• Breaking News

    August 17, 2011

    காலை நேர டென்ஷனை களைவது எப்படி ?

    பொழுது விடிந்ததுமே குழந்தைகளின் முதல் வேலை படுக்கையிலிருந்து எழ அடம் பிடிப்பதுதான். அப்பா (அம்மா) ப்ளீஸ் 10 நிமிடம் என எழுந்திருக்கும் நேரத்தை நீட்டித்தபடி இருப்பது. இன்னும் சிலர் பதிலே பேசாத மவுனச் சாமியார்களாய் ஆழ்ந்த நித்திரையில் இருந்து பெற்றோர்களின் டென்ஷனை இரண்டு மடங்காக்கி விடுவார்கள்.சிலர் அப்படியே எழுந்து விட்டாலும் படுக்கையில் உட்காந்தே தூங்குவது, இன்னுமா எழுந்திருக்கல என்ற சத்தம் வந்ததும் நடந்து கொண்டே தூங்குவது, என் பொறுமையை சோதிக்காதே என்று அறிவிப்பு வரும் வரை தூங்கிக் கொண்டே இருப்பார்கள்.இந்த காலைநேர டென்ஷன் களைவதற்கு என்ன வழி ?.  

         

    காலை நேரம் டென்ஷனானதுதான். ஆனால் அதற்காக புலம்பாதீர்கள்.இந்த டென்ஷன் யாரால் வருகிறது?  8 மணிக்கு பள்ளி வேன் வருவதற்குள் குழந்தைகளை கிளப்பிவிட வேண்டும். இல்லாவிட்டால் பள்ளிக்கு மட்டம் போட்டு விடுவார்கள் என்று நாம் அதிகம் பதட்டமடைவதால்தான். இதன் விளைவு புலம்ப ஆரம்பித்து விடுகிறோம்.இதற்கு மாற்றாக குழந்தைகளிடம் காலையில் அவர்களை பள்ளிக்கு தயார் செய்யும் நேரம்தான் உங்களுக்கு மகிழ்ச்சியான நேரம் என்பதை தெரியப்படுத்துங்கள்.

    குழந்தைகள் காலையில் சீக்கிரம் எழுந்தாலே எல்லா வேலைகளும் சீக்கிரம் முடிந்து விடும். குழந்தைகள் இரவில் சீக்கிரம் படுக்காமல் காலையில் நேரத்திற்கு எழமுடியாது. சிலசமயம் அதிக இரவு உணவினாலும் எழ முடியாமல் போகிறது. ண்றாக சாப்பிடுவது என்பது அதிகமாய் சாப்பிடுவது என்று தவறாகப் புரிந்து கொண்டு பெற்றோர்கள் வற்புறுத்தி அதிக உணவை தந்து சாப்பிட வைப்பதாலும் தாமதமாய் நேரம் தவறி சாப்பிடுவதாலும் செரிமானம் முழுமையாக நடைபெறாமல் எழமுடியாத அளவு அசதியை ஏற்படுத்தி விடுகிறது.எனவே இரவு உணவு விசயத்தில் கவனம் இருக்கட்டும்.

    அடுத்து குழந்தைகளின் தூங்கும் நேரத்தை முறைப்படுத்துங்கள் இரவு 9-9.30 மணிக்குள் உறங்குவதற்கு பழக்கப் படுத்துங்கள். எதற்காக விரைவாக தூங்க வேண்டுமென்றால், இரவில் 9 மணி முதல் காலை 6 மணி வரை உள்ள நேரத்தில் நம் உடலில் பல வேதியல் மாற்றங்கள நிகழ்கிறது. உடலில் வளர்ச்சி ஏற்படுவதற்கு உதவியாக நாம் தூங்கும் நேரம் மாறுவதால் வேதியல் மாற்றங்கள் முழுமையாக நிகழாமல் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுகிறது

    பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் காலை வேளையில் பிரஷ்ஷை வாயில் வைத்து விட்டு யோசிக்க ஆரம்பித்தால் அதில் ஆழ்ந்து போய் பிரஷ்ஷை அசைக்கவே மறந்து சிலையாகி விடுவார்கள். காரணம் கற்பனையில் மிதப்பது. செய்கிற வேலையில் கவனமில்லாமல் அடுத்து செய்ய வேண்டிய வேலையைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பது.கற்பனையை கலைக்க அவ்வப்போது தம்பி. என்ன செய்யறீங்க? என்ற நினைவூட்டல்  மூலம் செய்யும் செயலில் கவனத்திற்கு அவர்களை கொண்டு வரலாம்.

    காலையில் கிளம்புவது  அவர்கள் வேலை. அதற்கு உற்சாகம் அளிப்பது மட்டுமே நம் வேலை என்று இருக்க வேண்டும். மிகவும் மெதுவாக சாப்பிடுகிறார்கள். என்றால் அவர்களை சரியான நேரத்திற்கு சாப்பிட உற்சாகப்படுத்தினால் போதும். மாறாக நீங்களே ஊட்ட ஆரம்பித்தால் அவர்களுக்கு நாமாக கிளம்ப வேண்டியதில்லை. நாம் எவ்வளவு மெதுவாகச் செய்தாலும் அம்மா கிளப்பிவிடுவார்கள் என்றாகி விடும்.காலை வேளையில் மட்டும் பிடித்தமான உணவு வகைகள் கொடுப்பதன் மூலம் அதிக நேரம் எடுப்பதை தவிர்க்கலாம்.

    காலையில் குறுகிய நேரத்தில் அதிக வேலைகள் இருப்பதால் அடுத்த நாள் வேலைகளை இரண்டாகப் பிரித்து முதல் நாளே செய்து வைத்து விடக்கூடிய வேலைகளை முடித்து விடுவீர்கள்தானே. அதே போல ஹோம் ஒர்க் செய்யாமல் படுக்கக்கூடாது என்பதையும் எடுத்து கூறுங்கள். இதனால் ஸ்கூல் கிளம்பும் போது ஹோம்-ஒர்க் எழுதிக் கொண்டு இருந்து சாப்பிடாமல் உங்களை டென்ஷன் படுத்தமாட்டார்கள்.

    மாலையில் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலை அவர்களை விட்டே எழுத வையுங்கள். அதை அவர்களின் அறையில் ஒட்டச் செய்யுங்கள்.இதோ சில யோசனைகள்...
    1. பள்ளியிலிருந்து வந்ததும் முகம் கை கழுவுதல்
    2. அரை மணி நேரம் விளையாட்டு
    3. ஹோம் ஒர்க் செய்து முடித்தல்
    4. கையெழுத்து வாங்குதல்
    5. யூனிபார்ம் எடுத்து வைத்தல்
    6. மறுநாள் பள்ளிக்குத்தேவையானதை டைம் டேபிள் படி எடுத்து வை என எழுதி
    அவர்கள் கண்ணில் படும் இடத்தில் ஒட்டி வையுங்கள்.நாள் வளர வளர அவர்களாகவே வேலைகளை மிகுந்த ஈடுபாட்டோடு செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.பெற்றோருக்கும் சிறிது டென்ஷன் குறையும்.

    No comments:

    Post a Comment

    பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.