• Breaking News

    October 18, 2011

    பெற்றோர்கள் அறிய வேண்டிய நோய்கள்


    வணக்கம் பெற்றோர்களே மீண்டுமொரு குழந்தைகளுக்கான பதிவில் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இன்றைய பதிவில் பெற்றோர்கள் குழந்தைகளின் கற்கும் முறையில் எதிர் கொள்ள வேண்டிய நோய்கள்,அந்த நோய்கள் தோன்றுவதற்கான அறிகுறிகள் பற்றி அலசுவோம்.
    குழந்தை வளர்ப்பு  என்பது, இன்றைய வேகமான சூழலுக்கேற்ப அவர்களை உருவாக்கி வளர்ப்பதும் பெரும் சவாலானதாகத் தான் இருக்கிறது. நமது கல்வி முறை தான் நமது குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக இருப்பதால் பெற்றோர்களின் கவலையும் கவனமுமாக இருப்பது கல்வி முறை தான். இதனால் தான் ஆரம்பக் கல்வி முதல் கல்லூரிப் படிப்பு வரை இன்று பெரிய கவனம் செலுத்தப்படுகிறது.

    பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்லும் வாழ்க்கை முறையில் குழந்தைகளின் கற்கும் திறன் குறித்து தேவைப்படும் கவனத்தை செலுத்த முடிவதில்லை. இவை குறித்து எண்ணற்ற ஆய்வுகளும் ஆலோசனைகளும் இருந்தும் கூட, அன்றாட வாழ்வின் வேகமான போக்கினாலும் அடிப்படையிலேயே பொறுப்பற்ற பெற்றோர்களாலும் இது போன்ற குழந்தைகள் இலக்கின்றி காலத்தின் போக்கில் எடுத்துச் செல்லப்படுகிறார்கள்.

    ஒத்த வயதுடைய குழந்தைகளுடன் ஒப்பிடும் போது படிப்பது, எழுதுவது, தகவல் பரிமாற்றம், கவனிக்கும் திறன், பொருள்படுத்தும் திறன் மற்றும் கணிதம் தொடர்புடைய அம்சங்களில் நம் குழந்தைகளுக்கு ஏகப்பட்ட பிரச்னைகள்.சிறு வயதில் இந்த பிரச்சினைகள் பெற்றோரால் உணரப்படவில்லையென்றால் அந்த குழந்தையின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறிவிடும் சாத்தியம் அதிகம் என்பதை இது போன்ற குழந்தைகளின் பெரும்பாலான பெற்றோர் உணருவதில்லை.இந்த கல்வி கற்கும் குறைபாடானது படிப்பில் துவங்கி, படிப்படியாக மனக்குறைபாடு, தாழ்வு மனப்பான்மை, மனச் சோர்வு, சக மாணவர்களுடன் உறவுச் சிக்கல் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு அவர்களை கொண்டு செல்லும் தன்மையை கொண்டுள்ளது.


    அவர்களின் கற்கும் குறைகளை கண்டுபிடிப்பதில் ஆசிரியர்களின் பங்கு தலையாயது. சக மாணவர்களுடன் பழகும் தன்மை, ஒதுங்கும் மனப்பான்மை, கோபம், தகவல் பரிமாற்றம், புதியவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம், ஒப்பிட்டு முடிவெடுக்கும் திறன் போன்றவற்றில் குழந்தையின் நிலை என்ன என்பதை ஆசிரியர்களால் மட்டுமே உணர முடியும். தற்செயலாக ஒரு குழந்தையிடம் இதுபோன்ற குறைபாடுகள் காணப்பட்டால் உடனே பெற்றோருக்குத் தெரிவிப்பது ஆசிரியரின் கடமையே.


    குறைபாடுகள் உணரப்பட்டவுடன் பெற்றோர் குறிப்பிட்ட குறைபாட்டுக்கான சிறப்பு மருத்துவரின் உதவியை நாட வேண்டும். இப்போது முரண்பட்ட குறைபாடுகளைக் கொண்ட குழந்தைகளுக்கான பிரத்யேகமான பள்ளிகள் உள்ளன. இதில் இது போன்ற குழந்தைகளை சேர்ப்பதில் தயக்கமே கூடாது. L.K.G வகுப்புகளில் சேர்ப்பதற்கு முன் Pre - KG வகுப்புகளில் சேர்ப்பது கூட ஒரு விதத்தில் பிரச்னையை முதற்கட்டத்திலேயே அறிய உதவலாம். இந்த குறைபாடுகள் ஒரு நோயல்ல என்பதையும் சரியான கவனிப்பின் மூலமாகவும் நமது உடனடி நடவடிக்கைகளின் மூலமாகவும் இவற்றை களைந்து குழந்தையை மேம்படுத்தலாம் என்பதையும் பெற்றோர் உணர வேண்டும்.

