• Breaking News

  September 8, 2011

  பயங்கரவாதம்

  வெடிகுண்டுகளை
  வீசிய மனிதனே…
  மனித வெடிகுண்டாய்
  மாறிடும் கொடுமை !

  விமானம் மூலம்
  வெடிகுண்டை வீசியவன்
  இன்று
  விமானத்தையே
  வெடிகுண்டாக மாற்றுகிறான் !

  பதுங்க உதைத்திடும்
  பயங்கர வாதத்தால்
  சிதைந்து போனது
  மானுட வாழ்வு !

  காயங்கள் சுமந்து
  கலங்கிடும் மானுடமே…
  வன்முறை இப்படி
  வளர்வது எதனால்?

  உலகம் எங்கிலும்
  கலகத்தின் சினைகள் !
  உள்ளங்கள் தோறும்
  ஆறாத ரணங்கள் !

  அழிவை நோக்கிச்
  செல்லும் மனிதமே
  அமைதியைக் கொன்று
  எதையினிக் காப்பது….?

  நண்பர்களே! ஒரு கணம் சிந்திப்போம்.இறந்த உயிர்களுக்கு ஓர் நிமிடம் அஞ்சலி செய்வோம்

  6 comments:

  1. குண்டுகள் வெடித்தாலும்
   எம் நெஞ்சுரம் வெடிக்காது ....
   சடலங்கள் சிதறினாலும்
   "வந்தே மாதரம்" சப்தம் சிதறாது ....!

   http://koodalnanban.blogspot.com/2011/09/blog-post_08.html

   ReplyDelete
  2. @ உங்கள் நண்பன்

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பா..

   தங்களின் பதிவை சுவாசித்தேன் அருமையான வரிகள்

   நட்புடன்
   சம்பத்குமார்

   ReplyDelete
  3. நண்பரே உங்கள் கமெண்ட் பார்த்தேன். நீங்கள் வலைப்பூ முகவரி மாற்றினால் உங்களை followசெய்பவர்கள் Dashboard இல் புதிய போஸ்ட்கள் Update ஆகாது. எனவே எல்லோரையும் Unfollow செய்ய சொல்லி மீண்டும் follow செய்ய சொல்லுங்கள். இதனால் நிறைய வாசகர்களை நீங்கள் இழக்க நேரிடும்.

   எனக்கு இந்தப் பதிவு வரை மட்டுமே தெரிகிறது

   //சொல்ல முடியாத சோகங்கள்..
   சம்பத்குமார் at KULANTHAI VALARPPU - 2 days ago //   என்னை தொடர்பு கொள்ள என் ப்ரோபைல் பக்கத்தில் உள்ள ஈமெயில் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

   ReplyDelete
  4. @ Prabu Krishna

   //நண்பரே உங்கள் கமெண்ட் பார்த்தேன். நீங்கள் வலைப்பூ முகவரி மாற்றினால் உங்களை followசெய்பவர்கள் Dashboard இல் புதிய போஸ்ட்கள் Update ஆகாது. எனவே எல்லோரையும் Unfollow செய்ய சொல்லி மீண்டும் follow செய்ய சொல்லுங்கள். இதனால் நிறைய வாசகர்களை நீங்கள் இழக்க நேரிடும்.//

   தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே..

   புதிய முகவரி பற்றி தற்போது அனைவருக்கும் செய்தி அனுப்பியுள்ளேன்

   நட்புடன்
   சம்பத்குமார்

   ReplyDelete
  5. எதையும் உயிர்ப்பிக்க சக்தி இல்லாத நமக்கு அழிக்க மட்டும் எப்படி முடிகிறது?

   வெடிகுண்டு விபத்தில் இதுவரை இறந்த உயிர்கள் கணக்கிலடங்காதது....

   எதைப்பிடிக்க இத்தனை உயிர்களை பலி எடுக்கிறோம்?இதனால் என்ன கிடைக்கிறது நன்மை? கிடைக்கும் நன்மை அப்படியே கிடைத்தாலும் எத்தனை காலம் வரை தங்கும் நம்முடன்? நம் உயிர் நம் உடலில் இருக்கும் வரை தானே? அதன்பின்?

   நிலையில்லாத உயிருக்காக நாம் செய்யும் தீயச்செயல்கள் தான் எத்தனை?

   இருக்கும் வரை நல்லதை செய்துவிட்டு மறைவோம் என்ற எண்ணம் துளியும் இல்லாததால் தான் உயிர் பறிக்கும் கொடுமைகள் நடக்கிறது...

   இயற்கை மரணமே ஜீரணிக்கமுடியாத நிலை இருக்கும்போது இப்படி வெடிகுண்டு வெடித்து அதனால் சிதையும் உடல்கள் அங்கங்கள் இழந்து எது எங்கே என்று யோசிக்குமுன் அந்திம காரியங்கள் முடிக்க கூட உடல் கிடைக்காத வேதனை....

   இப்படி செய்வதற்கு காரணங்கள் எத்தனையோ.. பதவி ஆசை, மத துவேஷங்கள், பழி வாங்கும் படலம், சைக்கோ இப்படி எத்தனையோ இருக்கலாம்.. ஆனால் போவதென்பதோ உயிர்... என்ன செய்தாவது அழிவை தடுக்கமுடியும்... ஆனால் என்ன செய்தாவது உயிர்ப்பிக்கமுடியுமா? முடியாத செயல் எனும்போது அப்ப அழிக்கவும் வேண்டாம் தானே?

   எல்லாரையும் அழித்துவிட்டு எதை ஆள இவர்கள் ஓடுவது?? சரியா தான் கேட்டிருக்கீங்க... சாட்டையடி வரிகள் சம்பத் நீங்க கேட்டிருப்பது....

   இந்த கவிதை வரிகள் கண்டிப்பா எல்லாரையுமே யோசிக்கவைக்கும்... அதுவும் கடைசி பத்தி நச் .....

   பயங்கரவாதமும் தீவிரவாதமும் வன்முறையும் கண்டிப்பா நல்ல செயல் இல்லை.. நல்லதை தரப்போவதுமில்லை... இதை உணரச்சொல்லி நீங்க படைத்த இந்த கவிதை அட்டகாசம்....

   ஆழ்ந்த சிந்தனையுடன் வரைந்த கவிதைக்கு அன்பு வாழ்த்துகள் சம்பத்...

   ReplyDelete
  6. @ மஞ்சுபாஷிணி

   ஆழமாக சிந்த்தித்து தங்கள் இட்ட கருத்துரைக்கு மிக்க நன்றி தோழியே..

   என்னவொரு கொடுமை என்றால் தற்போது டெல்லியில் குண்டு வைத்து அப்பாவி உயிர்களையும் கொன்று குவித்து விட்டு நான் தான் செய்தேன் என ஓர் அமைப்பு பகிரங்கமாக மார்தட்டிக் கொள்கிறது..

   மனிதம் எதை நோக்கிச் செல்கிறது ?

   விடையும் அறியமுடியவில்லை.

   வருகைக்கு நன்றி மீண்டும் வருக..

   நட்புடன்
   சம்பத்குமார்

   ReplyDelete

  பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.