• Breaking News

  November 7, 2011

  சண்டையிடும் குழந்தைகளை சமாளிக்கும் வழிகள்
  வணக்கம் அன்பிற்கினிய நண்பர்களே ! கடந்த பதிவு குழந்தை தொழிலாளி கவிதையை சுவாசித்து வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.இன்றைய பதிவில் இரண்டு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் ஏற்படும் குழந்தைகளுக்கான சண்டை சச்சரவுகளினை முடிந்தமட்டில் தடுப்பது எப்படி என்று அலசுவோம்.பொதுவாக இரண்டு குழந்தைகள் இருக்கும் வீட்டில் பெற்றோர்கள் அடிக்கடி நடக்கும் சண்டைகளை உறவினர்களிடம் சொல்லி சொல்லி கவலைப்படுவார்கள். ”இவர்கள் இரண்டுபேரும் எலியும் பூனையும் மாதிரி. எப்போதும் ஒரே சண்டை. சண்டைன்னா வெறும் வாய்ச்சண்டை இல்லை. கொடுவாள் தவிர, மற்ற எல்லாத்தையும் தூக்கியாச்சு.சேர்ந்தாப்ல பத்து நிமிஷம் இருந்தா, உடனே ஒரு சண்டை வந்துடுது. திட்டிப் பார்த்தாச்சு. அடிச்சும் பார்த்தாச்சு. கேட்கிறதா தெரியல. என்னைக்குத்தான் இந்த சண்டை ஓயப்போகுதோ தெரியல” என்று அடிக்கடி கவலைப்பட ஆரம்பித்துவிடுவதுண்டு.என் பேனாவை எடுக்கிறான். என் புக்கை கிழிச்சிட்டான என்று பஞ்சாயத்து வரும் போதெல்லாம் பல வீடுகளில் சொல்கிற தீர்ப்பு அவன்கூட சேராதேன்னு சொல்லியிருக்கேன்ல சேர்வதினால்தானே சண்டை வருகிறது. சேராதீர்கள் என்ற சொல் தவறானது.குழந்தைகள் தங்களுக்குள் பிரச்சனைகள் வந்தால் உணர்ச்சிகளை, சண்டை போட்டு தீர்த்து விடுகிறார்கள். வெறுப்பை சேர்த்து வைப்பது இல்லை. அதனால் அடுத்த நிமிடம் எதுவுமே நடக்காதது போல அவர்களால் இயல்பாக இருக்க முடிகிறது.ஒன்று சேராதீர்கள் என்பதற்கு பதில், இப்படி சொல்லலாம், இது உன் பேனா, இது அவன் சட்டை, இது உன் ரூம், இது அவன் ரூம், இவை நம் வீட்டில் உள்ளவை. தேவைப்படுகிற நேரத்தில் யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.சண்டை வரவேண்டாம் என்று, ஒரு பொருள் தேவையென்றால்கூட இரண்டு பேர் இருக்கிற காரணத்தால், இரண்டு வாங்குகிற பெற்றோர்கள் இருக்கிறார்கள். கலர்கூட வேறு வேறாகத்தான் இருக்கும். இது அவர்களை சமாளிக்க உதவலாம். ஆனால் உறவை வளர்க்க உதவாது.

  இந்த பிரச்சினைகளை தீர்க்க தெரிந்த சில யோசனைகள்

  உங்கள் உடன்பிறந்தவர்களை, குழந்தைகளுக்கு முன்னால் விட்டுக்கொடுத்து பேசாதீர்கள். உயர்வாக மட்டுமே பேசுங்கள்.

  ஒரு குழந்தையைப் பற்றி இன்னொரு குழந்தையிடம் குறை சொல்லாதீர்கள்.

  குறைகளோடு மற்றவர்களை ஏற்றுக் கொள்ளும் பழக்கத்தை நீங்களே முன்மாதிரியாக இருந்து ஏற்படுத்திக்கொடுங்கள்.

  தின்பண்டங்களை பங்கு பிரிக்கும்போது யார் பங்கு பிரிக்கிறார்களோ, அவர்கள்தான் கடைசியில், தங்கள் பங்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என குழந்தைகளுக்கு சொல்லுங்கள். அப்போது, அவன் மட்டும் கூட எடுத்துக் கொண்டான் என்ற பிரச்சனை வராது.

  ‘இவன் செய்தது சரியா? நீயே சொல்’ என்று உங்களிடம் வந்தால், ‘கண்டிப்பா நான் கருத்து சொல்ல மாட்டேன். நான் சொல்லணும்னா நாளைக்குச் சொல்றேன்’ என்பதே உங்கள் பதிலாக இருக்க வேண்டும். ‘நீங்க ரெண்டு பேரும் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ். உங்களுக்குள்ள கருத்து வேறு பாடுகள் வர்றது சகஜம்தான். இதை நீங்களே சரி பண்ணிடுவீங்க. நான் இதுல தலையிட மாட்டேன்.’

