• Breaking News

    August 6, 2011

    வெற்றியாளர்களின் எனர்ஜி டானிக்….




    ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை
    சான்றோன் எனக்கேட்ட தாய்.


    தாமஸ் ஆல்வா எடிசன் பள்ளியில் இருந்து படிக்க லாயக்கில்லை என்று விரட்டப்பட்டார். அந்த குழந்தையின் தாய் என் மகனின் திறமைகளை இந்த உலகம் இன்று புரிந்து கொள்ளவில்லை. ஆனால் பின்பு புரிந்து கொள்ளும் என நம்பினார். தானே குழந்தைக்கு அத்தனை பாடங்களையும் சொல்லிக் கொடுத்து அவன் செய்யும் பரிசோதனைகளுக்கு உதவினார். மிகச் சிறந்த விஞ்ஞானியாக உருவாக்கினார். அந்த தாய்க்கு இன்று இந்த உலகே கடமைப்பட்டிருக்கிறது.


    முட்டாள்தனமாக கேள்வி கேட்டு கொண்டிருக்கிறான். அவன் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று பள்ளி ஆசிரியர் ஐன்ஸ்டினை வெறுத்தார். உற்றார் உறவினர்களும் அவரை ஒதுக்கினர்.ஆனால், அவரது தாயும் ஜேக்கப் என்ற அவரது மாமாவும் அவரை மதித்து அவரது கேள்விக்கு விடை காண உதவினர். அவருக்கு ஊக்கம் கொடுத்தனர். அவர்களின் ஊக்கத்தால் அந்த மாமேதை உருவானார்.


    நீண்ட நாள் இறைவனை வேண்டி அதன் பலனாக தான் பெற்ற ஒரே தவப்புதல்வனை தன் கைகளில் வைத்துக் கொஞ்சாமல் இறைவனின் ஆலயத்தில் ஒப்படைத்தார் இறைவன் தொண்டுக்காக. அன்னாள் என்ற அந்த தாய் பெற்றெடுத்த அந்த புதல்வன்தான் சாமுவேல் என்ற மாபெரும் தீர்க்கதரிசி என்று பைபிள் கூறுகிறது.இன்று நாம் அறிந்த சாய்னா நேவலின் வெற்றிக்குப்பின்னால் அவரது பெற்றோரின் கடின உழைப்பு, பெரும் முயற்சி காரணமாக இருக்கிறது.

    ஒரு தாய்க்கும் தந்தைக்கும் குழந்தை பற்றிய சுயமதிப்பு எத்தனை உயர்வாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அந்த குழந்தை தன் வாழ்வில் சாதிக்கிறான். 




    இன்னும் கலைகள் வளறும்...

    2 comments:

    1. அனைத்துப் பெற்றோர்களும் படிக்க வேண்டுய பதிவு,
      சாய்னா நேவல் நல்ல முன்னுதாரணம்..

      ReplyDelete
    2. அனைத்துப் பெற்றோர்களும் படிக்க வேண்டுய பதிவு,
      சாய்னா நேவல் நல்ல முன்னுதாரணம்..

      ReplyDelete

    பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.