• Breaking News

    September 28, 2011

    பசுமை நினைவுகள்


    முதன் முதலில்
    தஞ்சைப் பெரிய கோயிலில்
    கண்களால் தரிசித்ததும்….


    கடிதங்களால் சுவாசம் செய்ததும்….
    கடற்கரையில் கைகோத்து
    உலக நடப்பை அலசியதும்….
    தொலைபேசியில்
    பேசிப் பேசியே
    காலத்தை தொலைத்ததும்..

    நண்பர்களின் உதவியால்
    பதிவு திருமணம் நடந்ததும்……
    அடுத்த நாளே ஊட்டியில்
    ஹனிமூன் கொண்டாடி
    மகிழ்ந்ததும்…..


    ஆஸ்திக்காக
    ஒரு ஆண் பிள்ளையும்
    ஆசைக்காக ஓர் பெண் பிள்ளையை
    பெற்றுக் கொண்டதும்…..
    இன்னபிற விஷயங்களும்
    நன்றாய்
    பசுமையாய் நினைவில் நிற்கின்றன...

    அத்தனையும் எங்கள்
    விவகாரத்து சான்றிதழை
    கையிலெடுத்துப் பார்க்கும்
    அந்தவொரு நொடிவரை…


    நண்பர்களே !
    வேண்டாமிந்த
    விலக்கி வைக்கும்
    விவாகரத்துகள்..!


    உறவுகளே ! கவிதை பிடித்திருந்தால் தங்கள் கருத்துக்களையும்,வாக்குக்களையும் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


    23 comments:

    1. வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_28.html - உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். முடிந்த போது பார்க்கவும்.

      ReplyDelete
    2. அழகான ஒரு சோலையில் நடந்து செல்லும்போது..திடீரென்று ஒரு பள்ளம் வருகின்றமாதிரி
      "அத்தனையும் எங்கள்
      விவகாரத்து சான்றிதழை
      கையிலெடுத்துப் பார்க்கும்
      அந்தவொரு நொடிவரை…

      இந்த வரிகள்

      ReplyDelete
    3. கவிதை கற்பனை ஆனால்...
      அருமை! நண்ப!

      புலவர் சா இராமாநுசம்

      ReplyDelete
    4. மிக அருமை சம்பத்..! தொடருங்கள்..!!

      ReplyDelete
    5. Vetha.ElangathilakamSep 28, 2011, 10:30:00 AM

      விவாகரத்து வேண்டாம் தான் அதன் காரணங்கள் ஆராயப்பட வேண்டியதல்லவா?...
      வேதா. இலங்காதிலகம்.
      http://www.kovaikkavi.wordpress.com

      ReplyDelete
    6. ஒத்து வராத மனங்களுக்கு மட்டுமே விவாகரத்து, காதல் கொண்ட மனதுக்கு விவாகரத்து வெறும் காகிதத்தில் மட்டுமே..

      ReplyDelete
    7. அருமையான கவிதை

      ReplyDelete
    8. கவிதை சூப்பர் நண்பரே....

      ReplyDelete
    9. @ middleclassmadhavi

      அங்கீகாரம் அளித்ததிற்க்கு மிக்க நன்றி. திரு.middleclassmadhavi அவர்களே..

      நட்புடன்
      சம்பத்குமார்
      அடுத்த பதிவில் உங்களுக்காகவே..

      ReplyDelete
    10. @ veedu

      //அழகான ஒரு சோலையில் நடந்து செல்லும்போது..திடீரென்று ஒரு பள்ளம் வருகின்றமாதிரி //

      தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..

      மீண்டும் வருக

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    11. @ புலவர் சா இராமாநுசம்

      அன்பான கருத்திற்க்கு மிக்க நன்றி ஐயா

      ReplyDelete
    12. தங்கம்பழனி said...

      //மிக அருமை சம்பத்..! தொடருங்கள்..!!//

      தங்களது ஆதரவோடுதான் எனது பயணங்கள்

      ReplyDelete
    13. Vetha.Elangathilakam

      //விவாகரத்து வேண்டாம் தான் அதன் காரணங்கள் ஆராயப்பட வேண்டியதல்லவா?...//

      தங்களின் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி

      காரணங்களை விட குழந்தைகளின் எதிர்காலம் முக்கியம்தானே...

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    14. @suryajeeva said...

      //ஒத்து வராத மனங்களுக்கு மட்டுமே விவாகரத்து, காதல் கொண்ட மனதுக்கு விவாகரத்து வெறும் காகிதத்தில் மட்டுமே..//

      உண்மைதான் நண்பரே..

      ReplyDelete
    15. @ கவி அழகன்

      தங்களின் கருத்திற்க்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பரே..

      ReplyDelete
    16. @ ராஜா MVS said... 9

      //கவிதை சூப்பர் நண்பரே....//

      மிக்க நன்றி திரு ராஜா அவர்களே..

      ReplyDelete
    17. நல்ல கவிதை.
      வாழ்த்துக்கள்.

      ReplyDelete
    18. Rathnavel said...

      //நல்ல கவிதை.
      வாழ்த்துக்கள்.//

      தங்கள் வருகை நல்வரவாகுக ஐயா

      நன்றியுடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    19. அருமையான கவிதை வரிகள் வாழ்த்துக்கள்
      சகோ உங்கள் எண்ணமும் நன்முறையாய்
      நிறைவேறினால் மிக்க நன்றே .............

      ReplyDelete
    20. அம்பாளடியாள்

      வருகைக்கும் வழ்த்திற்க்கும் மிக்க நன்றி சகோ

      நன்றியுடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    21. விவாகரத்து வரிகள்....சாரி ...கடைசி வரிகள்... முத்தாய்ப்பு

      ReplyDelete
    22. @ ரெவெரி

      //விவாகரத்து வரிகள்....சாரி ...கடைசி வரிகள்... முத்தாய்ப்பு//

      மிக்க நன்றி நண்பரே..

      கவிதை கற்பனைதான் எனினும் விவாகரத்தே வேண்டாம் என்பது என் எண்ணம் நண்பரே

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete

    பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.