  இதையெல்லாம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஒப்பிட்டு பேசிப் பேசி, சகோதரர்கள விரோதிகளாக்குவது.குழந்தைகளை தொட்டதற்கெல்லாம் ஒப்பிடுவது ‘உன்னைவிட சின்னவன்தானே.. அவன் எப்படி படிக்கிறான் பாரு. நீயும்தான் இருக்கியே..’

  இயல்பாகவே, யாருடன் ஒப்பிட்டு பேசுகிறோமோ, அவர்கள்மீது இனம்புரியாத வெறுப்பு தோன்றும். எனவே ஒப்பிட்டு பேசிப் பேசி சகோதரர்களை நிரந்தர சண்டைக் காரர்களாக மாற்றி விடாதீர்கள்.

  குழந்தைகளுக்கு முன்னால் சண்டை போடாதீர்கள். ஏனெனில் குழந்தைகள் உங்களை பிரதிபலிக்கும் கண்ணாடிகள்.

  அதே போல, ‘அவன் சின்னப்பையன். அவனோட போய் சண்டை போடுற. நீதான் பெரிய பையன். நீதான் விட்டுக்கொடுக்கணும்’ என்று பேசாதீர்கள். இந்த நியாயமெல்லாம் வளர்கிற வயசில் புரியாது. இந்த அறிவுரையை, இரண்டு பேரிடமும் சொல்லுங்கள். அப்போதுதான், பெற்றோர்கள் நம்மை சமமாக நடத்துகிறார்கள் என்பதை புரிந்து கொள்வார்கள். ஒற்றுமையாக இருப்பார்கள்.

  கோபத்தில், ‘இவன் எனக்கு அண்ணனே இல்லை’ என்றால், அப்போதே இப்படியெல்லாம் பேசக்கூடாது என்று பாயாதீர்கள். பிறகு மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில் அதை சுட்டிக்காட்டி, கிண்டல் செய்யுங்கள். “கோபத்தில்கூட இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது” என்று உறுதி எடுத்துக்கொள்ள தூண்டுங்கள்.

  இருவரில் யார் முதலில் சமாதானமாக போக முயற்சிக்கிறார்களோ, அவர்களே உங்கள் அபிமானத்திற்கு உரியவர்கள் என்பதைப் புரிய வையுங்கள்.

  மற்றவர்களிடம் உங்கள் குழந்தைகளை அறிமுகப்படுத்தும்போது அவர்களின் நிறைகளை மட்டும் சொல்லி அறிமுகப்படுத்துங்கள்.
  பதிவினை சுவாசித்துக் கொண்டிருக்கும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்


  நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களையும் வாக்குகளையும் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்..


  41 comments:

  1. அருமையான பதிவு.

   நன்றி.

   ReplyDelete
  2. அம்மா, அப்பாவை அனுப்பினால் அது அதிரடிப்படை. அப்பா, அம்மாவை அனுப்பினால் அது அமைதிப்படை..

   பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

   ReplyDelete
  3. நல்ல யோசனைகள் தான் இதையும் கேட்காத குழந்தைகள் நிறைய இருக்குதுங்க...


   அதனால் அவங்க போக்குல நாமதான் போகனும்...


   சிறப்பான பதிவு...
   வாழ்த்துக்கள்..

   ReplyDelete
  4. அருமையான யோசனைகள் சகோதரரே!

   ReplyDelete
  5. இனிய மாலை வணக்கம் பாஸ்,

   பெற்றோருக்கு மிகவும் அவசியமான பதிவு.
   அதுவும் எந்தக் குழந்தையும் மண்ணில் பிறக்கையில் நல்ல குழந்தைகளே!
   அவை நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்பதற்கமைவாக,
   பெற்றோரின் ஒவ்வோர் செயற்பாடுகளும் தான் எதிர் காலத்தில் குழந்தைகளின் உணர்வுகளை மாற்றியமைக்கின்றன எனவும், பெற்றோர் குழந்தைகள் முன்னே உணவுப் பொருட்களைப் பிரிக்கையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதனையும் அழகுறச் சொல்லியிருக்கிறீங்க.

   நல்லதோர் பதிவு.

   ReplyDelete
  6. சின்ன குழந்தைகள் சண்டை போடாமலிருக்க
   பெரியக்குழந்தைகளின் முயற்சியில் தான் இருக்கிறது.
   அனுபவித்து அழகாக சொன்னீர்கள்!

   ReplyDelete
  7. குழந்தைகளை பலர் குழந்தையாகவே பார்ப்பதில்லை... ஏதாவது தவறு செய்துவிட்டால் கண்டிப்பு என்ற பெயரில் திட்டுவதும், அடிப்பதும். இதுபோன்ற செயல் கண்டிப்பு அல்ல அவர்களை தண்டிப்பது.

