• Breaking News

  November 5, 2011

  குழந்தை தொழிலாளி

  பட்டம் விடுவது மாதிரியும்
  கண்ணாமூச்சி விளையாடுவது மாதிரியும்
  கனவுகளிலிருப்போம்...!

  தட்டி உலுக்கி
  அள்ளிப்போட்டு பறக்கும்
  பிசாசு வண்டி...!

  தூங்க நினைத்து
  முகம் புதைக்கும் போது
  எஞ்சின் தடதடப்பில்
  கனவு மறந்து போயிருக்கும்....

  பள்ளிக்கூடம் போவது மாதிரியும்
  பரிசுகள் பெறுவது மாதிரியும்
  நினைத்துக் கொண்டிருப்போம்...!

  முதலை போல் வாய் பிளந்து
  இழுத்துக் கொள்ளும் வெடிக்கிடங்கு...!


  கலக்கம் இல்லா
  காலைவேளை வரவேற்க்கும்
  மருந்து நெடி கொண்டு...

  எந்திர இதயங்களுக்கிடையே
  எந்திரமாக எத்தனிக்கும் சிறுகைகள்
  பணம்தரும் பொன்னாகத் தெரியும்.....

  பள்ளிக்கூடம் போகாமல்...
  ஐயனார் கோவிலிலும்
  வயற்காட்டிலும் சுற்றித்திரிந்து

  யாருடைய தோட்டத்திலோ
  மாங்காய் அடித்துச் சாப்பிட்டுவிட்டு
  தெருப் புழுதியில் விளையாடிக் கரைந்ததை

  மூத்த தலைமுறை
  சொல்லும் போது
  புராணக் கதை போலிருக்கும்….  முதல் நாள் கூலியாய்
  முதலாளி திணித்த
  அழுக்கடைந்த காகிதகங்களையும்
  வட்ட வில்லைகளையும்...!

  என்னவென்றே தெரியாமல்
  வாங்கி வீட்டில் கொடுக்க
  அரிசியாகவும் விறகாகவும்
  மாறுவது வியப்பாயிருக்கும்...!

  அடுப்பு பற்ற வைக்க
  பக்கத்து வீட்டில் நெருப்பு கேட்கும்போது
  நாள் முழுக்க ஒட்டிய பெட்டிகள்
  கண்ணில் படரும்....

  திருவிழா நாளின் ராட்டினமாய்த்
  தலைசுற்ற வைக்கும் வாழ்க்கை...!

  உழைத்த களைப்பில்
  அடித்துப் போட்டாற்போல் கிடக்கும்
  குடும்பம் முழுவதும்...!

  நிலவும் நட்சத்திரமும் தவிர
  முற்றத்தில்
  தூங்கும் வரை கதை சொல்ல
  யாருமில்லை....!  தூக்கத்திலும்
  வேன் பயணத்தில் மட்டுமே
  நாங்கள் குழந்தைகள் என்று
  நினைவுக்கு வருகிறது....!

  தெருக்களில் கூச்சலிட...
  மண்ணில் புரள...
  பெரியவர்களுக்கு சினமூட்ட...
  தூணில் கட்டிப்போட...
  மலராய் சிரிக்க...

  எங்களுக்கும் ஆசை தான்…
  எப்போது இவையெல்லாம் நிறைவேறும்....?
  நண்பர்களே..கவிதை பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களை தயங்காமல் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்..
  40 comments:

  1. மனசு கனக்கிறது நண்பா! அருமையான கவிதை!

   ReplyDelete
  2. நிலவும் நட்சத்திரமும் தவிர
   முற்றத்தில்
   தூங்கும் வரை கதை சொல்ல
   யாருமில்லை..../

   மிகக் கனத்த ஏக்க வரிகள்.

   ReplyDelete
  3. குழந்தை மனதின் ரணம் அப்படியே உங்கள் வரிகளில் அருமை

   ReplyDelete
  4. அனைத்து சொற்களும் அருமை, இது அது என்று எதுவும் தனித்து நிற்கவில்லை, அனைத்தும் சங்கிலி போல்...

   ReplyDelete
  5. திருவிழா நாளின் ராட்டினமாய்த்
   தலைசுற்ற வைக்கும் வாழ்க்கை...!

   வழக்கம் போல் அருமை! அருமை!

   ReplyDelete
  6. நல்ல கவிதை வாழ்த்துக்கள்

   ReplyDelete
  7. மனத்தை உலுக்கி விட்டது கவிதை.பாவம்,குழந்தை பருவத்தை அனுபவிக்க முடியாத அந்த குழந்தைகள்.

