• Breaking News

    August 10, 2011

    பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி பெற...



    பெற்றோர்களின் வாழ்வில் பிரச்சினை என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சினைகளை சந்திக்கின்றனர். சுருக்கமாகச் சொன்னால் பிரச்சினை இல்லாத மனிதனே இல்லை. மனைவி அல்லது குழந்தையோடு பிரச்சினை, கல்வியறிவில்லை, உடல்நலம் இல்லை, குண்டாக இருக்கிறேன், கல்யாணம் ஆகவில்லை, சொந்த வீடு இல்லை, பணமில்லை, கார் இல்லை, அலுவலக பிரச்சினை என பிரச்சனைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இந்த மாதிரியான பிரச்சினைகளை எல்லாம் எதிர்கொண்டு வெற்றி பெற சில யோசனைகள்.
    • ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு முடிவு உண்டு. பிரச்சினைகள் எப்போதும் நிரந்தரமாக இருக்கப் போவது இல்லை என்பதை நீங்கள் முதலில் உணர வேண்டும்.
    • உலகத்தில் உள்ள மக்கள் எல்லோருக்கும் ஏதாவது ஒரு பிரச்சினை இருக்கிறது. நான் மட்டும் தான் எல்லாவித பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறேன் என்று எண்ணாதீர்கள். பில்கேட்ஸ் முதல் பிச்சைக்காரர்கள் வரைக்கும் பிரச்சினை என்பது எல்லோரிடமும் தான் இருக்கிறது. 
    • நீங்கள் சந்திக்கும் பிரச்சினை ஒன்றும் புதிதாக இருக்கப் போவதில்லை. உங்களைப் போன்ற ஒருவர் தான், இதே போன்ற பிரச்சினையை சமாளித்து ஜெயித்திருக்கிறார். அதனால் தன்னம்பிக்கையோடு செயல்பட்டு பிரச்சினையை முறியடியுங்கள்.
    • ஒவ்வொரு பிரச்சினையும் உங்களுக்கு புதிய வழிகளையும், புதிய பாடத்தையும் கற்றுக் கொடுக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
    • பிரச்சினைகளை சமாளித்து வெற்றி பெறும் போது, உங்களுக்கு ஆதாயம் தான் கிடைக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
    • பிரச்சினைகளை சமாளிப்பதற்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன. அதை மட்டும் தான் நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். எதிர்மறையாக சிந்திக்காதீர்கள்.
    • இறுதியாக, பிரச்சினை என்கிற வார்த்தையே நாம் பார்க்கும்கோணத்தில் தான் இருக்கிறது. அதனால், பிரச்சினைகளை எவ்வித பதட்டமில்லாமல்அமைதியான மன நிலையில் அணுகி வெற்றி பெறுங்கள்.


    இன்னும் வளரும்

    No comments:

    Post a Comment

    பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.