   இரண்டு குழந்தைகள் சண்டை போட்டால் அவர்களை சமாதானம் செய்யாமல் இரண்டுபேரையும் இவர்கள் நாளுஅடி கொடுத்து மூலையில் உட்கார வைக்கிர பெற்றோர்களும் உள்ளார்கள்.

   அவர்கள் தவறு செய்துவிட்டார்கள் என்று சொல்வதே மடத்தனம். அவர்கள் புதிதாக உலகத்திற்க்கு வந்தவர்கள், ஒவ்வொன்றையும் சரியாக கற்றுத்தருகிற பொருப்பு நம்மைச் சார்ந்தது என்று பெற்றோர்கள் நினைக்க வேண்டும்.

   நாம் குழந்தையாக இருந்த காலம் வேறு, அவர்கள் பிறந்திருக்கும் காலமே வேறு இந்த எதார்த்தத்தை பலர் புரிந்துக் கொள்ளவதே இல்லை.

   ReplyDelete
  8. நல்ல நிறைய சிந்தனையை தந்துள்ளீர்கள்...

   பகிர்வுக்கு நன்றி... நண்பரே...

   ReplyDelete
  9. இது நான் கண்கூடாக இரு உறவினர்கள் வீடுகளில் சமீபத்தில் பார்த்தது...நல்ல அலசல் சம்பத்...

   ReplyDelete
  10. பகிர்வுக்கு நன்றி

   ReplyDelete
  11. "குழந்தைகளுக்கு முன்னால் சண்டை போடாதீர்கள். ஏனெனில் குழந்தைகள் உங்களை பிரதிபலிக்கும் கண்ணாடிகள்." உண்மைதான்... என் வலையில் http://alaiyallasunami.blogspot.com/2011/11/blog-post_07.html

   ReplyDelete
  12. பெற்றோறுக்கு அவசியமான பதிவு

   ReplyDelete
  13. பெற்றோருக்கு தேவையான அவசியமான பதிவு.அவங்க படிக்கனும்.

   ReplyDelete
  14. அவசியமான கருத்துக்கள் கொண்ட நல்ல பதிவு.நன்றி பகிர்வுக்கு.

   ReplyDelete
  15. பதிவு அருமை. என் முக நூலில் பகிருகிறேன்.நன்றி.

   ReplyDelete
  16. நல்ல பதிவு.
   வாழ்த்துக்கள்.

   ReplyDelete
  17. அட்டகாசம். எங்க வீட்டுல எப்பவும் இப்படித்தான். ரொம்ப உபயோகமா இருக்கு உங்க ஆலோசனை.

   ReplyDelete
  18. @ lavarasan said... 1

   //அருமையான பதிவு.

   நன்றி.//

   முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே

   ReplyDelete
  19. @ இராஜராஜேஸ்வரி said... 2

   //அம்மா, அப்பாவை அனுப்பினால் அது அதிரடிப்படை. அப்பா, அம்மாவை அனுப்பினால் அது அமைதிப்படை..

   பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..//

   மிக்க நன்றி சகோ

   ReplyDelete
  20. கவிதை வீதி... // சௌந்தர் // said... 3

   //நல்ல யோசனைகள் தான் இதையும் கேட்காத குழந்தைகள் நிறைய இருக்குதுங்க...

   அதனால் அவங்க போக்குல நாமதான் போகனும்...
   சிறப்பான பதிவு...
   வாழ்த்துக்கள்..//

   வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி நண்பரே

   ReplyDelete
  21. !* வேடந்தாங்கல் - கருன் *! said... 4

   //நல்ல யோசனைகள்...//

   நன்றி நண்பரே

   ReplyDelete
  22. @ ஷைலஜா said... 5

   //அருமையான யோசனைகள் சகோதரரே!//

   மிக்க நன்றி சகோ..

   ReplyDelete
  23. @ நிரூபன் said... 6

   //இனிய மாலை வணக்கம் பாஸ்,

   பெற்றோருக்கு மிகவும் அவசியமான பதிவு.
   அதுவும் எந்தக் குழந்தையும் மண்ணில் பிறக்கையில் நல்ல குழந்தைகளே!
   அவை நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்பதற்கமைவாக,
   பெற்றோரின் ஒவ்வோர் செயற்பாடுகளும் தான் எதிர் காலத்தில் குழந்தைகளின் உணர்வுகளை மாற்றியமைக்கின்றன எனவும், பெற்றோர் குழந்தைகள் முன்னே உணவுப் பொருட்களைப் பிரிக்கையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதனையும் அழகுறச் சொல்லியிருக்கிறீங்க.

