• Breaking News

  September 16, 2011

  குழந்தைகள் முன் சண்டையிடும் பெற்றோர்களே...


  வணக்கம் நண்பர்களே ! குடும்பத்தில் அடிக்கடி ஏற்படும் சண்டை,சச்சரவுகளால் வளரும் குழந்தைகள் படும்பாடுகள் எண்ணிலடங்காதவை.சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி சதா சண்டையிட்டுக்கொள்ளும் பெற்றோரின் குழந்தைகள் பள்ளிகளில் அவர்களுக்குத்தரப்பட்ட செயல்களை செய்வதில் சிரமப்படுவதாக முடிவு வெளியாகியுள்ளது. பெற்றோருக்கு இடையே அடிக்கடி நிகழும் சண்டைகளின் காரணமாக இக்குழந்தைகள் சக மாணவர்களுடனும், பிறருடனும் விட்டுக்கொடுத்து நடக்கும் தன்மையும் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

  முந்நூறு குழந்தைகளை வைத்து கிட்டத்தட்ட மூன்றாண்டு காலத்திற்கு இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. பெற்றோரின் நடத்தை மற்றும் சண்டை சச்சரவு பற்றிய தகவல்களை குழந்தைகள் வாயிலாகச் சேகரிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதனை வைத்து எதிர்மறை எண்ணங்களும், கவலைகளும் குழந்தைகளின் மனதை எப்படி ஆழமாகப் பாதிக்கின்றன என்ற ரீதியில் ஆய்வு செய்யப்பட்டது.

  இப்படி சச்சரவுகளில் சிக்கிய குழந்தைகளின் நடத்தை, சகமாணவர்களுடன் அவர்களின் உறவு ஆகியவற்றை வைத்து பள்ளியுடன் அவர்களின் ஒத்துப்போகும் தன்மையைப் பற்றிய விபரங்கள் ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்டது. குறிப்பாக சக மாணவர்களுடன் ஒத்துழைப்பு, ஆசிரியரின் அறிவுரையை மதித்தல், வகுப்பறையின் பொருட்களை குறைவாக உபயோகித்தல் போன்ற அம்சங்களில் குழந்தைகளின் அணுகுமுறையும் வெளிக்கொணரப்பட்டது.இதே மாதிரியாக குழந்தைகளிடம் பெற்றோரும் கவனம் செலுத்த வகை செய்யும் விதத்தில் பெற்றோரின் அறிக்கை, கணினி உதவியுடன் குழந்தைகளிடம் அக்கறை காட்டும் படிவம் போன்றவையும் பெறப்ட்டது.

  பெற்றோரின் வாழும் முறை குழந்தைகளிடம் எப்படி கவனச்சிதறலை உருவாக்குகிறது என்பதை ஆய்வு செய்கையில் பெற்றோரின் சண்டைகளைப் பார்க்க நேரிட்ட குழந்தைகள் மன அளவில் பாதிக்கப்படுவதால், வர்களது சுட்டித்தனமும், சுறுசுறுப்பும் குறைந்துவிடுகிறது. இதனால் பள்ளிகளில் அவர்களால் சிறப்பாக இருக்க முடிவதில்லை. அதேப்போல, தங்களது வகுப்பில் படிக்கும் பிள்ளைகளுடன் அவர்களால் இயல்பாக பழக முடிவதில்லை.
  தங்களை குறைவாக மதிப்பிடல், எப்போதும் ஒருவித சோகத்தில் இருத்தல் போன்ற பிரச்சினைகள் எழுகின்றன.இவற்றிலிருந்து தப்பிக்கும் விதத்தில் எதிர்மறை எண்ணங்களை அதிகமாக வளர்த்துக்கொள்வது கண்டறியப்பட்டுள்ளது.பிரச்னைகள் உள்ள குடும்பங்களிலிருந்து வரும் குழந்தைகளின் நிலையை உணர்வது மற்றும் தகுந்த பயிற்சி மூலம் அவர்களுக்கு நம்பிக்கை அளித்த உயர்த்துவது என்பவை கிட்டத்தட்ட தற்போது ஒரு சமூகப்பிரச்னையாகவே மாறியுள்ளது. இவற்றைச் சரி செய்யும் விதத்தில் மாற்று முயற்சிகள் மேற் கொள்ளப்பட வேண்டும்.

  நம் குடும்பத்தில் அடிக்கடி எழும் சண்டை சச்சரவுகள் வளரும் குழந்தைகளை அடியோடு மாற்றிப் போட்டுவிடுகிறது நண்பர்களே. குழந்தைகள் முன்பு சண்டையிடுதலை அடியோடு தவிர்ப்போம்.

  முக்கிய அறிவிப்பு : நண்பர்களே ! கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூடக்கோரி நம் பதிவுலக நண்பர்களுடன் ஒன்றிணைந்து ஆதரவளித்து ஓங்கி குரல் கொடுப்போம்.பாதுகாப்பற்ற அணு உலையினால் ஏற்படும் விளைவுகள் முற்றிலும் விபரீதமானவை.இதைப்பற்றி மத்திய மாநில அரசுகளுக்கு இந்த லிங்கில் சென்று உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள்.எல்லாம் நம் வருங்கால தலைமுறைக்காக ! 

  17 comments:

  1. பிள்ளைகளுக்கு நாம்தான் முன்மாதிரி என்பதை அநேகர் மறந்து போய்விடுகிறார்கள். நல்ல பதிவு

   ReplyDelete
  2. @ உங்கள் நண்பன்
   முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..

   நட்புடன்
   சம்பத்குமார்

   ReplyDelete
  3. நன்றி நண்பரே...போராட்டத்தில் பங்கு பெறுவதற்கு...


