• Breaking News

  November 24, 2011

  அம்மா சொன்ன வார்த்தைகள்
  வறண்ட ஏரிக்குள் கம்மங்காடு
  காவல் காக்கும் மூத்த பையனுக்கு
  கூழெடுத்து வருவாள் அம்மா...!

  பசிதீர்ந்த களைப்பில் தூங்குவான் மூத்தவன்
  மிச்சக்கூழை அம்மா குடிப்பாள்...!

  தூங்க மாட்டாள் அம்மா
  தலையில் கூடை சுமந்து
  சாணம் வேண்டி மாடுகள் பின்னால்
  செருப்பற்ற காலுடன் ஏரிக்குள் சுற்றுவாள்...!

  குட்டைக்குப் போன மூத்தவன்
  பானையில் தண்ணீர் தருவான்
  துணி அழுத்திய பொத்தலில் தண்ணீர் கசியும்...


  இருவரும் சேர்ந்து சாணம் மிதிப்பார்கள்
  உருட்டி உருட்டி தருவான் மூத்தவன்
  விரல்தடம் பதியத் தட்டுவாள் அம்மா...!  ”எருமுட்ட வித்ததும் கண்டிப்பா ஒனக்கு
  இந்த தரமாச்சும் பேனா வாங்கலாம்”

  புதுப்பேனா கனவில் மூத்தவன்
  மனசறிந்து ஏமாற்றும் கவலையில் அம்மா
  இருட்டின் தடத்தில் வீடு திரும்புவார்கள்...!

  இரைச்சல் தணிந்த இரவு
  அப்பா வருவது எப்போதும் தாமதம்
  நிலா தொடும் வாசலில் பாய்விரிந்து கிடக்கும்
  வந்து உட்கார்வாள் அம்மா..
  தொடையில் சாய்ந்து படுப்பான் மூத்தவன்
  மடியில் முகம் புதைப்பாள் இளையவள்...!

  கர்ணன் கதைதான் ரொம்ப பிடிக்கும்
  திரும்பத் திரும்பச் சொல்வாள் அம்மா
  குள்ளநரிக்கதையும் மிளகாய்க் கதையும்
  கொக்கு நண்டுக் கதையும்
  இளையவளுக்கென்று தனியே சொல்வாள்...!

  அசந்து தூங்குவாள் இளையவள்
  மேலும் கதைகள் வேண்டுவான் மூத்தவன்
  சிரித்தபடியே தொடர்வாள் அம்மா
  பிஞ்சு விரல்களைப் பற்றி
  கண்கள் தளும்ப ஆவலாய்க் கேட்பான்...  ”இந்த கைதான் அப்பாவக் காப்பாத்துமாமா
  இந்த கைதான் கஞ்சி ஊத்துமா
  இந்த கைதான் சந்தோஷமா வச்சிக்குமா”

  பத்து வயதில் கேட்ட கோரிக்கை
  ஆணி எழுத்தாய் பதிந்து கிடக்கிறது...!

  உள்ளூரிலேயே பள்ளிப் படிப்பு
  பக்கத்தூர்க் கல்லூரியில் பி.காம் முடித்தான்

  குடும்பக் கவலைகள் கோடி இருந்தது
  படிக்கிற ஆசை நுரையாய் உடைந்தது...!

  ”படிச்சுக் கிழிச்சது போதும்
  வேலைக்கு அனுப்புடி தொழிலாச்சும் கத்துக்கலாம்”

  அப்பாவின் குரலில் இயலாமை வெடித்தது
  பரிந்து பேச அம்மா முயல்கையில்
  ராத்திரி தோறும் ரகளை நடந்தது...

  “நீயாச்சும் வளைந்து குடேன்டா”

  அழுது அழுது களைத்தான் மூத்தவன்..!
  பொங்கல்திருவிழாவுக்கு போன இடத்தில்
  வீட்டில் வைத்து மாமா சொன்னார்
  ”ஆசப்படறவனை எதுக்குத் தடுக்கணும்
  நம்ம வீட்ல தங்கிப் படிக்கட்டும் அனுப்புங்க”

  மாமாவின் வார்த்தைக்கு அப்பா அடங்கினார்

  மூக்குத்தி மோதிரம் வளையலை அடகுவைத்து
  பணம் கொண்டு வந்து அம்மா தந்தாள்
  இளைய கைகளைப் பற்றி

  கண்ணீர் கலங்க மெதுவாய்ச் சொன்னாள்...!

  “எட்டுப் புள்ளைங்க இருக்கிற ஊடு
  தத்துப் புள்ளையா இருந்து படிக்கணும்
  எல்லாரோடையும் அன்பா பழகு
  அன்புதான் முதல் படிப்பு
  அதுக்கப்பறம் தான் பட்டப்படிப்பு”
  படங்கள் : கூகுள் தேடல்


  நண்பர்களே.. அம்மாவின் வார்த்தைகள் கவிதை பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்

  19 comments:

  1. அன்புதான் முதல் படிப்பு
   அதுக்கப்பறம் தான் பட்டப்படிப்பு”
   அருமையான
   அம்மாவின்
   அறிவுரை
   அருமை!

