• Breaking News

    September 21, 2011

    முத்தத்தின் முகவரி


    பிஞ்சு விரல்களால்
    உதட்டைத் தொட்டு
    முத்தம் யாசிக்கும்
    குழந்தைகளைக் கண்டால்
    கொள்ளைப் பிரியம்
    எனக்கு…!

    என் தாய் கொடுக்கத்
    தவறிய முத்தங்களையும்…!
    என் மனைவியிடம்
    அரைமனதுடன் பெற்ற
    அந்தரங்க முத்தங்களையும்…!

    நண்பர்களுக்கு
    தரமுடியாமல்
    தள்ளி நிற்கிற போலிபண்பினால்
    சிதைந்த முத்தங்களையும்…!

    தவறிப்போன முத்தங்களை
    தருவதற்க்கும்

    பெறுவதற்க்கும்
    தடையற்றது குழந்தையின்
    அன்பு முத்தம்...!


    என் தோளில் ஒட்டி
    டாட்டா காட்டும்
    விரல் ஒவ்வொன்றிலும்
    பிரியமாய் பதிந்து
    வைப்பேன் அந்த முத்தங்களை
    பெரிதாகிப் பிரிந்தாலும்
    மறக்காதிருக்க….

    நண்பர்களே ! முத்தக் கவிதை பிடித்திருந்தால் தயங்காமல் தங்கள் வாக்குகளையும்,கருத்துக்களையும் பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்
      

    21 comments:

    1. தவறிப்போன முத்தங்களை
      தருவதற்க்கும்

      பெறுவதற்க்கும்
      தடையற்றது குழந்தையின்
      அன்பு முத்தம்..//////

      வாவ்!நிஜமான கருத்து! சூப்பர்!

      ReplyDelete
    2. நண்பர்களுக்கு
      தரமுடியாமல்
      தள்ளி நிற்கிற போலிபண்பினால்
      சிதைந்த முததங்களையும்…!

      --- அருமையான வரிகள்

      ReplyDelete
    3. @ ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

      முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..

      தங்கள் நண்பர்ஸ் தளம் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    4. என் தோளில் ஒட்டி
      டாட்டா காட்டும்
      விரல் ஒவ்வொன்றிலும்
      பிரியமாய் பதிந்து
      வைப்பேன் அந்த முத்தங்களை
      பெரிதாகிப் பிரிந்தாலும்
      மறக்காதிருக்க….//

      அருமையான யதார்த்த வரிகள்..
      கலக்கல்


      ஆங்கிலத்தை இப்படி கூட கத்துக்கலாமா ?

      ReplyDelete
    5. @ suresh subramanian

      தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    6. @ வேடந்தாங்கல் - கருன்

      மிக்க நன்றி கரூன் அவர்களே..

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    7. முத்தக்கவிதை முத்தான கவிதையாக உள்ளது.பாராட்டுக்கள்.

      ReplyDelete
    8. @ R.Elan.

      முத்தக்கவிதை முத்தான கவிதையாக உள்ளது.பாராட்டுக்கள்.

      தங்களின் வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது நண்பரே..

      மீண்டும் வருக..

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    9. தவறிப்போன முத்தங்களை
      தருவதற்க்கும்

      பெறுவதற்க்கும்
      தடையற்றது குழந்தையின்
      அன்பு முத்தம்...!//

      ஆம்!நண்பரே!
      இந்த முதசுவைக்கு கிறங்காதோர் யாருமில்லை!
      அருமை!பாராட்டுக்கள்!

      ReplyDelete
    10. @ கோகுல்

      வாருங்கள் கோகுல் நண்பரே..

      தங்கள் ”காந்தி பிறந்த மண்” அருமை.தற்போதுதான் வாசித்துவிட்டு வந்தேன்.

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    11. கவிதை நல்லா இருக்கு. குழந்தைகள் என்றுமே அழகான கவிதைதான்.

      ReplyDelete
    12. அதென்ன அரை மனதுடன், மனைவிக்கு தெரியுமா?

      ReplyDelete
    13. ஒவ்வொரு வரியையும் ரசித்து படித்தேன்...நண்பரே..

      கவிதை குழந்தையை போல மிக அழகாக...

      ReplyDelete
    14. என் தாய் கொடுக்கத்
      தவறிய முத்தங்களையும்…!
      என் மனைவியிடம்
      அரைமனதுடன் பெற்ற
      அந்தரங்க முத்தங்களையும்…!//அருமையான யதார்த்த வரிகள்..

      ReplyDelete
    15. @ Lakshmi

      அன்னையின் வருகைக்கும் அன்பான கருத்திற்க்கும் நன்றிகள் பல.

      பாசத்துடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    16. @ suryajeeva

      //அதென்ன அரை மனதுடன், மனைவிக்கு தெரியுமா?//

      அன்பு மனைவியின் ஆதரவுடன் பிறந்த வரிகள்தான் இவை நண்பரே..

      வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    17. @ ராஜா MVS

      வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி திரு ராஜா அவர்களே..

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    18. @ மாலதி

      தளத்திற்க்கு முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி தோழி மாலதி அவர்களே..

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    19. @ Rathnavel

      தங்கள் வருகை மிக்க உவகையளிக்கிறது ஐயா

      நன்றியுடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    20. அன்பின் சிவகுமார் - கவிதை நன்று - குழந்தைக்குக் கொடுக்கும் முத்தம் சிறப்பு - ஆமா - அதென்ன அந்தரங்க வேளையில் பெற்ற அரைகுறை முத்தங்கள் - ஏன்பா இப்படி - அந்தரங்கத்தில் முழு மனதுடன் முழுமையாக முத்தம் பெற்று மகிழ - கொடுத்து மகிழ - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

      ReplyDelete

    பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.