புகளே குறைந்து வருகிறது. முக்கியமாக குடும்பத்திற்குள்.மனிதர்கள் யாரும் இப்போது மனிதர்களோடு பேசுவதில்லை. செல்போன்களோடு மட்டும்தான் பேசுகிறார்கள்.சில நண்பர்களை நேரில் போய்ப் பார்ப்பதைவிட போனில் பேசிவிடுவது நல்லது. நேரில் போனால்கூட அவர்கள் நம்மையும் உட்கார வைத்துக்கொண்டு செல்போனில்தான் பேசிக் கொண்டிருப்பார்கள்.நண்பரின் வீட்டிற்க்கு சென்றிருந்தேன்.என்னை உட்கார வைத்துவிட்டு செல்போனில் கடைசிவரை பேசிக்கொண்டே இருந்தார்.பிஸியாக இருந்த நண்பருக்கு நான் அங்கிருந்தே போன் செய்தேன். என் நம்பரை பார்த்தவுடன் அதிர்ச்சியாகி, உன்னோட போன் நம்பர் வருது என்றார். ஆமா நேர்லதான் பேச முடியல அதான் போன்ல பேசலாம்னு போன் செய்தேன் என்றேன்.இதுபோன்று அலுவலகங்களில் மேலதிகாரிகள் தனக்கு கீழே வேலைபார்ப்பவர்களை அல்லது தன்னை பார்க்கவரும் விற்பனைப்பிரதிநிதிகளை பார்க்காமல் தவிர்ப்பதற்க்கு செல்போனில் பேசுவதைப்போன்று பாவ்லா காட்டுவது அநேகமாக ஒவ்வொரு இடத்திலும் தற்போது நடந்துகொண்டிருக்கிறது.

  இன்று சிங்கிள்சிம் செல்போன் வைத்திருப்பது பேஷன் என்ற நிலை தாண்டி டூயல்சிம் செல்போன் வைத்திருப்பதுதான் ஸ்டைல் என்றாகி விட்டது. புதிதாக சந்தையில் என்ன மாடல் வந்திருக்கிறது என்று தெரிந்துகொள்வதிலும் அதை உடனடியாக வாங்க வேண்டும் என்பதிலும் உள்ள மனவேகம் இன்று எல்லோரிடமும் அதிகரித்துவருகிறது. சாலையில் சிலர் தனியாக பேசிக்கொண்டு போகிறார்கள். விசாரித்தபின்தான் தெரிகிறது காதில் ப்ளூ டூத் வைத்திருக்கிறார்கள் என்பது.வீட்டில் ஹாலில்தான் எப்போதும் போன் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்தால் இப்போது இவர்கள் குளியலறையையும், கழிப்பறையையும்கூட விட்டு வைப்பதில்லை. அங்கேயும் போய் போன்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.இதெல்லாம் பரவாயில்லை பலரும் இப்போது ரயில்வே டிராக்கையும், சாலைகளையும் கடக்கும் போதும் ஏன் வாகனம் ஒட்டும்போதும் கூட செல்போன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.செல்போன் பேசிக்கொண்டே சாலையை கடப்பதால் அதிகரிக்கும் விபத்துக்கள் பற்றிய செய்திகளை படித்தவர்களும் கூட நாம் கவனமாக இருப்போம் என்ற குருட்டு தைரியத்தில் சாலையைக் கடந்து அடிபட்டு சாகிறார்கள்.கார் ஒட்டும்போது போன் வந்தால் பேசாதீர்கள், அழைப்பது எமனாக கூட இருக்கலாம் என்று எழுதி வைத்திருப்பது இவர்கள் கண்ணில் படுவதேயில்லை, எப்போதும் போன் பேசிக்கொண்டிருப்பதால்.விடுமுறையில் சுற்றுலா சென்றால்கூட அங்கே குழந்தைகளோடு பேசாமல் செல்போனோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.வேலை பார்க்கிற இடங்களில் சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை நேரத்தில் போன் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். நிறுவனங்கள் ஒன்றும் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன.


