• Breaking News

    August 28, 2011

    ஆங்கிலப் பள்ளி..


    கற்றை கற்றையாய் பணம் தரும்
    பெற்றோர்களையும்
    எல்லையின்றி படிக்க வைக்கும்
    தொ(ல்)லை தூரக் கல்வி!
      
    சும்மா இருக்கும்
    அம்மாக்களை
    மாலைநேர ஆசிரியர்களாக்கும்
    வேலை வாய்ப்பு அலுவலகம்!



    கணம் தோறும்
    பண அறுவடையில்
    முன்னிலை வகிக்கும்
    கான்கிரீட் வயல்!

    நொறுக்குத் தீனிக்கு
    செறுக்கு உண்டாக்கிய
    பாலகர் வெறுக்கும்
    பலகார பண்டகசாலை!

    குட்டி வாகனத்தில்
    சுட்டிக் குழந்தைகளை அடைத்து,
    சுலபமாய் வலம்வர வைக்கும்
    உலக மகா சர்க்கஸ்!

    வாட்டும் சூரியன் வதைத்தாலும்
    கோட்டு,சூட்டு,டை.ஷு மாட்டிவிட்டு
    மழலைகளை அழ(கூட்டி) விடும்
    குழந்தைகள் அழகு நிலையம்!

    நண்பர்களே இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளியுங்கள்.

    8 comments:

    1. அருமையா இருக்கு! அர்த்தமாவும் இருக்கு!
      கணம் தோறும்
      பண அறுவடையில்
      முன்னிலை வகிக்கும்
      கான்கிரீட் வயல்! இந்த வரிகள் சூப்பர்

      ReplyDelete
    2. மிக அழகாக சமூகத்தைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள்..

      ReplyDelete
    3. @ thalir

      //அருமையா இருக்கு! அர்த்தமாவும் இருக்கு!
      கணம் தோறும்
      பண அறுவடையில்
      முன்னிலை வகிக்கும்
      கான்கிரீட் வயல்! இந்த வரிகள் சூப்பர் //

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    4. @ முனைவர்.இரா.குணசீலன்

      மிக்க நன்றி நண்பரே..

      மீண்டும் வருக...

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    5. நல்ல அருமையான பதிவு நண்பரே..,

      ReplyDelete
    6. ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்கும் ஆள் கூட
      தேக்கு விற்பான்


      nice
      ur blog very useful

      ReplyDelete
    7. @ ராஜா MVS

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே...

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    8. @ karurkirukkan

      //ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்கும் ஆள் கூட
      தேக்கு விற்பான்
      nice
      ur blog very useful //

      மிக்க நன்றி நண்பரே...

      மீண்டும் வருக..

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete

    பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.