    கற்பதில் பொதுவாகக் காணப்படும் சில நோய்கள்


    Dyspraxia


    குழந்தைகளின் ஒருங்கிணைப்பற்ற செயல்கள், சப்தங்கள் பற்றிய பயம், மந்தமான மொழி வளர்ச்சி, போதுமான கவனமில்லாதிருப்பது, தூக்கத்தில் பிரச்னை ஆகியவைதான் Dyspraxia 

    Tiskalkuliya

    கணிதத்தை புரிந்து கொள்வதில் உள்ள பிரச்னை இது. வரிசைப்படுத்துவது, பெருக்குவது, வகுப்பது, சூத்திரங்களை புரிந்து கொள்வதில் பிரச்னைகள் இருந்தால் அது Tiskalkuliya நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.

    Tiskirapiya

    மனதில் நினைப்பதை எழுதுவதில் பிரச்னைகள் இருந்தாலோ கையெழுத்து மிகவும் மோசமானதாக இருந்தாலோ அது Tiskirapiya  நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.

    Dyslexia

    படிப்பது, எழுதுவது மற்றும் உச்சரிப்பில் பிரச்னை இருந்தால் அது  Dyslexia நோயின் அறிகுறியாக இருக்கலாம். தயக்கமான பேச்சு, வலது மற்றும் இடது அறிவதில் குழப்பம், வார்த்தைகளை உச்சரிப்பதில் குழப்பம், ரைம்ஸ் உரைப்பதில் சிரமம், குழப்பமான கையெழுத்து போன்றவை இதன் அறிகுறிகள்.

    இந்த அறிகுறிகள் எல்லாம் நோய்களல்ல... சரிசெய்யப்படக் கூடியவை தான் என்பதை அறிந்து செயல்பட்டால் குழந்தைகள் தங்களது எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைத்துக்கொள்ளலாம் என்பதை பெற்றோர் உணர வேண்டும்.

    நன்றி : பெயர்கூட புரியாத இந்த நோய்களுக்கு அருமையாக விளக்கங்கள் அளித்து உதவி புரிந்த மருத்துவ நண்பர் திரு.ஸ்டீபன் அவர்களுக்கு...

    நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் தங்களது வாக்குகளையும் கருத்துக்களையும் தயக்கமில்லாமல் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால தலைமுறைக்கு உதவட்டுமே...



    26 comments:

    1. பதிவை படித்து நிறைய விடயங்களை தெரிந்து கொண்டேன் சகோ

      இனையத்தை சரியான நோக்கத்திற்காக பயன்படுத்துபவர்களின் எனக்கு தெரிந்து நீங்களும் ஒருவர் இது சும்மா புகழ வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை மனநேகிழ்ந்து சொல்கிறேன் சகோ

      என் வலைப்பூவில் இதனை எழுதியிருக்கேன் பாருங்கள்.

      வலையுகத்தில் நாம் கைகோர்ப்பது சரியான நோக்கத்திற்காக இருக்கட்டும். இப்படி

      http://valaiyukam.blogspot.com/2011/10/blog-post.html

      இந்த லிங்கில் இப்படி எழுதியிருக்கேன் பாருங்கள்

      "No Politics Please.No big fundas, Wanna only cool things" (அரசியல் வேண்டாம், பெரிய சர்ச்சைகள், தத்துவங்கள் எல்லாம் வேண்டாம்,மச்சி..! ஜாலியாக பொழுது போக வேண்டும். அதற்கு வழி சொல்லு போதும்) என்கிற பதிவர்களைப் பற்றி நான் இங்கு பேசவில்லை இணையத்தில் நல்ல விஷயங்களை சமூகத்துக்கு கொடுக்க நினைக்கிற நண்பர்கள் யாரக இருந்தாலும் வாருங்கள். கைகோர்ப்போம் நல்ல விஷயங்களை சொல்வோம்.