   ReplyDelete
  2. அன்புதான் முதல் படிப்பு
   அதுக்கப்பறம் தான் பட்டப்படிப்பு”////

   உண்மைதான் அம்மாவுக்கு அன்பு தான் பெரிது.

   ReplyDelete
  3. அருமை.! யாரின் சுயசரிதை இது..? இளமையில் வறுமையை,எடுத்துக்காட்டிய வரிகள்.. எளிமையான வரிகளும் கூட..

   ReplyDelete
  4. நீ வளர்ந்துவரும் வேளையிலே
   குணம் தானடா மிக அவசியம்...
   அவன் தனசீலன் என்று பெயரெடுப்பதைவிட
   குணசீலன் என்று பெயரேடுப்பதையே ஒரு தாய் விரும்புவாள்...

   அருமையா சொல்லியிருகீங்க நண்பரே...

   ReplyDelete
  5. அருமை சிறப்பான வரிகள்

   ReplyDelete
  6. ஏழைகளின் நம்பிக்கை தீரும் வரை, நாடு அமைதியாக தான் இருக்கும்...

   ReplyDelete
  7. தன் பிள்ளைகளின் ஆசைக்காக தன்னை முழுமையாக அர்பணிப்பவள் தாய்...

   ReplyDelete
  8. //இரைச்சல் தணிந்த இரவு
   அப்பா வருவது எப்போதும் தாமதம்
   நிலா தொடும் வாசலில் பாய்விரிந்து கிடக்கும்
   வந்து உட்கார்வாள் அம்மா..
   தொடையில் சாய்ந்து படுப்பான் மூத்தவன்
   மடியில் முகம் புதைப்பாள் இளையவள்...!//
   இந்த கவிதை அழகான காட்சியை
   என் கண்ணுக்குள் விரிகிறது

   ReplyDelete
  9. @ இராஜராஜேஸ்வரி said... 1

   //அன்புதான் முதல் படிப்பு
   அதுக்கப்பறம் தான் பட்டப்படிப்பு”
   அருமையான
   அம்மாவின்
   அறிவுரை
   அருமை!//

   முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் நன்றி சகோ

   ReplyDelete
  10. @ தமிழ்வாசி பிரகாஷ் said...

   ///அன்புதான் முதல் படிப்பு
   அதுக்கப்பறம் தான் பட்டப்படிப்பு”////

   உண்மைதான் அம்மாவுக்கு அன்பு தான் பெரிது.//

   வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி நண்பரே

   ReplyDelete
  11. @தங்கம்பழனி said...

   //அருமை.! யாரின் சுயசரிதை இது..? இளமையில் வறுமையை,எடுத்துக்காட்டிய வரிகள்.. எளிமையான வரிகளும் கூட..//

   கண்டிப்பாய் கிராமத்துத் தாயின் சுயசரிதையே...

   வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி நண்பரே

   ReplyDelete
  12. @ மகேந்திரன் said...

   //நீ வளர்ந்துவரும் வேளையிலே
   குணம் தானடா மிக அவசியம்...
   அவன் தனசீலன் என்று பெயரெடுப்பதைவிட
   குணசீலன் என்று பெயரேடுப்பதையே ஒரு தாய் விரும்புவாள்...

   அருமையா சொல்லியிருகீங்க நண்பரே...//

   மிக்க நன்றி நண்பரே

   ReplyDelete
  13. @ K.s.s.Rajh said...

   //அருமை சிறப்பான வரிகள்//

   மிக்க நன்றி நண்பரே

   ReplyDelete
  14. @ suryajeeva said...

   //ஏழைகளின் நம்பிக்கை தீரும் வரை, நாடு அமைதியாக தான் இருக்கும்...//

   நிதர்சன உண்மை நண்பரே..

   ReplyDelete
  15. @ Rathnavel said...

   //அருமை.//

   மிக்க நன்றி ஐயா

   ReplyDelete
  16. @ ராஜா MVS said...

   //தன் பிள்ளைகளின் ஆசைக்காக தன்னை முழுமையாக அர்பணிப்பவள் தாய்...//

   உண்மைதான் நண்பரே..

   தாயின் அன்பு பரிசுத்தமானது

   ReplyDelete
  17. @ jayaram thinagarapandian said...
   /////இரைச்சல் தணிந்த இரவு
   அப்பா வருவது எப்போதும் தாமதம்
   நிலா தொடும் வாசலில் பாய்விரிந்து கிடக்கும்
   வந்து உட்கார்வாள் அம்மா..
   தொடையில் சாய்ந்து படுப்பான் மூத்தவன்
   மடியில் முகம் புதைப்பாள் இளையவள்...!//
   இந்த கவிதை அழகான காட்சியை
   என் கண்ணுக்குள் விரிகிறது///

   வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே..

   ReplyDelete
  18. வாழ்க்கைப்பாடத்தை அழகாக தாய்ப்பாசம் மூலம் ஊட்டியிருக்கீங்க..:)

   ReplyDelete

  பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.