• Breaking News

    September 10, 2011

    அடிமை..


    மங்காத தோல்விகளே…
    உங்களுக்கு ஒரு சவால்
    என் மனதை
    வென்று
    சோர்வடையச் செய்யுங்கள்
    பார்க்கலாம் ?

    சோதிக்கும் வேதனைகளே…
    விதிகளின்றி
    உங்களுக்கு ஒரு போட்டி.
    எதையாவது செய்து
    சிதையுங்கள்
    அனலாக இருக்கும் என்
    மனவலிமையை !

    முரட்டுப் பெருமைகளே..
    விரட்டி வந்தாலும் என்னை
    முற்றுகையிட்டுச் சிறைப்பிடித்து
    விற்கமுடியாது உங்களால் !

    போதையான மகிழ்ச்சிகளே…
    பாதை மாறி வந்து
    உங்கள் மாய வலையில் சிக்கி
    தங்கிவிடுவேன் என்று
    கனவுகளில்
    மனக்கோட்டை கட்டவேண்டாம் !


    விலையற்ற பணிவே… 
    தலை வணங்குகிறேன் !
    நான்...
    உன்னை ஏற்கனவே
    போற்றி வழிபட்டு
    ஏற்றுக்கொண்ட அடிமை !

    நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களித்துவிட்டுச் செல்லுங்கள்




    17 comments:

    1. முரட்டுப் பெருமைகளே..

      விரட்டி வந்தாலும் என்னை
      முற்றுகையிட்டுச் சிறைப்பிடித்து
      விற்கமுடியாது உங்களால் !

      அருமையான அறிவுரை கவிதை

      ReplyDelete
    2. @ கவி அழகன்

      முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

      தங்கள் வரவு நல்வரவாகட்டும்

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    3. மிக அழகாக உள்ளது வரிகள்!! வாழ்த்துக்கள்!

      ReplyDelete
    4. @ ஷீ-நிசி

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே..

      மீண்டும் வருக..

      தற்போதுதான் தங்கள் தளம் வந்தேன்..

      என்ன ஒரு பெருந்தன்மை.கருத்துரைக்கு ஒரு பதிவே பகிர்ந்த்து புரட்சிக்காரன் அவர்களை அரவணைத்த விதம் அருமை.

      தொடரட்டும் நம் நட்பு

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    5. @ என் நடை பாதையில்(ராம்)

      வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..

      மீண்டும் வருக

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    6. நல்ல கருப்பொருள், கருத்தை சொன்ன மனவளக்கவிதை பகிர்வுக்கு வாழ்த்துக்கள் சகோ.

      ReplyDelete
    7. @ R.Elan

      மிக்க நன்றி சகோதரரே..

      தங்கள் ஆதரவோடு பயணம் தொடரும்

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    8. @ Rathnavel

      வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..

      மீண்டும் வருக

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    9. அன்பு வணக்கங்கள் சம்பத்குமார்...
      உங்கள் தளம் வந்து பார்த்தேன்...

      அத்தனை அருமையாக இருக்கிறதுப்பா..

      எழுந்து நின்னு சல்யூட் சொல்லவைத்த வரிகள் சம்பத்குமார் உங்க கவிதை வரிகள்....

      இதோ இதுபோதுமே...

      ஒரு மனிதன்
      வெற்றியை தொட...

      பணிவுடன் இருந்து இமயத்தைத்தொட....

      புகழ் போதையில் மயங்கிவிடாது
      தன்னை நிலைநிறுத்திக்கொள்ள...

      தீயப்பழக்கங்களில் தன்னை உட்புகாமல் காத்துக்கொள்ள....

      தோல்விகள் சுருட்டி
      மூலையில் உட்காரவிடாமல் தடுத்துவிட

      வேதனைகள் நம்மை உருமாற்றி
      தற்கொலை நாடாது தப்பித்துக்கொள்ள...

      உங்க வரிகள் அத்தனையும் நிமிஷத்தில் எழ வைத்துவிடும் எப்படியாப்பட்ட சோர்வையும் விரட்டிவிடும்...

      நல்லதை சொல்லி சென்ற வரிகள்..
      நம்பிக்கையை ஊன்றி சென்ற வரிகள்....
      முயற்சியை விட்றாதீங்கன்னு மிரட்டும் வரிகள்....
      கம்பீரத்துடன் வெற்றியை தொடும்போதும்...
      பணிவை மறக்கவேண்டாம்னு அறிவுறுத்தும் வரிகள்....

      இன்றைய காலையே புத்துணர்வோடு விடிந்ததற்கு இந்த வரிகள் சாட்சி என்பது போல அத்தனை அருமையாக இருக்கிறதுப்பா...

      ரசித்து மீண்டும் படித்து...
      அட என்று மீண்டும் படித்து...
      மீண்டும் படிக்க வைத்துவிட்டீர்கள்....

      இப்படியே விடியட்டுமே இனி ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன்......

      மனம் நிறைந்த வாழ்த்துக்களுடனான அன்பு நன்றிகள் சம்பத்குமார் அழகிய உற்சாகமூட்டும் ஊக்கம் தரும் கவிதை வரைகள் படைத்தமைக்கு....

      ReplyDelete
    10. எனக்கு வாக்களிக்க தெரியலைப்பா.. ஆனால் உங்க இந்த கவிதை எந்த கவிதை போட்டியிலும் கலந்துக்கொண்டால் கண்டிப்பாக முதலிடம் பெறும் தகுதி இருக்கிறது... நூற்றுக்கு நூறுப்பா...ஹாட்ஸ் ஆஃப்..

      ReplyDelete
    11. @மஞ்சுபாஷிணி
      //நல்லதை சொல்லி சென்ற வரிகள்..
      நம்பிக்கையை ஊன்றி சென்ற வரிகள்....
      முயற்சியை விட்றாதீங்கன்னு மிரட்டும் வரிகள்....
      கம்பீரத்துடன் வெற்றியை தொடும்போதும்...
      பணிவை மறக்கவேண்டாம்னு அறிவுறுத்தும் வரிகள்....//


      வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி தோழியே..

      தங்களின் தொடர் வருகைதான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருது..

      நட்பு தொடரட்டும்

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    12. @ suryajeeva

      தொடர்ந்து ஆதரவளிக்கும் நண்பர் சூர்யஜீவா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

      மீண்டும் வருக...

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    13. மிக நல்ல கருத்துடைய கவிதை சகோதரரே. பெருடையைப் பற்றிய இருதி வரி மனதில் வருகிறது. அனைத்தும் அருமை. வாழ்த்துகள்.
      வேதா. இலங்காதிலகம்.
      http://www.kovaikkavi.wordpress.com

      ReplyDelete
    14. @ vetha

      மிக்க நன்றி சகோ.தங்களின் வருகை நல்வரவாகுக

      நன்றியுடன்
      சம்பத்குமார்

      ReplyDelete

    பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.