  பொது இடங்களில் அதிக சத்தமாக பேசுவது தன்னிடம் சொல்வதை ஸ்பீக்கர் போட்டு மற்றவர்களையும் கேட்கச்செய்து நம்பிக்கை மோசடி செய்வது என்று செல்போன் மனிதர்களிடம் இருக்க வேண்டிய அடிப்படை நாகரிகத்தை குறைத்துவிட்டது.அமைதியாக இருக்க வேண்டிய இடங்களான ஹாஸ்பிடல் பிரார்த்தனை கூடங்களில் கூட செல்போன் மணி விடாது ஒலித்துக் கொண்டிருக்கிறது.செல்போன் குற்றங்கள் என்று வகைப் படுத்துகிற அளவிற்கு செல்போனால் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.எப்போதும் செல்போனை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்களா? சும்மா இருக்கும்போது எதுவும் செய்தி வந்திருக்கிறதா என்று அடிக்கடி பார்க்கிறீர்களா? யாருக்கு இப்போது பேசலாம் என்று யோசிக்கிறீர்களா? நீங்கள் செல்போன் பைத்தியமாகிவிட்டீர்கள் என்று அர்த்தம். அந்த அளவுக்கு போகவில்லை என்கிறீர்களா அப்படியெனில் வெகு சீக்கிரத்தில் நீங்கள் அப்படி ஆகப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

  பெரியவர்களை விட குழந்தைகளைத்தான் செல்போன் அதிகம் பாதிக்கிறது. மற்ற சாதனங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி கடந்த பத்தாண்டுகளில் வேகமாக மாணவர்களிடம் பரவிவிட்டது இந்த செல்போன் கலாச்சாரம்.பள்ளிகளில் கல்லூரிகளில் வகுப்பில் பாடங்கள் நடந்து கொண்டிருக்கும்போதே அடுத்த வரிசை பையனுக்கோ பெண்ணிற்கோ குறுஞ்செய்தி அனுப்பி ஆசிரியரை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.பகல் முழுவதும் பள்ளி டியூஷன் என்றிருக்கும் குழந்தைகள் இரவு பத்துமணிக்கு மேல் செல்போனை எடுத்தால் நடுநிசி ஒருமணி வரை கூட கீழே வைப்பதில்லை.இதனால் தூக்கம் கெடுவது மட்டுமல்ல. காது சூடாகி செவித்திறன் பாதிக்கப்படும் என்பது மட்டுமல்ல, மனநிலை கூட பாதிக்கப்படலாம்.


  பலருக்கு பகலிலேயே செல்போன் ஒலிக்காமலேயே ஒலிப்பது போன்ற பிரமை ஏற்படுகிறது. குழந்தைகள் வீட்டிற்கு தெரியாமல் ஒரு சிம் கார்டு வைத்திருக்கிறார்கள் என்கிறது ஒரு பகீர் தகவல். தன்னுடைய பாய் அல்லது கேர்ள் ப்ரெண்டுக்கு மட்டுமே அந்த எண்ணை தருவார்கள்.பெண் பிள்ளைகளுக்கு புதிய நம்பரில் இருந்து போன் வரும் அல்லது எஸ்.எம்.எஸ். வரும். யார் என விசாரித்து போன் செய்தால் அவர்கள் சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்கிறார்கள் என்று அர்த்தம்.பெற்றோர்களே உங்கள் குழந்தைகளின் செல்போனை வாங்கி அவர்கள் அதில் எவ்வளவு நேரம் பேசியிருக்கிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் வாழ்நாளில் உங்களிடம் பேசியதை விட அதிகமாக செல்போனில் பேசியிருப்பதைப் பார்த்து உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படக்கூடும்.நாள் முழுவதும் மூளையை மழுங்கடிக்கும் விளையாட்டுகளை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் தவறான படங்கள் வாங்கி செல்போனில் சேமித்து வைத்துக் கொள்கிறார்கள். வினை விதைத்துவிட்டோம். இனி வேறு வழியில்லை . அதை அறுவடை செய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில்தான் இன்று இருக்கிறோம்.இதனை தவிர்க்க ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் போனில் பேசுவதற்கும் எஸ்.எம்.எஸ் படிப்பதற்கும் அனுப்புவதற்கும் செலவிடுகிறார்கள் என குறித்து வையுங்கள்.வீட்டில் செல்போனுக்கு என்ற ஒதுக்கப்பட்ட நேரம் தவிர மற்ற நேரத்தில் பயன் படுத்தாதீர்கள். இரவு ஒன்பது மணிக்கு மேல் குழந்தைகளின் செல்போனை வாங்கி அணைத்து வைத்து விடுங்கள்

  ஏற்கனவே செல்போனால் உறவுகளை இழந்து விட்டோம். ஏன் சில உயிர்களைக் கூட இழந்து விட்டோம். சுருக்க எஸ்.எம்.எஸ் அனுப்பி வார்த்தைகளை இழந்துவிட்டோம். சொற்களின் அர்த்தங்களை இழந்து விட்டோம். வாழ்க்கையில் அர்த்தமே தொலைந்துவிட்ட பிறகு சொற்களின் அர்த்தம் பற்றியா கவலைப்பட முடியும் ?

  இனிமேலும் இதில் இழக்கப்போவது இவைகளாக இருக்கலாம்..