      மீண்டும் நன்றி சகோ

      ReplyDelete
    2. பெற்றோர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே! மருத்துவர் ஸ்டீபன் அவர்களுக்கும் என் நன்றிகள்!

      ReplyDelete
    3. @ ஹைதர் அலி said... 1


      /இனையத்தை சரியான நோக்கத்திற்காக பயன்படுத்துபவர்களின் எனக்கு தெரிந்து நீங்களும் ஒருவர் இது சும்மா புகழ வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை மனநேகிழ்ந்து சொல்கிறேன் சகோ//

      வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி சகோ..

      வருங்கால தலைமுறைக்காக நம்பிக்கைகளையே விட்டுச்செல்வோம்.


      என் கால்களுக்கடியில் பூமி

      வேகமாய் ஓடிக் கொண்டிருக்க,

      சேர்ந்து ஓடத் தெரியாமல்

      விழுந்து எழுந்து மீண்டும்

      மீண்டும் விழுந்து கொண்டிருக்கையில்,

      எதையேனும் நிலைநிறுத்த

      கிடைக்கின்ற நேரங்களில்

      வாழ்வியலின் இறுக்கத்தை கிளறி

      இங்கு சேமித்து வைக்கின்றேன்

      உங்கள் ஞாபகங்களில் பதியும்

      நம்பிக்கைகளாய் விட்டுச்செல்ல...

      இந்த வரிகள்தான் எனது profile பக்கத்திலும் இருக்கும்.

      குறிப்பு :இந்த கவிதக்கான லின்க் இதோ

      http://www.tamilparents.com/2011/09/blog-post_29.html

      நன்றியுடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    4. @ Abdul Basith said... 2

      //பெற்றோர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே! மருத்துவர் ஸ்டீபன் அவர்களுக்கும் என் நன்றிகள்!//

      வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே

      ReplyDelete
    5. பல நோய்களை பற்றி கூறிய சம்பத் குமார் மற்றும் ஸ்டீபன் அவர்களுக்கு நன்றி இந்த குறைகளை பற்றி பெற்றோர் பயப்பட அவசியமில்லை சிறிய வயதில் குறையுள்ள குழந்தைகள் பின்காலத்தில் சிறந்து விளங்கிய உதாரணங்கள் நிறைய அதை பற்றி கூறியிருந்தால் நன்று என நினைக்கின்றேன்(உங்கள் கட்டுரைகள் சினிமா கிசுகிசு போன்று பயனற்றது அல்ல பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷம் அதனால் சில குறிப்புகளை தருகின்றேன் தவறாக நினைக்க வேண்டாம் நண்பரே)

      ReplyDelete
    6. பெற்றோர்களுக்கு பயனுள்ள தகவல்கள்

      ReplyDelete
    7. நிறைய விஷயங்களை தெரிந்துக்கொண்டேன் சகோ

      நன்றிகள் பல

      ReplyDelete
    8. //பெற்றோர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே! மருத்துவர் ஸ்டீபன் அவர்களுக்கும் என் நன்றிகள்!//

      ReplyDelete
    9. இவைகளை நோய்கள் என்று சொல்லுவதை விட குறைபாடுகள் என்று சொல்லலாமே என்பது என் எண்ணம்... நீரிழிவு நோயே குறைபாடுகள் என்று சொல்லப் படும் பொழுது இவைகளை நோய் என்று சொல்வது நெருடுகிறது...

      ReplyDelete
    10. இந்த பதிவுக்கு உண்மையிலேயே நன்றி. பெற்றோர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

      ReplyDelete
    11. அருமையான பதிவு.
      எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
      வாழ்த்துக்கள்.

      ReplyDelete
    12. கற்றலில் இத்தன விஷயங்கள் இருக்கா? தெரிஞ்சுக்கிட்டேன் நன்றி.

      நட்புடன்,
      http://tamilvaasi.blogspot.com/

      ReplyDelete
    13. மருத்துவர் ஸ்டீபன் அவர்களுக்கும் இந்த தகவலை எங்களுக்கு சேர்த்த உங்களுக்கும் நன்றிகள்!

      ReplyDelete
    14. நண்பர் ஹைதர் அலி சொன்னவற்றை ஆமோதிக்கிறேன்!

