• Breaking News

    September 19, 2011

    சிறைக்கைதி..



    நான்கு சுவர்களுக்கு நடுவே
    துன்பத்தோடு நான்…!
    நித்தம் நித்தம் யுத்தம் நடத்தும்
    மனம் நொந்த கைதியாகிறேன் !

    சொந்த வீட்டிற்க்கு செல்ல விரும்பாமல் 
    திமிறிய என்னை,வலுக்கட்டாயமாக
    உள்ளே தள்ளி, கதவை
    கள்ளமாய் மூடியது ஒரு ”பிறப்பு”ச் சுவர். !

    சாப்பிட அமர்ந்தேன்…
    என்னை திட்டிய தாய்”வீடு” என்ற
    அடுத்த சுவரின் கதவு மூடி
    நடுத்தெருவில் நிர்க்கதியாய் நிற்க வைத்தாள் !

    கூலி வேலையாவது தேடினேன்.
    ”காலி இல்லை” என கூறி ”வாய்ப்பு”என்ற
    மூன்றாவது கதவும்
    புன்னகைத்து மூடிக்கொண்டது.!

    இறுதி முயற்சியாக
    உறுதியுடன் சாகச் சென்றேன்.
    தடுத்த சட்டம் ”தண்டனை” என்ற
    பெயரில் கண்டனத்தோடு
    அடுத்த கதவையும் அடித்து மூடியது !

    ஆக தாகத்தோடு
    நான்கு சுவர்களுக்கு
    நடுவே நான்...!
    ஜாமீனெடுக்க வருவோரை
    எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்….
    ஏமாளியாக !

    நண்பர்களே கவிதை பிடித்திருந்தால் மற்க்காமல் தங்கள் வாக்குகளையும் கருத்துக்களையும் பதிவு செய்து விட்டுச்செல்லலாமே..

    10 comments:

    1. சூப்பர் நண்பா அருமையான கவிதைகள்

      ReplyDelete
    2. வைரை சதிஷ்

      வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பா..

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    3. முதலிரண்டு பத்திகள் இன்னொரு விசயத்தை நினைவூட்டுகிறது!
      ஜாமீன்எடுக்க விரைகிறோம்!

      அழகிய கவிதை பாராட்டுக்கள்!

      ReplyDelete
    4. @ கோகுல்

      //முதலிரண்டு பத்திகள் இன்னொரு விசயத்தை நினைவூட்டுகிறது!
      ஜாமீன்எடுக்க விரைகிறோம்!

      அழகிய கவிதை பாராட்டுக்கள்!//


      வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..

      ReplyDelete
    5. அழகிய கவிதை நல்லா இருக்கு வாழ்த்துக்கள்.

      ReplyDelete
    6. ஜாமீன் கிடைச்சாலும் இன்னொரு கேஸ் போட்டு உள்ள தள்ளும் முடிவில் இருக்கிறார்களாம் தமிழக காவலர்கள்

      ReplyDelete
    7. @ Lakshmi

      பதிவுலக அம்மாவின் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றிகள் பல.

      பாசத்துடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    8. suryajeeva

      //ஜாமீன் கிடைச்சாலும் இன்னொரு கேஸ் போட்டு உள்ள தள்ளும் முடிவில் இருக்கிறார்களாம் தமிழக காவலர்கள்//

      வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..

      ”ஆனாலும் ஜாமீன் கிடைத்தும் மறுபடியும் இன்னொரு கேஸ் போட நான் ஒன்றும் முன்னாள் அமைச்சர் இல்லையே நண்பரே”

      ஹி.ஹி..ஹி...

      மிக்க நன்றி மீண்டும் வருக..

      ReplyDelete
    9. நல்ல கவிதை.
      வாழ்த்துக்கள்.

      ReplyDelete
    10. @ Rathnavel

      //நல்ல கவிதை.
      வாழ்த்துக்கள்.//

      தங்களின் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete

    பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.