  • இனி முகம் பார்த்து மனிதர்கள் பேசுவது அரிதாய் மாறிப்போகலாம்.
  • இப்போதே இப்படி இருக்கிறதே. இனி எதிர்காலம் எப்படி இருக்கும்?
  • பள்ளிகள் தொடங்கி எல்லா இடங்களிலும் உணவு இடைவேளை போல நாளை செல்போன் இடைவேளை கொடுக்க வேண்டி வரும்.
  • வரும் காலங்களில் ஆடைகள் அணியாத மனிதர்களைகூட பார்க்கலாம். செல்போன் இல்லாத மனிதர்களை பார்க்க முடியாது.
  • செல்போன்கள் நவீன சிகரெட் என்று சொல்லலாம். ஏனெனில் இனி நோ ஸ்மோக்கிங் ஏரியா என்பது போல நோ ஸ்பீக்கிங் செல்போன் ஏரியா அமைக்கப் பட்டு பொது இடங்களில் போன் பேசக்கூடாது என்று வரலாம்.
  • பாக்கெட்டிற்கு பதில் காதுக்குள்ளேயே செல்போனை வைத்துக்கொள்கிற காலம் வரலாம். 
  • நண்பர்களே செல்போன் பயன்பாடு வாழ்க்கைக்கு முக்கியத்தேவைதான் எனினும் அதிலேயே முழுநேரமும் செலவிடுவது கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டுமல்லவா..?  பதிவினை சுவாசித்துவிட்டு தங்களது எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்..

  22 comments:

  1. அலை பேசி என்பதை ஒரு அத்தியாவசிய தேவை என்று மட்டும் எடுத்துக் கொண்டு, அதுவே வாழ்க்கை என்று இல்லாமல் இருந்தால் சரி.

   ReplyDelete
  2. நிஜமாகவே பதறவைக்கும் உண்மைகள்..

   அலைபேசியை தேவைக்காகவே பயன்படுத்த வேண்டும்..

   பகிர்வுக்கு நன்றி..

   ReplyDelete
  3. சில தொழில்நுட்பங்கள் தேவை என்ற ரீதியில் நம்மிடம் வந்து பிறகு முழுநேரம் நம்மையே முழுவதுமாக ஆக்ரமித்து விடுகிறது.
   அதில் நம்மையறியாமலேயே அலைபேசி தீவிரமாக ஊடுருவிக் கொண்டிருக்கிறது.

   ReplyDelete
  4. நீங்க சொன்னதெல்லாம் மிக சரி, ஆனால் தவிர்க்க முடியாமல் இன்று நம்மிடையே இது போல பல சாதனங்கள் வலம் வருகிறது.......

   ReplyDelete
  5. ஆமா நேர்லதான் பேச முடியல அதான் போன்ல பேசலாம்னு போன் செய்தேன் என்றேன்.//

   அட்டகாசமான எதிர் வினை

   ReplyDelete
  6. பெரியவர்களை விட குழந்தைகளுக்குத்தான் இதனால் பாதிப்பு அதிகம் என்று எல்லாருக்குமே தெரிகிரது. ஆனா 8-ம் க்ளாஸ் படிக்கும் பையன் கையில் கூட செல் போன் இருக்கே.

   ReplyDelete
  7. எல்லோறும் புரிந்து கொள்ளவேண்டிய விடயத்தை சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் பாஸ்

   ReplyDelete
  8. அருமையான பதிவு.
   எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
   நன்றி.

   ReplyDelete
  9. காலத்திற்க்கு தகுந்த பதிவு...சிலர் பேருந்து பயணங்களில் பாட்டுக்களை சத்தமாக வைத்துக்கொண்டு வருகிறார்கள் எரிச்சலாக இருக்கின்றது...

   ReplyDelete
  10. சபாஷ்... இன்றைய தேதிக்கு மிக மிக அவசியமான பதிவு!! நான் பெரும்பாலும் 8.30 am to 8.30pm வரை மட்டுமே செல்ஃபோனை உபயோகிக்கிறேன்.. இத்தனைக்கும் என் தொழிலே இந்த தொழில் நுட்பம் சார்ந்து .. பலர் மணிக்கணக்கில் செல்ஃபோனில் பேசும்போது வியப்பாக.. அதைவிட எரிச்சலாக இருக்கிறது..டெலிபோனுக்கே அந்தக் காலத்தில் சொல்வார்கள்... KISS--Keep It Short & Sweet என்று... எங்கு போகுமோ தெரியவில்லை..
   -ரோமிங் ராமன்.

