• Breaking News

    September 18, 2011

    கூடங்குள போரட்டம் வெற்றிகிட்டும் வரை..




    நமக்காக போராடும்
    நம்மவர்கள் படும்பாடு
    மிகக் மிகக் கொடுமை...!
    போதும் போதும்
    இனியும் பொறுமை…!
    தீயாய் கனிந்து
    அணு உலை இல்லா
    கூடங்குளம் படைப்போம் !

    ஓட்டுப்போட்டு ஓட்டுப்போட்டு
    விரல் நகத்தில்
    மை வைக்கப் பஞ்சம்… !
    இன்று.. உடம்பில் கை வைக்க
    எலும்பும், உயிரும்தான்…
    எஞ்சியுள்ள மிச்சம்.

    அரசாழ்வோரே..
    சுதந்திர காற்றை சுவாசிக்க..
    அகிம்சைக் கொடியேற்றிவிட்டு
    உயிர்களின் சுவாசத்தை
    பறிக்கப் போகும்
    அணு உலைக் கொடியேற்ற துடிப்பது ஏன்?

    அரசவையே ! உங்களின்
    செவிக்குள் எங்களின்
    ஒப்பாரிகள் ஒலிக்கவில்லையா ?
    உங்கள் கண்ணீரின்
    உப்பு கரிக்கவில்லையா ?
    இதயக் கிணற்றில்
    இரக்க நீர் சுரக்கவில்லையா ?
    எங்களின் சுவாசங்கள்
    அடைபடப் போகிறதே…
    சுவாசிக்கும் உங்களுக்கு
    இன்னுமேன் தெரியவில்லை ?

    வெற்றிச் செய்தி 
    விரைவில் கிட்டுமென்று
    நாளும் எதிர்பார்த்துக் 
    காத்திருக்கிறோம்.



    பதிவுலக நண்பர்க்ளின் துளிகளில் சில...








     நம்மை ஆள்வோருக்கு செய்தி அனுப்ப..







    வெற்றிகிட்டும் வரை ஓங்கிக்குரல் கொடுப்போம்.எழுப்பும் குரல் எட்டுத்திக்கும் எதிரொலிக்கட்டும்


    நண்பர்களே ! எதிர்கால சந்த்திகளுக்கு என்ன விட்டுச்செல்ல போகின்றோம் ? ஒரு கணம் சிந்தியுங்கள்

    20 comments:

    1. அருமையான முயற்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

      உங்கள் தளத்துக்கு அடிக்கடி வர முடியா விட்டாலும் நேரம் கிடைக்கும் போது நிச்சயம் வருவேன்

      ReplyDelete
    2. போரட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் .

      ReplyDelete
    3. தங்கள் பங்களிப்பிற்கு மிக்க நன்றி!
      வலுப்படுத்துவோம் ஆதரவுக்கரங்களை!

      ReplyDelete
    4. போதும் போதும்
      இனியும் பொறுமை…!

      ReplyDelete
    5. ஓங்கி உரக்க சொல்வோம் இன்குலாப் ஜிந்தாபாத்..

      ReplyDelete
    6. உங்கள் தளத்தை இனி தொடர்கிறேன்...

      ReplyDelete
    7. @ கவி அழகன்

      வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    8. @ நண்டு @நொரண்டு -ஈரோடு

      விரைவில் வெற்றி பெற நாமும் குரல் கொடுப்போம்

      நன்றி நண்பரே..

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    9. @ கோகுல்

      மிக்க நன்றி நண்பரே

      ReplyDelete
    10. @ முனைவர்.இரா.குணசீலன்

      முனைவரின் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி

      ReplyDelete
    11. @ suryajeeva

      //ஓங்கி உரக்க சொல்வோம் இன்குலாப் ஜிந்தாபாத்..//

      கூடங்குளம் முர்தாபாத்

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    12. தமிழ்வாசி

      உங்கள் தளத்தை இனி தொடர்கிறேன்...

      நண்பரே..தொடர்வதற்க்கு மிக்க நன்றிகள்

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    13. வெற்றிச் செய்தி
      விரைவில் கிட்டுமென்று
      நாளும் எதிர்பார்த்துக்
      காத்திருக்கிறோம்.


      ஆமா காத்திருப்பதைத்தவிர வேர என்ன செய்யமுடியும்?

      ReplyDelete
    14. Lakshmi said...

      //ஆமா காத்திருப்பதைத்தவிர வேர என்ன செய்யமுடியும்?//

      வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி அம்மா அவர்களே

      நம்மாலான ஆதரவினை வெளிப்படுத்துவோம் வெற்றியின் தூரம் வெகுதொலைவில் இல்லை

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    15. தங்கள் பங்களிப்பிற்கு மிக்க நன்றி!போரட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

      ReplyDelete
    16. @ kobiraj

      தங்கள் வருகைக்கும் மேலான ஆதரவிற்க்கும் மிக்க நன்றி நண்பரே..

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    17. ஆரம்பத்திலேயே இந்த அணு உலையை எதிர்த்து தி.க போன்ற இயக்கங்கள் பெருமளவில் போராடின.நாளடைவில் அது நீர்த்து போனது ஏனோ, கூடங்குளம் திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டும்.இனியாவது வெற்றி கிட்டட்டும்.

      ReplyDelete
    18. கண்டிப்பாக வெற்றி கிட்டும்.

      ReplyDelete
    19. @ R.Elan

      தங்களின் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..

      நிச்சயம் போரட்டம் வெல்லும்

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    20. @ Prabu Krishna

      //கண்டிப்பாக வெற்றி கிட்டும்.//

      அந்த ஓர் செய்தியைத்தான் நண்பரே ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்க்கிறது.நானும் கூட

      நன்றியுடன்
      சம்பத்குமார்

      ReplyDelete

    பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.