• Breaking News

    October 7, 2011

    நீர்த்துளியின் கண்ணீர்




    சூரியக் கதிரின்
    சூடுபட்டு
    மரணமானது
    எனது ஜனனம் !

    என்னோடு
    துளிர்த்தவர்கள்
    நதியாய்
    அருவியாய்
    கடலாய்….!


    எனக்கும்
    தாய்
    மேகம்தானே !
    நானோ
    தரை வருமுன்
    தடுக்கப்பட்ட
    வெப்ப அடிமை !

    தாகம் தீர்க்கப்
    பயணப்பட்ட
    எனது வாழ்வு
    வழியிலேயே
    சுவாசம் இழந்தது.

    மேகத்தாயிடம்
    கண்ணீர் வடித்தேன்
    இன்னொரு வாழ்க்கை
    வேண்டும் என்று !

    மனிதன்
    குடிக்கும்
    மருந்தாகும் வரை
    எனக்கும் ஏது
    இன்னொரு சொர்க்கம்?

    விக்கல் தீர்க்க
    வந்த என்னை-
    விற்றுப் பிழைத்தல்
    வேதனை அன்றோ...?.

    என்ன செய்வது ?
    கண்ணீர்விடவும் இங்கு
    தண்ணீர்தான் தேவை !

    கவனமாயிருங்கள்...
    போகிற போக்கில்
    ”ஈரம்”
    இதயங்களில் கூட
    வற்றிப்போகலாம் !

    நண்பர்களே மேலே வரைந்த “நீர்த்துளியின் கண்ணீர் கவிதை” தங்களுக்கு பிடித்திருந்தால் தயங்காமல் தங்கள் எண்ணங்களை கருத்துக்களாய் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்


    19 comments:

    1. தண்ணீரை என்றைக்கு பாட்டிலிலும்,பாக்கட்டுகளிலும்
      அடைபட்டதோ அன்றைக்கே
      இதயங்களில் ஈரம வற்றி விட்டது!

      ReplyDelete
    2. நண்பரே உங்களுக்கும் தமிழ்மனம் வேலை செய்யவில்லையா

      ReplyDelete
    3. @ கோகுல்
      //தண்ணீரை என்றைக்கு பாட்டிலிலும்,பாக்கட்டுகளிலும்
      அடைபட்டதோ அன்றைக்கே
      இதயங்களில் ஈரம வற்றி விட்டது!//

      முதல் வருகைக்கும் முத்தான கருத்திர்த்திற்க்கும் மிக்க் அநன்றி திரு.கோகுல் அவர்களே..

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    4. @ வைரை சதிஷ்

      //சூப்பர் கவிதை//

      மிக்க நன்றி நண்பரே..

      \\நண்பரே உங்களுக்கும் தமிழ்மனம் வேலை செய்யவில்லையா\\

      ஆம் நண்பரே..தமிழ்மனத்தின் admin க்கு மெயில் அனுப்பியுள்ளேன்.பொறுத்திருந்து பார்ப்போம்

      ReplyDelete
    5. இனிமேல் தண்ணீர்பாட்டிலைப்பார்க்கும் போதெல்லாம் இந்தக்கவிதை தான் நினைவில் வரும்.

      ReplyDelete
    6. @ Lakshmi

      தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி

      பாசத்துடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    7. @ திகழ்

      //உண்மை தான்//

      தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி

      நன்றியுடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    8. அந்த நீர்த்துளியின் கண்ணீரின் ஈரம்
      படிக்கையிலே தெரிகிறது..

      ReplyDelete
    9. அருமைக் கவிதை அளித்தீரே-இங்கே
      அன்பரே படித்து களித்தேனே
      ஆதவன் வரவால் நீர்த்துளியே-ஆவி
      ஆவதை கவிதையில் வார்த்தீரே
      நன்று கவிதை நவின்ற விதம்-நீர்
      நாளும் தருவீர் ஒன்றுவிதம்
      இன்றே கண்டேன் சம்பத்தே-நம்
      இனிய தமிழுக்கு நல்சொத்தே

      புலவர் சா இராமாநுசம்

      ReplyDelete
    10. நல்ல கருவை கொண்ட நிதர்சன கவிதை,ஆக்கத்துக்கு நன்றி.

      ReplyDelete
    11. @ jayaram thinagarapandian


      //அந்த நீர்த்துளியின் கண்ணீரின் ஈரம்
      படிக்கையிலே தெரிகிறது..//

      வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..

      ReplyDelete
    12. @ புலவர் சா இராமாநுசம்

      //அருமைக் கவிதை அளித்தீரே-இங்கே
      அன்பரே படித்து களித்தேனே
      ஆதவன் வரவால் நீர்த்துளியே-ஆவி
      ஆவதை கவிதையில் வார்த்தீரே
      நன்று கவிதை நவின்ற விதம்-நீர்
      நாளும் தருவீர் ஒன்றுவிதம்
      இன்றே கண்டேன் சம்பத்தே-நம்
      இனிய தமிழுக்கு நல்சொத்தே//

      தங்களிடமிருந்து கவிதைவிருது பெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன் புலவர் ஐயா அவர்களே

      ReplyDelete
    13. @ ரா.செழியன்.

      //நல்ல கருவை கொண்ட நிதர்சன கவிதை,ஆக்கத்துக்கு நன்றி.//

      மிக்க நன்றி திரு.செழியன் அவர்களே..

      ReplyDelete
    14. அருமையான கவிதை.
      வாழ்த்துக்கள்.
      http://rathnavel-natarajan.blogspot.com/

      ReplyDelete
    15. @ Rathnavel

      //அருமையான கவிதை.
      வாழ்த்துக்கள். //

      தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி ஐயா

      நன்றியுடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    16. @ உங்கள் நண்பன்

      //நல்ல கவிதை//

      மிக்க நன்றி நண்பரே..

      நன்றியுடன்
      சம்பத்குமார்

      ReplyDelete

    பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.