• Breaking News

    September 6, 2011

    சொல்ல முடியாத சோகங்கள்..

    இவை
    சொல்ல முடியாத
    சோகங்களின்
    சேகரிப்பின் சுருக்கம் மட்டுமே !


    நேரம் ஆகிவிட்டது !
    தூரத்தில் அரட்டையடிக்கும் அலுவலர்கள்
    எங்கள் மீது அமர்ந்து பணியாற்ற
    தாங்களாய் ஏன் இன்னும் வரவில்லை ?
    அரசு அலுவலக நாற்காலிகள் !

    கும்பிட வந்தவர்கள்
    நம்புகின்ற எங்களை
    நிர்கதியாய் வெளியே கழற்றிவிட்டுவிட்டு
    தர்ம்மமின்றி உள்ளே சென்றுவிட்டார்களே !
    நாங்கள் செய்த தவறுதான் என்ன ?
    காலம் காலமாய்
    வாயிற்படியில் வருந்திக்
    கிடக்கும் செருப்புகள் !

    நிம்மதியாய் வாழ விடாமல்,
    எங்களை அம்மணமாக்கி,
    கண்ட இடங்களில் மண்டி யிடவைடவத்து
    தண்டனைத் தருகிறீர்களே ?
    தெருவெங்கும் தங்கள்
    சருமம் தெரியகூனிக்குறுகி
    தேக்கமாகி துர்நாற்றம் வீசும்
    சாக்கடைகள் !

    நம்பினால் நலம் தரும் என்னை
    அம்புகளால் துளைப்பதுபோல்
    அலட்சியம் செய்து விலக்கி வைக்கின்றார்களே
    அழைத்தால் ஓடோடிவர காத்திருக்கும்
    உழைப்பின் ஏக்கங்கள் !

    ஐயோ தாங்கமுடியவில்லையே
    தயைகூர்ந்து எங்களை விட்டுவிடுங்கள்
    ஓய்வெடுக்க முதுமையிலும் எங்களுக்கு
    விடுப்பும் வாய்ப்பும் கிடையாதா ?
    தஞ்சமடைந்த தம்பதிகளான
    லஞ்சமும் ஊழலும் !




    நண்பர்களே.. இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் தங்கள் கருத்துக்களையும்,வாக்குகளையும் பகிர்ந்து விட்டுப்போங்களேன்..

    No comments:

    Post a Comment

    பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.