   ReplyDelete
  8. எங்களுக்கும் ஆசை தான்…
   எப்போது இவையெல்லாம் நிறைவேறும்....?

   பதில் தெரியாத கேள்விதான்

   ReplyDelete
  9. மனத்தை உலுக்கி விட்டது கவிதைஅந்த பிஞ்சு உள்ளங்களின் ஆ சைஎப்போது இவையெல்லாம் நிறைவேறும்....?

   ReplyDelete
  10. தங்களின் கவிதை நடை அருமை... நண்பரே...

   படித்து முடிக்கையில் நம் கண்ணெதிரே ஒருமுறையேனும் இதுபோன்ற சிறுவர்களை கண்ட காட்சிகள் ஓடுவதை தடுக்க முடியவில்லை...

   ReplyDelete
  11. உழைக்கும் குழந்தைத் தலைமுறையின் உள்ளக் குமுறலை
   நெஞ்சைக் கனக்கவைக்கும் கவிதை வரிகளால் சித்தரித்துள்ள
   விதம் அருமை !.......இந்த பிஞ்சுமனங்களின் மகிழ்ச்சியான வாழ்வு
   விரைந்து மலர வேண்டும் .வாழ்த்துக்கள் சகோ உங்கள் புரட்சிக்
   கவிதை வரிகளுக்கு ....ஓர் சின்ன வேண்டுகோள் .நான் என் ஆரம்பகாலக்
   கவிதைகளை இப்போது தமிழ் 10 ல் தொடர்ந்து வெளியிட்டுள்ளேன் .அவை
   அனைத்தும் காத்திருக்கும் பகுதியில் உள்ளன .தயவு செய்து சிரமம்
   கருதாமல் முடிந்தவரை அந்தக் கவிதைகள் உங்களுக்குப்
   பிடித்திருந்தால் அவை அனைவரையும் சென்றடைய உதவுமாறு
   கேட்டுக்கொள்கின்றேன் .மிக்க நன்றி சகோ தாங்கள் எனக்கு இதுவரை
   வழங்கிவரும் ஊக்குவிப்புகளிற்கு .

   ReplyDelete
  12. உழைத்த களைப்பில்
   அடித்துப் போட்டாற்போல் கிடக்கும்
   குடும்பம் முழுவதும் சிரிக்க 19840715-0001 பசுமையான காமெடி சீன்கள்

   ReplyDelete
  13. மனதை நெருடும் கவிதை

   ReplyDelete
  14. மனத்தை உலுக்கி விட்ட கவிதை...

   //எங்களுக்கும் ஆசை தான்…
   எப்போது இவையெல்லாம் நிறைவேறும்//

   பதில் தெரியாத கேள்விதான்...

   ReplyDelete
  15. முதல் நாள் கூலியாய்
   முதலாளி திணித்த
   அழுக்கடைந்த காகிதகங்களையும்
   வட்ட வில்லைகளையும்...!

   என்னவென்றே தெரியாமல்
   வாங்கி வீட்டில் கொடுக்க
   அரிசியாகவும் விறகாகவும்
   மாறுவது வியப்பாயிருக்கும்...!
   //

   வலிக்கும் வரிகள்!

   ReplyDelete
  16. @ பிரெஞ்சுக்காரன் said... 1

   //மனசு கனக்கிறது நண்பா! அருமையான கவிதை!//

   முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே

   ReplyDelete
  17. @ இராஜராஜேஸ்வரி said... 2

   //நிலவும் நட்சத்திரமும் தவிர
   முற்றத்தில்
   தூங்கும் வரை கதை சொல்ல
   யாருமில்லை..../

   மிகக் கனத்த ஏக்க வரிகள்.//

   வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி சகோ

   ReplyDelete
  18. @ ஜ.ரா.ரமேஷ் பாபு said... 3

   //குழந்தை மனதின் ரணம் அப்படியே உங்கள் வரிகளில் அருமை//

   மிக்க நன்றி நண்பரே

   ReplyDelete
  19. @ suryajeeva said... 4

   //அனைத்து சொற்களும் அருமை, இது அது என்று எதுவும் தனித்து நிற்கவில்லை, அனைத்தும் சங்கிலி போல்...//

   மிக்க நன்றி திரு.சூர்ய ஜீவா அவர்களே

   ReplyDelete
  20. @ நம்பிக்கைபாண்டியன் said... 5

   //திருவிழா நாளின் ராட்டினமாய்த்
   தலைசுற்ற வைக்கும் வாழ்க்கை...!

