• Breaking News

    September 27, 2011

    தேர்வெழுதும் குழந்தைகளின் பயம் நீங்க..


    வணக்கம் நண்பர்களே ! மற்றுமொரு குழந்தைகளுக்கான பதிவில் உங்களைத் தேடி வருவதில் மிக்க மகிழ்ச்சி.இன்றைய பதிவில் படிக்கும் குழந்தைகளுக்கு வரும் தேர்வுபயம் பற்றி அலசுவோம். தேர்வுகள் நெருங்கிவிட்டால் மாணவர்களுக்கு தேர்வு பயம்தான் வருகிறது ஆனால் பெற்றோர்களுக்கோ தேர்வு ஜூரமே வந்து விடுகிறது. இப்படி தானும் பயந்து குழந்தை களையும் பயமுறுத்தும் பெற்றோர்களுக்கான தீர்வுகள்தான் என்ன ?.பயம் என்பது சிறு வயதில் பழகிவிட்டால் நாளை அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அது எதிரொலிக்கும். எனவே இப்போதே அதைத்தடுத்துவிட்டால் நாளை அவர்கள் வெற்றியை மட்டுமே சுவைக்க நாம் செய்த உதவியாக இருக்கும்.

    கொஞ்சமாவது பயம்வேண்டாம் என்று சொல்லி சொல்லி நாம்தான் குழந்தைகளிடம் பயத்தை வளர்த்துவிடுகிறோம். பயம் இல்லை என்றால் கட்டுப்பட மாட்டான் என்று நினைத்து சின்னச்சின்ன விஷயத்திற்கும் நாம் நம் குழந்தைகளை பயமுறுத்தியே வைத்திருக்கிறோம்.குழந்தையாக இருக்கும்போது சாப்பிட வில்லை என்று பூச்சாண்டியை கூப்பிட்டோம். தூங்கவில்லை என்று ஒத்தக்கண்ணணை அழைத்தோம். நாம் அழைத்த போது அவர்களிடம் வந்தவர்கள் எப்போதும் குழந்தைகளின்  மனதை விட்டு செல்லவே மாட்டார்கள்

    தேர்வு பயம் என்பதுகூட பெற்றோர்கள் மீதான பயம்தான். மார்க் குறைந்தால் வீட்டில் தொலைத்து விடுவார்கள் என்பதுதான் பயத்திற்கான பிரதான காரணமே. என்ன மார்க் வாங்கினால் என்னநான் ஒன்றும் சொல்ல மாட்டேன் என்று பெற்றோர்கள் சொல்லி விட்டால் போதும் அந்த நிமிடமே தேர்வு பற்றிய பயமே போய்விடும்.நாமும் பயந்து நம் குழந்தைகளையும் பயமுறுத்துவதை விட்டுவிட்டு நாமும் தைரியமாக இருந்து நம் குழந்தைகளையும் வாழ்க்கையை எதிர் கொள்ள தைரியப்படுத்துவோம்.குட்டிக்கதை ஒன்று..

    அவர் ஒரு இளந்துறவி. சக துறவிகளுடன் ஆற்றில் குளித்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அவர் அழகில் மயங்கிய இளம் பெண் ஒருத்தி அவர் காலில் விழுந்து தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டாள்.அவர் உண்மையான துறவி என்பதால் அவளை பொருட் படுத்தாமல் சென்றுவிட்டார். மறுநாள் அவர் வரும் போது மறுபடியும் அந்தப்பெண் காலில் விழுந்து தன்னை மணந்துகொள்ளுமாறு கெஞ்சினாள். துறவி எதுவும் பேசாமல் சென்று விட்டார். ஆனாலும் அந்தப்பெண் விடுவதாயில்லை.தினமும் துறவி வருகிறபோது அவர் காலில் விழுந்து கேட்க ஆரம்பித்தாள். விஷயம் ஊர் முழுவதும் பரவி இதைப்பார்க்க கூட்டம் கூட ஆரம்பித்து விட்டது. செய்தி குருவை எட்டியது. இளம் துறவியை அழைத்து நாளை அந்தப்பெண் உன்னை அழைத்தால் அவளுடன் சென்றுவிடு என்றார். குருவுக்கு சம்மதம் சொன்னார் இளம் துறவி. சொன்னபடியே மறுநாள் அந்தப் பெண் காலில் விழுந்தபோது எதுவும் பேசாமல் அந்தப் பெண்ணோடு அவள் இல்லம் சென்றுவிட்டார்.