      ReplyDelete
    15. @ veedu said... 5

      //பல நோய்களை பற்றி கூறிய சம்பத் குமார் மற்றும் ஸ்டீபன் அவர்களுக்கு நன்றி இந்த குறைகளை பற்றி பெற்றோர் பயப்பட அவசியமில்லை சிறிய வயதில் குறையுள்ள குழந்தைகள் பின்காலத்தில் சிறந்து விளங்கிய உதாரணங்கள் நிறைய அதை பற்றி கூறியிருந்தால் நன்று என நினைக்கின்றேன்

      (உங்கள் கட்டுரைகள் சினிமா கிசுகிசு போன்று பயனற்றது அல்ல பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷம் அதனால் சில குறிப்புகளை தருகின்றேன் தவறாக நினைக்க வேண்டாம் நண்பரே)//

      வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே...

      இந்த குறிப்புகளை நீங்கள் தயக்கமின்றி தாராளாமாக கூறலாம்

      பதிவின் நீளம் கருதி மற்றொரு பதிவாக இடுகையிடலாம் என்று எண்ணியுள்ளேன் நண்பரே..

      ReplyDelete
    16. @ K.s.s.Rajh said... 6

      //பெற்றோர்களுக்கு பயனுள்ள தகவல்கள்//

      வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே

      நன்றியுடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    17. @ ஆமினா said... 7

      //நிறைய விஷயங்களை தெரிந்துக்கொண்டேன் சகோ//

      மிக்க நன்றிகள் சகோ

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    18. @ Lakshmi said... 8

      //பெற்றோர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே! மருத்துவர்
      ஸ்டீபன் அவர்களுக்கும் என் நன்றிகள்!//

      வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி லட்சுமி அம்மா அவர்களே..

      ReplyDelete
    19. @ suryajeeva said... 9

      //இவைகளை நோய்கள் என்று சொல்லுவதை விட குறைபாடுகள் என்று சொல்லலாமே என்பது என் எண்ணம்... நீரிழிவு நோயே குறைபாடுகள் என்று சொல்லப் படும் பொழுது இவைகளை நோய் என்று சொல்வது நெருடுகிறது...//

      உங்கள் உள்ளத்தின் கோணத்தை பற்றி நான் முன்னரே அறிந்துகொள்ள முடியாததிற்க்கு மிகவும் வருந்துகின்றேன் நண்பரே..

      ஆழமான கருத்திற்க்கு மிக்க நன்றி நண்பரே

      ReplyDelete
    20. @ naren said... 10

      //இந்த பதிவுக்கு உண்மையிலேயே நன்றி. பெற்றோர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.//

      வாருங்கள் திரு.நரேன் அவர்களே..மிக்க நன்றியும் உரித்தாகுக..

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    21. @ Rathnavel said... 11

      //அருமையான பதிவு.
      எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
      வாழ்த்துக்கள்.//

      தொடர்ந்து ஆதரவளித்து வரும் தங்களுக்கு என் பணிவார்ந்த வணக்கங்கள் ஐயா

      ReplyDelete
    22. @ தமிழ்வாசி - Prakash said... 12

      கற்றலில் இத்தன விஷயங்கள் இருக்கா? தெரிஞ்சுக்கிட்டேன் நன்றி.

      வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி திரு.பிரகாஷ் அவர்களே

      ReplyDelete
    23. @ கோகுல் said... 13

      //மருத்துவர் ஸ்டீபன் அவர்களுக்கும் இந்த தகவலை எங்களுக்கு சேர்த்த உங்களுக்கும் நன்றிகள்!//

      வாருங்கள் திரு.கோகுல் அவர்களே.தங்கள் வரவு நல்வரவாகுக

      ReplyDelete
    24. வாழ்த்துக்கள். உண்மையிலேயே இளம்பெற்றோர்கள் தாத்தாமார் பாட்டிமார் அனைவரும் படிக்கவேண்டிய பதிவு. Pl. keep on writting

      ReplyDelete
    25. @ அம்பலத்தார் said... 24

      //வாழ்த்துக்கள். உண்மையிலேயே இளம்பெற்றோர்கள் தாத்தாமார் பாட்டிமார் அனைவரும் படிக்கவேண்டிய பதிவு. Pl. keep on writting//

      மிக்க நன்றி நண்பரே..தங்களின் ஆதரவோடு பயணங்கள் தொடரும்..

      நன்றியுடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    26. உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும் :-)

      http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_29.html

      ReplyDelete

    பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.