   வழக்கம் போல் அருமை! அருமை!//

   தொடர் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி நண்பா

   ReplyDelete
  21. @ RAMVI said... 7

   //மனத்தை உலுக்கி விட்டது கவிதை.பாவம்,குழந்தை பருவத்தை அனுபவிக்க முடியாத அந்த குழந்தைகள்.//

   ஆம் சகோ எவ்வளவு தீவிர நடவடிக்கை எடுத்தாலும் குறையவில்லை குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை..

   ReplyDelete
  22. @ Lakshmi said... 8

   //எங்களுக்கும் ஆசை தான்…
   எப்போது இவையெல்லாம் நிறைவேறும்....?

   பதில் தெரியாத கேள்விதான்//

   உண்மைதான் அம்மா..

   ReplyDelete
  23. @ kannan said... 9

   //மனத்தை உலுக்கி விட்டது கவிதைஅந்த பிஞ்சு உள்ளங்களின் ஆ சைஎப்போது இவையெல்லாம் நிறைவேறும்....?//

   Lakshmi அம்மா சொன்னதுபோல் விடை தெரியா கேள்விதான் நண்பரே

   ReplyDelete
  24. @ ராஜா MVS said... 10

   //தங்களின் கவிதை நடை அருமை... நண்பரே...
   படித்து முடிக்கையில் நம் கண்ணெதிரே ஒருமுறையேனும் இதுபோன்ற சிறுவர்களை கண்ட காட்சிகள் ஓடுவதை தடுக்க முடியவில்லை...//

   உண்மைதான் நண்பரே..காணும் இடங்களில் எல்லாம் நிறைந்து இருக்கிறார்கள்

   ReplyDelete
  25. @ அம்பாளடியாள் said... 11

   //உழைக்கும் குழந்தைத் தலைமுறையின் உள்ளக் குமுறலை
   நெஞ்சைக் கனக்கவைக்கும் கவிதை வரிகளால் சித்தரித்துள்ள
   விதம் அருமை !.......இந்த பிஞ்சுமனங்களின் மகிழ்ச்சியான வாழ்வு
   விரைந்து மலர வேண்டும் .வாழ்த்துக்கள் சகோ உங்கள் புரட்சிக்
   கவிதை வரிகளுக்கு ....ஓர் சின்ன வேண்டுகோள் .நான் என் ஆரம்பகாலக்
   கவிதைகளை இப்போது தமிழ் 10 ல் தொடர்ந்து வெளியிட்டுள்ளேன் .அவை
   அனைத்தும் காத்திருக்கும் பகுதியில் உள்ளன .தயவு செய்து சிரமம்
   கருதாமல் முடிந்தவரை அந்தக் கவிதைகள் உங்களுக்குப்
   பிடித்திருந்தால் அவை அனைவரையும் சென்றடைய உதவுமாறு
   கேட்டுக்கொள்கின்றேன் .மிக்க நன்றி சகோ தாங்கள் எனக்கு இதுவரை
   வழங்கிவரும் ஊக்குவிப்புகளிற்கு .//

   வணக்கம் சகோதரம்..

   தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி

   தங்களின் பதிவுகளை சுவாசித்துவிட்டு வாக்களித்து விட்டு வந்துள்ளேன்..

   ஒவ்வொன்றும் அருமை..

   ReplyDelete
  26. @ கூகிள்சிறி said... 12

   //உழைத்த களைப்பில்
   அடித்துப் போட்டாற்போல் கிடக்கும்
   குடும்பம் முழுவதும் சிரிக்க 19840715-0001 பசுமையான காமெடி சீன்கள்//

   வாங்க சகோ..காமெடி பார்த்து சிரித்து மகிழ்ந்தேன் நண்பரே..பகிர்விற்க்கு நன்றி

   ReplyDelete
  27. @ K.s.s.Rajh said... 13

   //மனதை நெருடும் கவிதை//

   வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி நண்பரே

   ReplyDelete
  28. @ரெவெரி said... 14

   //மனத்தை உலுக்கி விட்ட கவிதை...

   //எங்களுக்கும் ஆசை தான்…
   எப்போது இவையெல்லாம் நிறைவேறும்//

   பதில் தெரியாத கேள்விதான்...///

   நிதர்சனமான உண்மைதான் சகோ..