    ஒரு வாரம் இரண்டு வாரம் ஆயிற்று. இளம் துறவி ஆசிரமம் திரும்பவில்லை. ஊர் முழுக்க பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தபோது துறவி நாளை ஆசிரமம் திரும்புகிறார் என்ற செய்தி எட்டியது.துறவறத்திலிருந்தபோது இருந்த அந்த இறை அழகு, இப்போது இல்லறத்திலிருக்கும் துறவியிடம் இருக்குமா? என்று பார்க்க, மறுநாள் ஊரே ஆசிரமத்தில் திரண்டிருந்தது. துறவி வந்தார். எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், துறவி தன்னுடன் ஒரு பெண் துறவியையும் அழைத்து வந்திருந்தார்.

    ஆசிரமகுருவோ புன்னகைத்தார். இது எனக்கு முன்னரே தெரியும் என்பதுபோல.எல்லோரும் எதிர்பார்த்ததுபோல துறவி இல்லறத்திற்கு மாறவில்லை. அந்த பெண்ணை துறவுக்கு மாற்றிவிட்டார், அதுவும் அவள் போக்கிலேயே சென்று அவளையும் மாற்றிவிட்டார்

    நாம் கொண்ட நம்பிக்கையில் உறுதியாக இருந்தால் நம் நிலையிலிருந்து மாறமாட்டோம். நம் குழந்தைகளின்மீது நமக்கு நம்பிக்கை இல்லை அதனால்தான் நாம் பதட்டமடைகிறோம்.குழந்தைகளிடமும் அந்த பதட்டத்தை விதைக்கிறோம்.நமக்கு நம்பிக்கை இருந்திருந்தால் நம் குழந்தைகளிடமும் அதையே விதைத்திருப்போம்.வருங்கால குழந்தைகளிடம் நம்பிக்கைகளை விதைப்போம்.நடக்கும் ஒவ்வொரு தேர்வுகளையும் பயமின்றி எதிர்கொள்ளச் செய்வோம்.


    டிஸ்கி
    நண்பர்களே ! கதையில் வரும் ஆசிரமம் நித்தி........தா ஆசிரமமோ அல்லது பிரே..............தா ஆசிரமமோ அல்ல


    பதிவு படித்திருந்தால் தங்கள் கருத்துக்களை தயங்காமல் வழங்கிவிட்டுச் செல்லுங்கள்

    13 comments:

    1. நல்ல பகிர்வு நண்பரே...

      ReplyDelete
    2. suryajeeva

      //correct// & //நச்//

      மிக்க நன்றி நண்பரே..

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    3. தமிழ்வாசி - Prakash

      வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    4. பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும்!

      ReplyDelete
    5. தமிழ்மணம் தகராறு இன்னும் தீரவில்லையா?உங்களுக்கு .உடான்ஸ் இணைத்துக்கொள்ளுங்கள்.வேகமாக பிரபலமாகி வருகிறது.http://udanz.com

      ReplyDelete
    6. @ கோகுல்

      //பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும்!//

      வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    7. //உடான்ஸ் இணைத்துக்கொள்ளுங்கள்.வேகமாக பிரபலமாகி வருகிறது.http://udanz.com//

      தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே..

      தற்போதே இணைந்து விடுகிறேன்
      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    8. நீங்கள் டிஸ்கி யில் (நித்தி........தா ஆசிரமமோ அல்லது பிரே..............தா ) தைரியமாக பெயரை சொல்லலாம் இவர்கள் துறவிகள் அல்ல

      ReplyDelete
    9. ”பதறாத காரியம் சிதறாது” என்ற செலவடை உண்டு. பதறினால் நம் கனவுகள் மட்டுமல்ல குழந்தைகளின் எதிர்காலமும் சிதறும். அருமையாகக் கூறியுள்ளீர்கள்.

      ReplyDelete
    10. veedu

      //நீங்கள் டிஸ்கி யில் (நித்தி........தா ஆசிரமமோ அல்லது பிரே..............தா ) தைரியமாக பெயரை சொல்லலாம் இவர்கள் துறவிகள் அல்ல//

      வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    11. வேங்கட ஸ்ரீனிவாசன் said...

      //”பதறாத காரியம் சிதறாது” என்ற செலவடை உண்டு. பதறினால் நம் கனவுகள் மட்டுமல்ல குழந்தைகளின் எதிர்காலமும் சிதறும். அருமையாகக் கூறியுள்ளீர்கள்.//

      வாருங்கள் திரு ஸ்ரீனிவாசன் அவர்களே தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி

      மீண்டும் வருக

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete

    பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.