• Breaking News

  September 13, 2011

  நிலைகுலைய வைக்கும் நிதிநிறுவனங்கள்

  திருமண ஆசைச் சிறகுகள்
  நாளொரு மேனியும்
  பொழுதொரு வண்ணமும்
  வளர்ந்த பொழுது
  நிதி நிறுவனத்தில்
  நிதியைப் போட்டேன்
  திரும்ப வருமென நினைத்து…!

  நீதி இல்லாத உலகில்
  நிதியை சுருட்டிக் கொண்டு
  இரவோடு இரவாக காலி செய்தனர் !
  மணக் கோலத்தில் பறக்க
  பறக்க வேண்டியவள்
  மனநிலை பாதிக்கப்பட்டு
  மரணதேதியை மட்டும்
  தினம் தினம்
  திரும்பிப் பார்க்கிறாள்…!

  கோயில் சுண்டல்
  சுருட்டிச் சுருட்டி
  விற்ற பணம்...!
  உமிழ் நீர்
  விழுங்கும் காலம் கூட
  வீணாக்காமல் சேர்த்த பணம்..!

  எனக்குத் தெரியாமல்
  என் பணத்தை
  சுருட்டிக் கொண்டு போனது
  தெரியாமல் போய்விட்டதே !
  இதற்கு நான்
  எந்தச் சாமியிடம்
  என்னவென்று மனு எழுத ?

  செவ்வாய் தோஷம் என
  வெறுவாய் கழுவிச்
  சென்றவர்கள் ஏராளம்...!
  இன்று மணநாள்
  கைகூடும் பொழுது
  போட்டு வைத்த பணம்
  எங்கே போனதோ தெரியவில்லையே !

  வீட்டுக்குள்
  இருந்த கூட்டுக் குடும்பம்
  வீதிக்கும் வந்துவிட்டது !
  உழைத்த பணம்
  வீடு வந்து சேர
  ஓராயிரம் படி
  ஏறி இறங்கினேன் !
  முடிவாய் முடியாதென
  முகத்தில் அடித்து
  வெளியேற்றியது காக்கிச்சட்டை !

  நிதிநிறுவன சூறாவளியில்

  சுத்தமாய் தொலைந்து போனதால்
  படிக்க வேண்டிய மகனும்
  பாண்டி மடத்தில்
  இரும்பு சங்கிலியால்
  கட்டப் பட்டுள்ளான்
  பைத்தியக்காரனாக….!

  நண்பர்களே…

  நிதிநிறுவனத்தால்
  ஒழிந்த குடும்பங்கள்
  போதும்..போதும்..
  இருக்கும் குடும்பங்களையாவது
  சீர்தூக்கி நிலைநிறுத்துவோம்..!


  10 comments:

  1. அருமையான பதிவு.
   மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

   ReplyDelete
  2. @ புங்கையூர் பூவதி

   முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே...

   மீண்டும் வருக

   நட்புடன்
   சம்பத்குமார்

   ReplyDelete
  3. எந்த தனியார் பயல் நேர்மையோட இருக்கான், சொல்லுங்க.. தங்கத்தில் போடும் மூலதனமே சிறந்ததுன்னு சொல்லியும் பங்கு சந்தையில் போடும் மடையர்கள் தான் அதிகம், மிக சிறந்த களவாணி பொருளாதார நிபுணர்களே பங்கு சந்தையில் பணத்த போடுவதில்லை..

   ReplyDelete
  4. பயங்கரமா இருக்கு நிதி நிறுவனத்தில் போட்டு சேமித்து வைக்கும் பணம் அவசிய நேரத்தில் உதவும் என்ற எண்ணத்தில் காத்திருக்கும் நடுத்தர மக்களின் நிலை மிக நன்றாகவே உரைத்திருக்கீங்க கவிதையில்...

   இப்படி நிதி நிறுவனத்தில் போட்டு மோசம் போன குடும்பங்கள் போலிசுக்கு போனாலும் பயன் இருப்பதில்லை என்ற வேதனையையும் சொல்லவேண்டும்....

   பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் கல்யாணம் ஆகனும் வரதட்சணைகொடுக்கனும்னு சிறுக சிறுக சேமித்து வைத்து எடுக்கும் நேரத்தில் எல்லோர் வயிற்றிலும் தீ வைத்துவிட்டு ஓட்டமெடுத்துவிட்டார்கள்...

   அதில் எத்தனை திருமணங்கள் பாழ் ஆனதோ? அதில் இன்னும் எத்தனை முதிர்கன்னிகள் கண்ணீர் காய்ந்த கன்னத்துடன் கற்பனையில் தன் கல்யாணம் கண்டு ஏக்கம் கொள்கிறாரோ.... எத்தனை பேரின் படிப்பு இப்படி பாதியில் நின்று அவர்கள் கனவு வெடித்து சிதறினதோ.... அத்தனையும் மனம் பதறவைக்கும் நிஜங்கள்...