   ReplyDelete
  29. @ கோகுல் said... 15

   //முதல் நாள் கூலியாய்
   முதலாளி திணித்த
   அழுக்கடைந்த காகிதகங்களையும்
   வட்ட வில்லைகளையும்...!
   என்னவென்றே தெரியாமல்
   வாங்கி வீட்டில் கொடுக்க
   அரிசியாகவும் விறகாகவும்
   மாறுவது வியப்பாயிருக்கும்...!
   //

   வலிக்கும் வரிகள்!////

   வாங்க கோகுல் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி

   ReplyDelete
  30. @ கவி அழகன் said... 6

   //நல்ல கவிதை வாழ்த்துக்கள்//

   வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே

   ReplyDelete
  31. ''...எங்களுக்கும் ஆசை தான்…எப்போது இவையெல்லாம் நிறைவேறும்...'''
   மிகவும் வேதனை நிறைந்த கவிதை. இதில் அரசியல் வாதிகள் திருந்தினால் தானே அத்தனையும் சுகப் படும். பணி தொடரட்டும். வாழ்த்துகள்.
   வேதா. இலங்காதிலகம்.
   http://www.kovaikkavi.wordpress.com

   ReplyDelete
  32. "என்னவென்றே தெரியாமல் வாங்கி வீட்டில் கொடுக்க
   அரிசியாகவும் விறகாகவும் மாறுவது வியப்பாயிருக்கும்...!"

   என்னவென்றே தெரியாத இப்படிப்பட்ட சிறுவர்களைவேலைக்கமர்த்தும் கொடுமை என்றுதான் முடிவுக்கு வருமோ?!

   ReplyDelete
  33. அணைத்து வரிகளும் அருமை நண்பரே ...
   வாழ்த்துக்கள்

   ReplyDelete
  34. கவிதையின் சாரம் பிடித்திருக்கிறது. குழந்தை தொழிலாளர்களின் மனநிலையை எடுத்துரைக்கும் மாபெரும் கவிதை. பகிர்வுக்கு நன்றி சம்பத்குமார் அவர்களே..!!

   ReplyDelete
  35. @ kovaikkavi said... 31

   //''...எங்களுக்கும் ஆசை தான்…எப்போது இவையெல்லாம் நிறைவேறும்...'''
   மிகவும் வேதனை நிறைந்த கவிதை. இதில் அரசியல் வாதிகள் திருந்தினால் தானே அத்தனையும் சுகப் படும். பணி தொடரட்டும். வாழ்த்துகள்.
   வேதா. இலங்காதிலகம்.
   http://www.kovaikkavi.wordpress.com//

   வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி சகோ

   ReplyDelete
  36. @ வியபதி said... 32

   //"என்னவென்றே தெரியாமல் வாங்கி வீட்டில் கொடுக்க
   அரிசியாகவும் விறகாகவும் மாறுவது வியப்பாயிருக்கும்...!"

   என்னவென்றே தெரியாத இப்படிப்பட்ட சிறுவர்களைவேலைக்கமர்த்தும் கொடுமை என்றுதான் முடிவுக்கு வருமோ?!//

   உண்மைதான் நண்பரே உலக சுகாதார அமைப்பு கூட தீவிர நடவடிக்கை எடுக்கப் போவதாய் செய்திகளில் படித்தேன்

   ReplyDelete
  37. @ jayaram thinagarapandian said... 33

   //அணைத்து வரிகளும் அருமை நண்பரே ...
   வாழ்த்துக்கள்//

   வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே

   ReplyDelete
  38. @ தங்கம்பழனி said... 34

   //கவிதையின் சாரம் பிடித்திருக்கிறது. குழந்தை தொழிலாளர்களின் மனநிலையை எடுத்துரைக்கும் மாபெரும் கவிதை. பகிர்வுக்கு நன்றி சம்பத்குமார் அவர்களே..!!//

   மிக்க நன்றி திரு.தங்கம் பழனி அவர்களே

   ReplyDelete
  39. வரிகள் அனைத்தும் வருத்தத்தை சொல்கிறது.

   நிலவும் நட்சத்திரமும் தவிர
   முற்றத்தில்
   தூங்கும் வரை கதை சொல்ல
   யாருமில்லை....!//

   உண்மை இன்றைய தலைமுறைக்கு அதெல்லாம் எட்டாக்கனி..ஒரு சிலரைதவிர]

   ReplyDelete
  40. @ அன்புடன் மலிக்கா said... 39

   ////வரிகள் அனைத்தும் வருத்தத்தை சொல்கிறது.

   நிலவும் நட்சத்திரமும் தவிர
   முற்றத்தில்
   தூங்கும் வரை கதை சொல்ல
   யாருமில்லை....!//

   உண்மை இன்றைய தலைமுறைக்கு அதெல்லாம் எட்டாக்கனி..ஒரு சிலரைதவிர]////

   வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே

   மீண்டும் வருக

   ReplyDelete

  பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.