   ReplyDelete
  11. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான நல்ல பதிவு. நல்வாழ்த்துக்கள். நன்றி.
   நம்ம தளத்தில்:
   "மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

   ReplyDelete
  12. @ suryajeeva said...
   //அலை பேசி என்பதை ஒரு அத்தியாவசிய தேவை என்று மட்டும் எடுத்துக் கொண்டு, அதுவே வாழ்க்கை என்று இல்லாமல் இருந்தால் சரி.//


   உண்மைதான் நண்பரே..முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி

   ReplyDelete
  13. @ !* வேடந்தாங்கல் - கருன் *! said...
   //நிஜமாகவே பதறவைக்கும் உண்மைகள்..

   அலைபேசியை தேவைக்காகவே பயன்படுத்த வேண்டும்..

   பகிர்வுக்கு நன்றி..//

   வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே

   ReplyDelete
  14. @ ராஜா MVS said...
   //சில தொழில்நுட்பங்கள் தேவை என்ற ரீதியில் நம்மிடம் வந்து பிறகு முழுநேரம் நம்மையே முழுவதுமாக ஆக்ரமித்து விடுகிறது.
   அதில் நம்மையறியாமலேயே அலைபேசி தீவிரமாக ஊடுருவிக் கொண்டிருக்கிறது.//

   இதன் வருங்காலம் ப்யனுள்ளதாய் இருந்தாலும் இழக்கப்போவதை நினைத்துபார்க்கவே பயங்கரமாக உள்ளது

   ReplyDelete
  15. @ ! ஸ்பார்க் கார்த்தி ! said...
   //நீங்க சொன்னதெல்லாம் மிக சரி, ஆனால் தவிர்க்க முடியாமல் இன்று நம்மிடையே இது போல பல சாதனங்கள் வலம் வருகிறது.......//

   வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே

   ReplyDelete
  16. rufina rajkumar said...
   ////ஆமா நேர்லதான் பேச முடியல அதான் போன்ல பேசலாம்னு போன் செய்தேன் என்றேன்.//

   அட்டகாசமான எதிர் வினை//

   வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி சகோ..

   ReplyDelete
  17. @ Lakshmi said...
   ///பெரியவர்களை விட குழந்தைகளுக்குத்தான் இதனால் பாதிப்பு அதிகம் என்று எல்லாருக்குமே தெரிகிரது. ஆனா 8-ம் க்ளாஸ் படிக்கும் பையன் கையில் கூட செல் போன் இருக்கே.///

   அதோட பின்விளைவுகள யாரும் யோசிக்கிறதராவே தெரியல அம்மா

   ReplyDelete
  18. @ K.s.s.Rajh said...
   //எல்லோறும் புரிந்து கொள்ளவேண்டிய விடயத்தை சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் பாஸ்//

   மிக்க நன்றி நண்பரே

   ReplyDelete
  19. @ veedu said...

   //காலத்திற்க்கு தகுந்த பதிவு...சிலர் பேருந்து பயணங்களில் பாட்டுக்களை சத்தமாக வைத்துக்கொண்டு வருகிறார்கள் எரிச்சலாக இருக்கின்றது...//

   ஆமாம் நண்பரே..அதிலேயும் இரவு நேரத்தில் 1 மணி 2 மணி பிரயானத்திலேயும் ரொம்ப கஷ்டம்தான்

   ReplyDelete
  20. @ Roaming Raman said...
   //சபாஷ்... இன்றைய தேதிக்கு மிக மிக அவசியமான பதிவு!! நான் பெரும்பாலும் 8.30 am to 8.30pm வரை மட்டுமே செல்ஃபோனை உபயோகிக்கிறேன்.. இத்தனைக்கும் என் தொழிலே இந்த தொழில் நுட்பம் சார்ந்து .. பலர் மணிக்கணக்கில் செல்ஃபோனில் பேசும்போது வியப்பாக.. அதைவிட எரிச்சலாக இருக்கிறது..டெலிபோனுக்கே அந்தக் காலத்தில் சொல்வார்கள்... KISS--Keep It Short & Sweet என்று... எங்கு போகுமோ தெரியவில்லை..
   -ரோமிங் ராமன்.//

   வருகைக்கும் ஆழமான கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே

   ReplyDelete
  21. @ திண்டுக்கல் தனபாலன் said...

   //அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான நல்ல பதிவு. நல்வாழ்த்துக்கள். நன்றி.//

   வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே

   ReplyDelete
  22. @ Rathnavel said...

   //அருமையான பதிவு.
   எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
   நன்றி.//

   தங்கள் வருகைக்கும் ஆதரவிற்க்கும் மிக்க நன்றி ஐயா

   ReplyDelete

  பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.