• Breaking News

  August 28, 2011

  நாளை நம் குழந்தைகளும் சாதிக்க...

  வணக்கம் பெற்றோர்களே.என்ன உங்கள் குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பிற்கான பரிசை கொடுத்துவிட்டீர்களா? வாருங்கள் இன்று நம் குழந்தைகளும் நாளைய உலகத்தில் சாதிக்க நாம் என்ன செய்யவேண்டும் என்பதை பார்ப்போம்.
  ஒரு குழந்தைக்கு, தன்னைப் பற்றிய அபிப்ராயமும், தன் தகுதிகள் குறித்த அறிமுகமும் பெற்றோர்களின் பாராட்டிலிருந்தோ கண்டிப்பில் இருந்தோ பிறக்கிறது. சின்னத்தவறொன்றுக்குஅதை செய்வியா? இதை செய்வியா?என்று தலையில் குட்டு வாங்கும்போது குட்டு, தலையில் பதிகிறது. ஆனால் தான் எதற்கும் லாயக்கில்லை என்கிற எண்ணம் மூளையில் பதிகிறது. அக்கறையாலும் அன்பாலும், குழந்தை திருந்த வேண்டும் என்ற தவிப்பிலும்தான் எல்லாப் பெற்றோரும் கண்டிக்கிறோம். ஆனால் குழந்தைகள் மனதில் என்ன பதிவை விடுகிறோம் என்பதுதான் முக்கியம்

  .


  தாங்கள் பிறந்து வளர்ந்த குடும்பம்பாரம்பரியம் குறித்தெல்லாம் குழந்தைகள் தெரிந்து கொள்வது முக்கியம். தாத்தா பாட்டி அவர்களுக்கும் முந்தைய தலைமுறை- அவர்கள் செய்துவந்த தொழில்அவர்களுடைய ஆளுமைஅவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் போன்றவை குறித்தெல்லாம் குழந்தைகளுக்கு உற்சாகமாக சொல்லுங்கள். தன்னுடைய பரம்பரை குறித்த அறிவு மனதுக்குள் மிகுந்த நம்பிக்கைய வளர்க்கும். ஒரு வேளை முன்னோர்கள் சிரமப்பட்டு உயர்ந்திருந்தால்கூட அவர்கள் கதையே ஒரு முன்னுதாரணமாய் அந்த இளம் இதயங்களில் நிலைக்கும். கடந்த கால உறவுகள் பற்றிய தகவல்களும், நிகழ்கால உறவுகள் உடனான நேரடி அறிமுகமும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். “எங்கே சார்! உறவுகள் வந்தால் ஓடி ஒளிந்து கொள்கிறார்கள்!” என்று நீங்கள் கேட்கலாம்.

  குழந்தைகள், தங்களை உரிய மன முதிர்ச்சியுடன் நடத்த வேண்டும் என்று ஓரளவு விவரம் வந்த பிறகு விரும்புவது இயற்கை. இது நியாயமும் கூட. நாம் பச்சைக் குழந்தைகளைக் கொஞ்சும்போது அவர்கள் மொழியில் பேச ஆசைப்பட்டுஅப்புக்கண்ணா! புஜ்ஜுக்குட்டிஎன்று கொஞ்சுகிறோம். கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளிடம் நாம் பெரியவர்கள் என்ற வீராப்பைக் காண்பிக்கப் படாதபாடுபடுவோம்.

  குழந்தைகளிடம் இயல்பாக, இனிமையாக நீங்கள் விருந்தினர்கள் முன்னிலையில் நடந்து கொண்டால் விருந்தினர்களும் அதுபோல் நடந்து கொள்வார்கள். வீட்டுக்கு வருபவர்கள் பலரும், ஏதோ விசாரணைக் கமிஷன் நீதிபதிகள் போல் குழந்தைகளிடம் பரீட்சை பற்றியும் மதிப்பெண் பற்றியும் மட்டுமே கேட்பார்கள். இவை தவிர குழந்தைகளின் உலகத்தில் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. எனவே குழந்தைகளை இயல்பாக நடத்துங்கள். விருந்தினர்களும் அப்படியே நடந்து கொள்வார்கள்.பகலில், என்ன விஷயமாக நீங்கள் பிள்ளைகளைக் கண்டித்திருந்தாலும் சரி, இரவு உறங்கப் போகும் முன்னால், அந்தக் குற்றவுணர்வை மாற்றிவிடுங்கள். சிரித்துப் பேசியோ, சினிமா போன்ற விஷயங்கள் குறித்து ஜாலியான ஒரு விவாதத்தை நடத்தியோ பிள்ளைகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வாருங்கள்.

  சுதந்திரம் குழந்தைகளுக்கு சரியாக வழங்கப்படும்போது அதுவே சுய கட்டுப்பாட்டையும் உருவாக்கிவிடும். விளையாட்டுக்கான நேரம் படிப்புக்கான நேரம் என்பதில் பல பெற்றோர்கள் தவறு செய்வார்கள். மாலை ஐந்து முதல் ஆறு, விளையாட்டுக்கான நேரம் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஐந்து மணிக்கு விளையாடப் போகும்போதேஆறு மணிக்குப் படிக்க வரணும்! தெரியுமில்லேஎன்று பயமுறுத்தி அனுப்பினால், ஆறுமணிக்கு வருவதை ஆனவரை தள்ளிப் போடவே குழந்தைகள் விரும்பும். படிப்பைப் போலவே மற்ற திறமைகளும் முக்கியம் என்பதைப் பெற்றோர்கள் உணர்ந்து கொள்வதும், உணர்த்துவதும் முக்கியம். 

  சின்னச் சின்ன அக்கறையிலேயே குழந்தைகள் மகிழ்ந்துவிடுவார்கள். வெளியே சொல்ல மாட்டார்களாக இருக்கும். ஆனால் மனதுக்குள்ளே மகிழ்வார்கள். தங்களைத் தாங்களே திருத்திக் கொள்வார்கள். உங்கள் எதிர்பார்ப்பில் இருக்கிற நியாயத்தைப் புரிந்துகொண்டு தங்களை சீரமைத்துக் கொள்வார்கள்.

   நண்பர்களே இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளியுங்கள்.

  2 comments:

  1. நல்ல பதிவு வாழ்த்துகள்.
   வேதா. இலங்காதிலகம்.

   ReplyDelete
  2. @ kovaikkavi

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி...

   நட்புடன்
   சம்பத்குமார்

   ReplyDelete

  பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.