• Breaking News

    October 2, 2011

    வெளுக்கும் பூக்கள்


    ஊராரின் அழுக்குகளை
    வெளுக்கும் கறுப்பு மலர்களே !
    நீங்கள் இன்னும்
    இறந்தவர்களுக்கு
    வரவேற்ப்புப் பாதைகளையே
    போட்டுக்கொண்டிருக்கிறீர்கள்

    ஆனால்
    உங்களுக்குத்தான்
    யாரும் வரவேற்பு
    வாசிப்பதில்லை…

    உங்களின் வியர்வைகள்
    அவசரச் சடங்குகளில்
    அர்ச்சிக்கப்படுவது போல்
    அனுஷ்டித்து
    அவமானப்படுத்தப்படுகின்றன…

    எல்லா சடலங்களும்
    உங்களால் மதிக்கப்படும் போது
    நீங்கள்தான்
    அவர்களால்….
    மிதிக்கப்படுகிறீர்கள் !

    இவர்கள்
    காதலியின் கண்ணீருக்குக்
    கல்லணை கட்டுவார்களே ஒழிய
    கருகும் வயல்களுக்கு
    யோசனைகூடச்
    சொல்லமாட்டார்கள்.

    இவர்களின்
    புற அழுக்குகளைப் போக்குகிற
    புண்ணிய நதிகளே
    அக அழுக்கினை
    அகற்றவும்
    நீங்கள்தான் தயாராக வேண்டும் !

    ஏரிக்கரை கற்களாய்
    அவர்களின் மனங்கள்
    இருகிக் கிடக்கின்றன…
    நீங்கள் மாலையில்
    சேகரிக்கும்
    மீதமான உணவுகள்
    உங்களுக்கான நன்கொடையல்ல…

    உங்கள் வியர்வையின்
    உழைப்பை ஏமாற்ற
    போடுகின்ற சில்லறைக்காசுகள் !

    நீங்கள்தான் இன்னமும்
    அவர்களுக்கு
    வரவேற்பு பாதைகளையே
    போட்டுக் கொண்டிருக்காதீர்கள்..
    நீங்களும் வரவேற்புரையாகுங்கள் !

    நம் தேசப்பிதா
    ஆசையும் அதுவே..

    நண்பர்களே பதிவு படித்திருந்தால் மற்க்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்


    20 comments:

    1. அருமையான கவிதை.
      வேதனையாக இருக்கிறது.
      நன்றி.

      ReplyDelete
    2. வரவேற்பு பாதைகளையே
      போட்டுக் கொண்டிருக்காதீர்கள்..
      நீங்களும் வரவேற்புரையாகுங்கள்

      ஆழ்ந்த அற்புதமான கருத்துக்கள்.. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்!

      ReplyDelete
    3. அருமையான கவிதை

      ஆனால் வேதனையை தருகிறது

      கருத்துகளை சுருக்க விரிக்க
      http://vairaisathish.blogspot.com/2011/10/blog-post.html

      ReplyDelete
    4. ஒரு சமூகத்தின் ஊக்குவிப்பு...
      விடியட்டும் அவர்களுக்கு....

      ReplyDelete
    5. கணம் நிறைந்த கவிதை... பாரமாகியது நெஞ்சம்...

      ReplyDelete
    6. இறந்தவர்களுக்கு வரவேற்ப்பு பாதை
      போடுபவர்கள் இருப்பவர்களை வரேவேற்ப்பதில்லை
      சுடும் வரிகள்

      ReplyDelete
    7. எல்லா சடலங்களும்
      உங்களால் மதிக்கப்படும் போது
      நீங்கள்தான்
      அவர்களால்….
      மிதிக்கப்படுகிறீர்கள் !


      நல்ல கவிதை

      ReplyDelete
    8. @ Rathnavel

      //அருமையான கவிதை.//

      முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

      நன்றியுடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    9. @ இராஜராஜேஸ்வரி
      //ஆழ்ந்த அற்புதமான கருத்துக்கள்.. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்!//

      வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே..

      ReplyDelete
    10. @ வைரை சதிஷ்

      // அருமையான கவிதை //

      மிக்க நன்றி திரு.சதிஷ் அவர்களே..

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    11. கவிதை வீதி... // சௌந்தர்

      //ஒரு சமூகத்தின் ஊக்குவிப்பு...
      விடியட்டும் அவர்களுக்கு....//

      மிக்க நன்றி நண்பரே

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    12. @ suryajeeva

      //கணம் நிறைந்த கவிதை... பாரமாகியது நெஞ்சம்...//

      வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி திரு.சூர்யஜீவா அவர்களே

      ReplyDelete
    13. கோகுல் said... 6

      //இறந்தவர்களுக்கு வரவேற்ப்பு பாதை
      போடுபவர்கள் இருப்பவர்களை வரேவேற்ப்பதில்லை
      சுடும் வரிகள்//

      ஆழமான கருத்திற்க்கு மிக்க நன்றி திரு கோகுல் அவர்களே

      ReplyDelete
    14. @ veedu

      //உண்மை.....//

      மிக்க நன்றி நண்பரே..

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    15. @ Lakshmi

      அம்மாவின் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றிகள்

      பாசத்துடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    16. சிந்திக்க வைக்கும் கவிதை நண்பா ...வேதனையை தருகிறது

      ReplyDelete
    17. @ ரெவெரி

      //சிந்திக்க வைக்கும் கவிதை நண்பா //

      வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    18. உங்கள் வியர்வையின்
      உழைப்பை ஏமாற்ற
      போடுகின்ற சில்லறைக்காசுகள்...

      அருமை

      ReplyDelete
    19. @ jayaram thinagarapandian

      //உங்கள் வியர்வையின்
      உழைப்பை ஏமாற்ற
      போடுகின்ற சில்லறைக்காசுகள்...

      அருமை //

      வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete

    பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.