   நல்லதோர் பதிவு.//

   வணக்கம் சகோ

   தங்களின் ஆழமான கருத்திற்க்கு என் மனமார்ந்த நன்றிகள்

   ReplyDelete
  24. @ நம்பிக்கைபாண்டியன் said... 7

   //பயணுள்ள யோசனைகள்//

   மிக்க நன்றி நண்பரே

   ReplyDelete
  25. @ கோகுல் said... 8

   //சின்ன குழந்தைகள் சண்டை போடாமலிருக்க
   பெரியக்குழந்தைகளின் முயற்சியில் தான் இருக்கிறது.
   அனுபவித்து அழகாக சொன்னீர்கள்!//

   வாங்க கோகுல் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி

   ReplyDelete
  26. @ ராஜா MVS said... 10

   //நல்ல நிறைய சிந்தனையை தந்துள்ளீர்கள்...

   பகிர்வுக்கு நன்றி... நண்பரே...//

   ஆழ சிந்தித்து அருமையாக தாங்கள் இட்ட கருத்திற்க்கு மிக்க நன்றி நண்பரே

   ReplyDelete
  27. @ ரெவெரி said... 11

   //இது நான் கண்கூடாக இரு உறவினர்கள் வீடுகளில் சமீபத்தில் பார்த்தது...நல்ல அலசல் சம்பத்...//

   உண்மைதான் நண்பரே..இரு குழந்தைகள் உள்ள வீடுகளில் அடிக்கடி நடக்கிறது.முடிந்தவரை சண்டை வரமாலிருக்க முயற்சி எடுப்போம்

   ReplyDelete
  28. @ suryajeeva said... 12

   //பகிர்வுக்கு நன்றி//

   மிக்க நன்றி நண்பரே

   ReplyDelete
  29. @விச்சு said... 13

   //"குழந்தைகளுக்கு முன்னால் சண்டை போடாதீர்கள். ஏனெனில் குழந்தைகள் உங்களை பிரதிபலிக்கும் கண்ணாடிகள்." உண்மைதான்... என் வலையில் http://alaiyallasunami.blogspot.com/2011/11/blog-post_07.html//

   தங்கள் பகிர்வும் அருமை நண்பரே

   ReplyDelete
  30. @ K.s.s.Rajh said... 14

   //பெற்றோறுக்கு அவசியமான பதிவு//

   மிக்க நன்றி சகோ

   ReplyDelete
  31. @ Lakshmi said... 15

   //பெற்றோருக்கு தேவையான அவசியமான பதிவு.அவங்க படிக்கனும்.//

   வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி அம்மா

   ReplyDelete
  32. @ Chidambaram Venkatesa Deekshithar said... 16

   //The real talk//

   thank you very much sir

   ReplyDelete
  33. @ RAMVI said... 17

   //அவசியமான கருத்துக்கள் கொண்ட நல்ல பதிவு.நன்றி பகிர்வுக்கு.//

   மிக்க நன்றி சகோ...

   ReplyDelete
  34. @ dr.tj vadivukkarasi said... 18

   //பதிவு அருமை. என் முக நூலில் பகிருகிறேன்.நன்றி.//

   மிக்க நன்றி டாக்டர்

   ReplyDelete
  35. @ Rathnavel said... 19

   //நல்ல பதிவு.
   வாழ்த்துக்கள்.//

   மிக்க நன்றி ஐயா..

   ReplyDelete
  36. @ வெண் புரவி said... 20

   //அட்டகாசம். எங்க வீட்டுல எப்பவும் இப்படித்தான். ரொம்ப உபயோகமா இருக்கு உங்க ஆலோசனை.//

   வாருங்கள் திரு.வெண் புரவி நண்பர் அவர்களே..

   வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி

   ReplyDelete
  37. ஒரு 25 வருடத்திற்க்கு முன்பு என் அன்னையிடம் இதனை கூறியிருந்தால் நான் மிகவும் மகிழ்ந்து இருப்பேன்..

   போகட்டும், இனி என் மழலைகளுக்கு பயன்படட்டுமே...
   நன்றி சகோ....

   ReplyDelete
  38. @ தமிழ்கிழம் said... 40

   //ஒரு 25 வருடத்திற்க்கு முன்பு என் அன்னையிடம் இதனை கூறியிருந்தால் நான் மிகவும் மகிழ்ந்து இருப்பேன்..
   போகட்டும், இனி என் மழலைகளுக்கு பயன்படட்டுமே...
   நன்றி சகோ....//

   வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி சகோ..

   வருங்கால குழந்தைகளுகள் நல்லவர்களாக வல்லவர்களாக உருவாக்க முயற்சிப்பதே இந்த வலைத்தள நோக்கம்

   மீண்டு வருக நண்பரே

   ReplyDelete

  பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.