   உங்கள் பதிவில் குறிப்பிடும் சண்டைகள் எவ்வளவோ தடுக்க முயற்சித்தாலும் சில நேரங்களில் நம்மளையும் அறியாமல் வந்து விடுகின்றன...குறிப்பாக ஆணும பெண்ணும் சமம என்ற இந்த நல்ல உலகில் அது கொஞ்சம் அதிகம் தான்...அழகான கரு...அருமையான நடை...வாழ்த்துக்கள்...

   மறுபடியும் நன்றி...

   ReplyDelete
  4. ஆமாம் நண்பரே பிள்ளைகள் முன்பு பெற்றவர்கள் சண்டை போட்டுக்கொண்டால் அது பிள்ளைகளை பாதிக்கும் .

   பிள்ளைகளுக்கு முதல் ரோல் மாடலே பெற்றவர்கள் தான் .

   அவர்கள் அறிந்தும் அறியாமலும் மனதில் பதியும் செயல்கள்
   குழந்தைகளின் குணங்கள் எதிர்மறையாகவும் ,அல்லது ஒரு
   கூட்டுக்குள் சுருக்கிக் கொல்லும் நத்தை போல் தனது எண்ணங்களை
   மனதுக்குள் போட்டு புதைத்து தாழ்வு மனப்பான்மை ,இயலாமை
   போன்ற எண்ணங்களை வளர்த்துகொல்வார்கள் அவர்களுக்கே
   தெரியாமல் .

   மட்டுமில்லை(உறவில்) எதிலும் நம்பிக்கை இல்லாமல் போய்விடும்.

   நிறைய தவறுகள் செய்யும் (குழந்தை ,வளர்ந்தவர்கள்)அவர்கள்
   வளர்ந்த சூழ்நிலையே காரணம் ஆகும்.

   இன்னும் நிறைய சொல்லலாம் நண்பரே

   பகிர்வுக்கு நன்றி நண்பரே

   ReplyDelete
  5. போராட்டக் குரலுக்கு நன்றி நண்பரே

   ReplyDelete
  6. @ ரெவரி
   //நன்றி நண்பரே...போராட்டத்தில் பங்கு பெறுவதற்கு...//

   தங்களின் பிஸி ஷெட்யூலிலும் இந்த தளத்திற்க்கு வந்து கருத்துரையிட்டதிற்க்கு மிக்க நன்றி நண்பரே..

   வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தங்கள் வலைத்தளத்திற்கும் கூட

   வெற்றி நமதே.. நண்பரே..

   நட்புடன்
   சம்பத்குமார்

   ReplyDelete
  7. @ M.R

   //போராட்டக் குரலுக்கு நன்றி நண்பரே//

   பதிவுலக நண்பர் கூடல்பாலா அவர்கள் ஏற்றிய தீப ஜோதியை அணையாமல் காப்பது தமிழ் பதிவர் ஒவ்வொருவரின் கடமைதான் நண்பரே..

   எனக்கும் வாய்பளித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

   வெற்றி கிட்டும் வரை எட்டுத்திக்கும் குரல் கொடுப்போம்

   நன்றி நண்பரே..

   தங்களின் ஆழமான கருத்திற்க்கும் கூட..

   நட்புடன்
   சம்பத்குமார்

   ReplyDelete
  8. குடும்ப சண்டை பிள்ளைகளை மன அளவு பாதிக்கும் என்பது உண்மை
   கோபம் வந்தா இடம் பொருள் ஏவல் பார்பதில்லையே குழந்தைகளையா பார்ப்பார்கள்

   ReplyDelete
  9. இது தான் குழந்தைகளை பாதிக்கும் பெரிய பிரச்சினை. நன்றி சகோ.

   கூடங்குளம் பகிர்விற்கு நன்றி.

   ReplyDelete
  10. @ Rathnavel

   வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி ஐயா

   ReplyDelete
  11. கவி அழகன் said...

   //குடும்ப சண்டை பிள்ளைகளை மன அளவு பாதிக்கும் என்பது உண்மை கோபம் வந்தா இடம் பொருள் ஏவல் பார்பதில்லையே குழந்தைகளையா பார்ப்பார்கள்//

   கோபம் வரும்போது ஏற்படும் பின் விளைவுகளை சற்று யோசித்துப்பார்த்தால் சண்டை சச்சரவுகள் குறையும் என்பது எண்ணம் நண்பரே..

   வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..

   ReplyDelete
  12. @ suryajeeva

   முத்தான கருத்திட்டதிற்க்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பரே..

   ReplyDelete
  13. @ Prabu Krishna

   //இது தான் குழந்தைகளை பாதிக்கும் பெரிய பிரச்சினை. நன்றி சகோ.

   கூடங்குளம் பகிர்விற்கு நன்றி.//

   சிறிய விதைதான் நண்பரே..

   வெற்றிகிட்டும் வரை பதிவுலக நண்பர்கள் ஆதரவளிப்போம்

   கண்டிப்பாய் வெற்றியும் பெறுவோம்

   நன்றி நண்பரே..

   ReplyDelete
  14. நல்ல உளவியல் பார்வையோடு கூடிய பதிவு.முக்கியமாக ”குடிமகன்”களின் குடும்பத்து பிள்ளைகள் உளவியல் ரீதியாக மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.பதிவுக்கு நன்றி.

   ReplyDelete
  15. @ R.Elan

   வருகைக்கும் ஆழமான கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..

   “குடிமகன்”களுக்கு தனி பதிவே எழுதலாம் என்று எண்ணியுள்ளேன் நண்பரே..

   மீண்டும் வருக

   ReplyDelete

  பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.