   நிஜங்கள் பயங்கரமாக சுடத்தான் செய்கிறது...
   பாவ புண்ணியத்துக்கு அஞ்சாதவர் தான் இப்படி ஒரு செயலை தைரியமாக செய்வது... இதனால் பாதிக்கப்படும் குடும்பங்களோ ஏராளம்...

   ஒவ்வொரு மத்தியத்தர குடும்பத்தின் அவசியங்களை மிக அழகாக எளிய நடையில் இங்கு கவிதையாக்கியது சிறப்பு சம்பத்....

   இதே நிதி நிறுவனத்தில் பணம் போட்டு வைத்திருந்த என் மாமனார் நிதி நிறுவன மோசடியில் பணம் பறிகொடுத்த அதிர்ச்சியில் அங்கேயே ஹார்ட் அட்டாக் வந்து இறந்தது நினைவுக்கு வருகிறது....

   இதே நிதி நிறுவனத்தில் சேமிப்பாக பணம் போட்டு வைத்த என் தங்கை இந்த மோசடியின் பாதிப்பில் வீழ்ந்து குடும்பமே கண்ணீருடன் ஒரு மாதம் படுக்கையில் கிடந்து அவஸ்தைப்பட்டது நினைவுக்கு வருகிறது...

   மக்கள் இனியாவது சுதாரிப்பார்களா? ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுவோருக்கா பஞ்சம்????

   மனம் நிறைந்த வேதனை வரிகள் தான் இங்கு கவிதையாக மிளிர்கிறதுப்பா..

   அன்பு நன்றிகள் பகிர்வுக்கு..

   ReplyDelete
  5. நல்ல பதிவு.
   மக்கள் ஏமாந்த விபரங்களை தொலைக்காட்சிகளும், செய்தித் தாள்களும் திரும்ப திரும்ப சொன்னாலும் மக்களும் திரும்ப திரும்ப ஏமாறுகிறார்கள். பேராசை தான் காரணம். வங்கி போன்ற நிறுவனங்களில் போடலாமே.
   நன்றி.

   ReplyDelete
  6. @suryajeeva

   //எந்த தனியார் பயல் நேர்மையோட இருக்கான், சொல்லுங்க.. தங்கத்தில் போடும் மூலதனமே சிறந்ததுன்னு சொல்லியும் பங்கு சந்தையில் போடும் மடையர்கள் தான் அதிகம், மிக சிறந்த களவாணி பொருளாதார நிபுணர்களே பங்கு சந்தையில் பணத்த போடுவதில்லை..//

   உண்மைகளை உணர்த்தியதற்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பரே..

   நட்புடன்
   சம்பத்குமார்

   ReplyDelete
  7. @ மஞ்சுபாஷிணி
   //இதே நிதி நிறுவனத்தில் பணம் போட்டு வைத்திருந்த என் மாமனார் நிதி நிறுவன மோசடியில் பணம் பறிகொடுத்த அதிர்ச்சியில் அங்கேயே ஹார்ட் அட்டாக் வந்து இறந்தது நினைவுக்கு வருகிறது....//

   ஆழ்ந்த அனுதாபங்கள் தோழியே !

   அரசு இனிமேலாவது துரித நடவடிக்கை எடுத்து நிதிநிறுவனம் ஆரம்பிக்கும் வழிமுறைகளை கடுமையாக்க வேண்டும்.அப்படி செய்தால்தான் விலைமதிப்பற்ற மனித உயிர்களை காப்பாற்ற முடியும்.

   ஆழமான கருத்துரைக்கு மிக்க நன்றி

   நட்புடன் நலம் நாடும்
   சம்பத்குமார்

   ReplyDelete
  8. @Rathnavel
   //மக்கள் ஏமாந்த விபரங்களை தொலைக்காட்சிகளும், செய்தித் தாள்களும் திரும்ப திரும்ப சொன்னாலும் மக்களும் திரும்ப திரும்ப ஏமாறுகிறார்கள். பேராசை தான் காரணம். வங்கி போன்ற நிறுவனங்களில் போடலாமே.//

   வரும் தலைமுறைகளாவது இந்த படுகுழியில் விழுந்து ஏமாறவேண்டாம் என்பதே இந்த பதிவின் நோக்கம்

   நன்றியுடன்
   சம்பத்குமார்

   ReplyDelete
  9. நல்ல பகிர்வு

   இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5

   தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5

   ReplyDelete
  10. @ வைரை சதிஷ்

   வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி திரு சதிஷ் அவர்களே..

   நட்புடன்
   சம்பத்குமார்

   ReplyDelete

  பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.