• Breaking News

    November 22, 2011

    செத்தும் கொடுத்த சீதக்காதி




    எண்ணெய் காணாச் சிகையென
    சீறிச்சிலிர்க்கும் கூரைக்குள்
    சுதந்திரமாய் வேர்விடும்
    சூரிய விழுதுகள்...!

    காற்று மழையோடு
    போரிட்டுப்பெற்ற
    விழுப்புண் பொத்தலில்
    கூச்சமின்றி நுழைந்து
    வெளிச்ச விரலால் தரை தழுவும்
    நிலவின் குறும்பு...!



    அதியிருளென வெளிச்சம் விதைத்தால்
    ஒளி உண்ணச் சூழும்
    தற்கொலைப்படை விட்டில்கள்...!

    பட்டினிப் படிமமாய்
    புதைந்து புரையோடிய
    மூங்கில் கால்கள்...!

    வளைந்து மெலிந்து…
    மண்சுவரையும் தாக்கியது
    இளம்பிள்ளை வாதம்...!



    ஆதிக்கப் பாடமெடுக்கும்...
    குணிவது பணிவன்று
    முன் வாசல்...!


    ஆயினும்...
    நீர்பிரளயத்தின் குட்டி ஒத்திகைக்கும்
    அக்னிக் குளியலுக்கும்,
    மூழ்கி, சரிந்து,
    மூச்சுத் திணறி, கருகி
    செத்தும் கொடுத்தது


    ஐந்து கிலோ அரிசியுடன்
    புடவையும்… வேட்டியும்..


    பாவிகள் அதிலும் ஊழல் செய்கிறார்களே...!


    படங்கள் ; கூகுள் தேடல்
    டிஸ்கி :

    1. படங்களுக்கும் ஊழலுக்கும் சம்பந்தமில்லை.

    2.செத்தும் கொடுத்த சீதக்காதி இதன் மூலக்கதை அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்

    நண்பர்களே ! கவிதை பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்




    19 comments:

    1. மனதை நெகிழச் செய்த கவிதை..

      ReplyDelete
    2. ////ஆயினும்...
      நீர்பிரளயத்தின் குட்டி ஒத்திகைக்கும்
      அக்னிக் குளியலுக்கும்,
      மூழ்கி, சரிந்து,
      மூச்சுத் திணறி, கருகி
      செத்தும் கொடுத்தது


      ஐந்து கிலோ அரிசியுடன்
      புடவையும்… வேட்டியும்..


      பாவிகள் அதிலும் ஊழல் செய்கிறார்களே...!////
      சிறப்பான வரிகள் பாஸ்

      ReplyDelete
    3. இயல்பாக நடக்கும் சம்பவங்களை மிக நேர்த்தியாக வடித்துள்ளீர்கள்... அனைவரும் ரசிக்கும் படியாக...

      வாழ்த்துகள்... நண்பரே...

      ReplyDelete
    4. அருமை கவிதை நண்பரே என்ன சொல்ல நம்மளையும் சுரண்டி வாழ்கிற பிச்சைக்காரர்கள்

      ReplyDelete
    5. வணக்கம் சம்பத்!
      கவிதை மனதை கனக்க வைக்கிறது.. சுடுகாட்டிலேயே ஊழல் செய்பவர்களுக்கு இதெல்லாம் எங்கு உறைக்கப்போகின்றது..!!

      ReplyDelete
    6. இந்த கவிதையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை... உண்மையிலேயே மக்களுக்கான கவிதை...

      ReplyDelete
    7. ஊழல் செய்பவர்கள் திருந்துவது எப்போது?

      ReplyDelete
    8. @ !* வேடந்தாங்கல் - கருன் *! said... 1

      //மனதை நெகிழச் செய்த கவிதை..//

      முதல் வருகைக்கும் முத்தான் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே

      ReplyDelete
    9. @ கவி அழகன் said... 2

      //Arumaiyana kavithai//

      thank u verymuch friend

      ReplyDelete
    10. @ K.s.s.Rajh said... 3


      //சிறப்பான வரிகள் பாஸ்//

      வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே

      ReplyDelete
    11. @ ராஜா MVS said... 4

      //இயல்பாக நடக்கும் சம்பவங்களை மிக நேர்த்தியாக வடித்துள்ளீர்கள்... அனைவரும் ரசிக்கும் படியாக...

      வாழ்த்துகள்... நண்பரே...//

      வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே

      ReplyDelete
    12. @ ஜ.ரா.ரமேஷ் பாபு said... 5

      //அருமை கவிதை நண்பரே என்ன சொல்ல நம்மளையும் சுரண்டி வாழ்கிற பிச்சைக்காரர்கள்//

      உண்மைதான் நண்பரே..

      சுரண்டுபவர்களை அப்படி அழைத்தாலும் கூட திருந்தாத ஜென்மங்கள்

      ReplyDelete
    13. @ காட்டான் said... 6

      //வணக்கம் சம்பத்!
      கவிதை மனதை கனக்க வைக்கிறது.. சுடுகாட்டிலேயே ஊழல் செய்பவர்களுக்கு இதெல்லாம் எங்கு உறைக்கப்போகின்றது..!!//

      உண்மைதான் நண்பரே

      ReplyDelete
    14. @ suryajeeva said... 7

      //இந்த கவிதையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை... உண்மையிலேயே மக்களுக்கான கவிதை...//

      மிக்க நன்றி நண்பரே...

      ReplyDelete
    15. @ Lakshmi said... 8

      //ஊழல் செய்பவர்கள் திருந்துவது எப்போது?//

      இந்த படுபாவிகள் திருந்தாத ஜென்மங்கள்தானே..

      ஒவ்வொரு மழைக்கும் முளைக்கும் காளான் போல்..
      ஒவ்வொரு மழைநிவாரணத்திற்க்கும் முளைக்கிறார்கள் என்பதுதான் மிகக்கொடுமை

      ReplyDelete
    16. பாவிகள் அதிலும் ஊழல் செய்கிறார்களே...!

      ReplyDelete
    17. @ இராஜராஜேஸ்வரி said... 17

      //பாவிகள் அதிலும் ஊழல் செய்கிறார்களே...!//

      உணமைதான் சகோ..

      வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி

      ReplyDelete
    18. கருத்துக்கள் நிறைந்த அருமையான கவி..

      ReplyDelete

    பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.